Thursday, February 24, 2005

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!!

கிரண் டீ.வி, ன்னா எல்லாருக்கும் தெரியுமில்லீங்களா?? நம்ம SCVமாதிரி மழையாளத்துல சன்.டீ.விக்காரங்க புதுசா ஆரம்பிச்சிருக்காங்க, இங்க மாதிரியே போன்ல பேசிட்டு பாட்டு போடுற சேனல்ங்க, அதுல தினமும் ராத்திரி 8.00 மனிக்கு ஒரு படம் போடுவாங்க, இப்பத்தான் ஆரம்பிச்ச சேனலாச்சுங்களா, அதுனால விளம்பரம் அதிகமா இல்லீங்க, சரி அந்த சேனலுக்கு இப்போ என்னங்கரீங்களா?,
அதுக்கெல்லாம் ஒன்னுமில்லீங்க,
நேத்து அந்த டீவியில 'மழ'ன்னு ஒரு படம் போடாங்க, ஏற்கனவே அந்த படம் பத்தி கேள்விபட்டிருக்கேன், 'எதோ ஒரு நாவல்ல இருந்து எடுத்த நல்ல படம்னு'.. என்னடா இவன் நாவல், மழையாளப்படம்ன்னு பேசறான்னு பயந்துராதீங்க, அப்படியெல்லாம் நான் எதும் இலக்கியம் பத்தியெல்லாம் பேசிரமாட்டேன், அதுக்கெல்லாம் வேற ஆளுக இருக்காங்க,
(நிஜம்மாலுமே நல்ல படம்ஙக, படத்தை பத்தி தெரிஞ்சுக்கனும்னா நம்ம KVராஜா, இல்ல ரா.சு'கிட்ட கேட்டுக்கோங்க)
சரி.. நீ என்ன சொல்ல வந்தேங்கரீங்க, சொல்றேன் அதுக்குள்ளார எதுக்கு அவசரப்படுரீங்க.. அந்த படத்துல நம்ம 'சம்யுக்த வர்மா' ஸ்கூல் பொண்ணாவும், அப்புறம் டாக்டராவும் வர்றாங்க.
அங்கதான் நமக்கு 'ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! '....
4-5 வருஷம் முன்னாடி, சென்னை மாநகரத்துல சாப்பிட்டுவர்ற இன்ஜினியரா, கம்பியோட்டுர துறையில வேலைபார்த்துட்டு சுத்திட்டு இருந்த காலத்துல இப்படித்தான், மகாலிங்கபுரம், ஐயப்பன் கோவில் பக்கம் ஒரு பொண்ணு தினமும், காலையில வெள்ளை கோட்டு எடுத்துகிட்டு, MMCக்கு போகும்ங்க. அடிக்கடி அந்த ரோட்டுல இருக்கிற ATMல நம்மள பார்த்து பார்த்து, நம்மள பார்த்தா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போகும். நமக்கும் பொதுவா இந்த காதல் கத்திரிக்காய்ல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னாலும், அதென்னவோ ஒரு.. இது.. .
நம்ம எதோ நல்ல சம்பளம் வாங்கிட்டு சொகுசா வேலை பார்த்தாலும், ஆள பார்த்தா எதோ அடிதடி ப்ண்ணுர ஆளு மாதிரிதாங்க இருக்கும், ஜீன்ஸ் பேண்டுக்கு மேல, காட்டன் சர்ட் போட்டுகிட்டு, கைய முழங்கை வரைக்கும் மடிச்சுவிட்டுகிட்டு, 2 பட்டன் போடாம, எப்பவும் நாலு நாள் தாடியோட, புகை கக்குற ஒரு KB'ல கம்பியோட்டர் ஆபீஸ் போயிட்டைருந்த ஒரே ஆளு நான் தான்ங்க, அப்படி ஒருத்தன பார்த்து ஒரு பொண்ணு சிரிச்சுட்டு போகுது, .. நமக்கு இந்த காதல் கீதல்ல எல்லாம் ஈடுபாடு இல்லைன்னாலும், அந்த medico கொஞ்சம் கலக்கிருச்சுங்க, எப்படியாவது ஒரு ரிலேஷன்ஷிப் டெவலப் பண்ணிகனும்னு மனசுக்குள்ள ஒரு , ஆனா சும்மா போய் எதாவது வழிஞ்சு வச்சுடவும் கூடதுன்னு ரொம்ப யோசிச்சு, கடைசியில ஒரு ஐடியா செஞ்சனுங்க.
அந்த ATM பக்கம் போகும் போதெல்லாம் (நமக்கு தான் பார்ட்டி எந்த நேரத்துல வரும்னு தெரியுமாச்சே) erichsegal's DOCTORSஅ கையில எடுத்துகிட்டு போக ஆரம்பிச்சசேன். சிரிச்சுட்டு போற பொண்ணுகிட்ட, சீரியசா மூஞ்சிய வச்சுகிட்டு, 'ஹலோ!, ஐயம் ராசா'ன்னு ஆரம்பிச்சு, அப்படியே அந்த நாவல்ல வர்ற வியாதிக்கு அர்த்தம் கேக்க ஆரம்பிச்சு..ம்..ம்.. கொஞ்சம் கொஞ்சமா,.. சேகுவேரா மாதிரி, அழுக்கு துணியும் தாடியுமா திரிஞ்சுட்டு இருந்தவன், தினமும் ஷேவ் பண்ணி, ப்ளைன் ஷர்ட் போட்டு டக் பண்ணி, ஒரு லெவலுக்கு சுத்திட்டு இருந்தனுங்க... எல்லாம் கொஞ்ச நாள் தான், மூனு மாசத்துல பழையபடி தாடிக்கு திரும்பிட்டனுங்க,..
இப்ப எதுக்குடா அந்த கதைங்கரீங்களா..?? சும்மா, 'சம்யுக்தவர்மா'வ டாக்டரா பார்த்துட்டு, அடுத்த சேனல் பக்கம் திருப்பினா அங்க 'அவள் ஒரு நவரச நாடகம்... ஆனந்த கவிதைகள் ஆயிரம்'ன்னு SPB வாய்ஸ்ல MGR பாட்டு,... கொஞ்ச நேரம் பழைய நினைப்பு வந்திருச்சு... அதான் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!!

('என்னடா, எதோ ஒரு பெரிய காதல் கதை சொல்லப்போறன்னு நினைச்சா, இப்படி அந்தரத்துல முடிச்சுட்டான்னு நினைக்காதீங்க, அய்யா சாமி, நமக்கு கதை, கவிதை எழுதற அளவுக்கெல்லாம் பத்தாதுங்க, சும்மா.. எதோ, தனியா புலம்பிட்டு இருக்கனுங்க, அவ்வளவுதான், ')

2 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

மழை....ஹ்ம்ம்ம் ..இந்தப் படத்தப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். ஷ்ரேயான்னு ஒரு நடிகை இருக்கிறதே கொஞ்ச நாளாத்தான் தெரியும்.ஏற்கெனவே என் உண்மையான பெயர் ஊர்ல 30- 40% பெண்களுக்கு இருக்குன்னு நொந்து போய் ஆசையா "ஷ்ரேயா" என்று தேர்ந்தெடுத்து நானே சூட்டிக்கொண்டிருக்கிறேன். இதுல அவங்க நடிச்சு "மழை" படம் வெளிவருதாம். என்ன பொருத்தம் பாத்திங்களா! எங்க போய் சொல்ல!!! :o(

ILA (a) இளா said...

Romba the Kusumbaiya umakku, etho ethirpartha ippadi pooduche :(