ஏற்க்கனவே இந்த வாரக்கடைசிக்காக ரெண்டு நாள் ஆழப்புழாவுல படகுவீட்டுல மிதந்துட்டே அவுங்க ஊரு கலயங்கள்ல சுத்தி வந்ததுலயே கொஞ்சம் மனசு ஒரு மாதிரித்தான் இருந்துச்சுங்க, அதே பாதிப்புல, ஊருக்குள்ள கனாகணடேன் பட போஸ்ட்ர்ல நம்ம கோபிகாவோட தாவாக்கொட்டை கடிய பார்த்ததும் டக்குன்னு நேத்து ராத்திரியாட்டம் போயிடரதுன்னு முடிவு செஞ்சு போயிட்டு வந்தாச்சுங்க |
 |
 |
சரி காமிராக்காரர் KV ஆனந்த் டைரக்டரா அவதாரம் எடுத்திருக்கிற படம், அதுவும் அந்த 'சின்னசின்ன சிகரம் காட்டி'ங்கிற பாட்டு எடுத்தத பத்தி அவர் குடுத்த பேட்டி, அந்த போட்டோக்கள், எல்லாமே சேர்ந்து கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு கூடவே இருந்துச்சு. படன் அந்த அளவுக்கு இருந்துச்சா, இல்லையாங்கிற சமாச்சாரத்துக்கு நான் வரலைங்க.. விமர்சனம் செய்யிற அளவுக்கு நான் இன்னும் வரலை, அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம், அந்த் பாட்டை பத்தி மட்டும் பேசுவோம். |
புருஷங்காரன் போலீஸுக்கு போன் போட்டு இங்க ஒரு பொண்ண ரேப் பண்ணிட்டாங்க, அதுக்கு இவ்ளோ எடத்துல கீரல், இவ்ளோ எடத்துல பல்லு பதிஞ்சிருக்கு, அப்படின்னு சம்சாரத்த கலாய்ச்சுட்டு அப்படியே இந்த பாட்டுக்கு போகுது சீன். சூப்பரான லொகேஷன், கல்குவாரியில தண்ணி நிக்கும்போது எடுத்திருக்காங்க, காஸ்ட்யூம் கூட ரொம்ப ஆடம்பரமா இல்லாம அப்படியே கொஞ்சம் இதமான எலுமிச்சை/ஆலிவ் கலர்ல.. திப்பு'வும் சுனிதாவும் வைரமுத்துவோட, அதென்ன சொல்றது..??..ம்ம்.. காதல் ரசம் வழியும் வரிகளுக்கும், வித்யாசாகரோட மென்மையான இசைக்கும் உயிர் குடுத்து பாடியிருக்காங்க. பாட்டு எடுத்த விதத்துல தான் விஷயம். அப்படியே கொஞ்சம் வேகமா, கொஞ்சம் மெதுவா'ன்னு எல்லா காதல் பாட்டுகள் மாதிரி தான் எடுத்திருக்காங்க, ஆனா நடுவால இந்த குரூப்டான்ஸ் விஷயத்துல தான் நமக்கு 'போங்கடா'ன்னு ஆயிடுச்சு.. அப்படி என்னங்கரீங்களா??.. இவுங்க ரெண்டு பேரும் ஆடும் போது பின்னாடி 15 பேரை ஆட விட்டிருக்கலாம் அது தப்பில்லை, அது எல்லா படத்துலயும் நடக்கிறது தான், ஆனா இதுல தமாசு செய்ய்றேன்னு, பொம்பிளைகள போலீஸ் டிரஸ்ல ஆடவிட்டிருக்காங்க, அதுகூட விட்டராலாம், அதுக்கு தலைவியா ஒரு அம்மா, நல்லா தடியா, இவுங்கள புடிக்கிற மாதிரி கிட்ட வரதும், வந்து நல்லா வாய் நிறையா எதாவது அமுக்கிட்டி சாப்பிடறதும், அப்புறம் இவுங்கள புடிக்காம வயத்து புடிச்சுட்டு மறைவுக்கு போறதும் அப்புறம் மறுபடியும் வந்து, மறுபடியும் அதே.., சாப்பிடுறது, கலக்குறது, ஓடுறது.. இதுக்கு நடுவால இவுங்களோட காதல் பாட்டு.. யேய்!!!... சூப்பரான பாட்டு, சூப்பரான ஜோடி ஒரு 'வசீகரா' மாதிரி வர வேண்டிய பாட்ட இப்படி கக்கூஸ் ரேஞ்சுக்கு எடுக்க எப்படித்தான் இவுங்களுக்கு தோனுச்சோ.. அடப்போங்கப்பா. எனக்கு, எங்கூட ஹைஸ்கூல்ல படிச்ச 'தாந்தின்னி'ரங்கநாதன் தான் ஞாபகத்துக்கு வந்தான், அவன் தான் ஸ்கூல் இண்ட்ரவல்ல சாப்பிட கொண்டு வந்தத, யாருக்கும் தெரியாம வாஷ்ரூம்ல போயி சாப்பிட்டுட்டு வருவான், எப்படிரா அங்க போயி சாப்பிடரான்னு அப்ப ரொம்ப ஆச்சிரியபட்டேன்..!! இப்பவும்.. :-) |
 |
ஆனா ப்ரித்விராஜ் தெரியும்ங்களா..?? மலையாள நடிகர், அவரோட 'வெள்ளித்திர' படம் ஏற்கனவே பார்த்திருக்கேன், அதுல ரஜினி ரசிகரா 'ஸ்டைல்ராஜ்'ன்னு பேருவச்சுகிட்டு வந்து கலக்குவாரு, அவர் தான் படத்துல வில்லன்.. சூப்பரா செஞ்சிருக்கார், அந்த ஒரு கேரக்டர உருவாக்கினதுக்காக 'ஆனந்த்'க்கு ஒரு 'ஜே' போடலாம்.. சும்மா இழைச்சு எடுத்திருக்காரு.. மூன்று முடிச்சு 'ரஜினி' மாதிரி ஒரு கேரக்டர்.. சரணோட 'இதயத்திருடன்' படத்துலயும் இதே மாதிரி நெகட்டிவ் ரோல் செய்ய்றாராம், பார்ப்போம், சமீபமா, இவரோட மழையாள படமெல்லால் ஊத்திகிச்சுனாங்க, தமிழ் ஒரு வேளை கைகுடுக்கலாம், சாத்தியம் நிறையாவே இருக்கு.. |
அந்த ஒரு பாட்டு எடுத்த விஷயத்துல நமக்கு ஏனோ படத்துல பெரிய ஈடுபாடு இல்லாம போச்சு..
கடல் தண்ணிய குடிதண்ணியா மாத்தறது, சின்ன வயசுல சொல்லாத காதல், கல்யாணத்த நிறுத்தறதுக்காக பொண்ணொட அம்மாவே பொண்ணை அவ நண்பன் கூட அனுப்பிச்சு வைக்கிறதுன்னு, இன்னும் படத்துல நிறையா இருக்குதுங்க.. ஆனாலும் அந்த பாட்டு மேட்டர் நமக்கு ஜீரணமே ஆகலைங்க... படத்துல ப்ரித்வியோட 'மதன்' கேரக்டர் அடிக்கடி சொல்ற மாதிரி.. "c'mon man.. !.. Gimme a break ..!! it hurts..!!"
|
------
# 87
7 comments:
//ஆழப்புழா//
இந்தப் படத்தப் போடுங்க, மத்த படமெல்லாம் கிடக்கட்டும்!
அருமையான பாடல் காட்சி விமர்சனம்
மின்னலே 'வசீகரா' பாடலும் சில காட்சிகளால் கெட்டு விட்டது... குறிப்பா, ரீமாவின் pole dance, like a bar girl
நானும் தியேட்டர்ல பார்க்கலாம்னு நெனச்சுருக்கிறேன்... பார்க்கலாம்...
// 'சின்னசின்ன சிகரம் காட்டி'ங்கிற
இன்னிக்கு காலைல சன் டிவி விளம்பரத்துல:
சின்னச் சின்ன அதரங்கள் காட்டி...ன்னு வந்துச்சு, படத்துல எப்படி!?
(ஆனா இது உண்மையில்லதான...:)
ஆழப்புழா...
அதிரப்பள்ளி...
வெள்ளித்திர...
ப்ருத்விராஜ்...
கேரளம்...
மலையாள வாடை தூக்கலா இருக்கே. கோயம்புத்தூருல நெறய மலையாளிகள் உண்டுன்னு நெனக்கிறேன். ஓணம் பண்டிகை கூட கோவை college-கள்ல விமர்சையா கொண்டாடுனதா tv யில பாத்ததா ஒரு ஓர்மை எனிக்கு, பட்சே ஒரப்பாயிட்டு அறியில்ல.
கோபிகான்னா சின்ன சின்ன .... தான்
காவ்யா மாதவன் -ன்னா தான் வல்ய வல்ய...
I mean கன்னங்கள் ;-)
இந்த பாட்டை சன் டிவி பாடல் தொகுப்புலேயே பார்த்தேன். ஏற்கனவே ஸ்ரீகாந்தை பார்க்க சகிக்காது இந்த லட்சணத்தில் அந்த நடிகையின் மேல் எங்கெங்கோ கை வைத்து அருவருப்பை மூட்டிக் கொண்டிருந்தார். மிட்நைட் மசாலா ரேஞ்சுக்கு தான் இருந்தது.
குண்டு பெண் போலீஸ் திங்கிறதுக்கு Burger-ம்,Hot Dog-ம் தான் வேணுமோ. அதுவுமில்லாம குரூப் டான்ஸர்ஸ் போட்டு வரும் போலீஸ் டிரெஸ் எல்லாமே மேல்நாட்டு போலீஸ் போட்டு வரும் ட்ரெஸ்கள் தான். என்ன கண்றாவியோ என்று வெளியில் சொல்லி விட்டு மனசுக்குள் ரசித்தேன் அந்த பாடலை :-))
சுந்தரவடிவேல்>> ஒரு பதினஞ்சு நாள் ஊருல இல்லீங்க.. வெளியூர்ல இருக்கேன் இப்போ.. ஊருக்கு போனதும் அழப்புழா படத்தை போட்டுடலாம்ங்க..
நன்றி ராம், அன்பு..
ஞானபீடம்>>> நான் பொள்ளாச்சிகாரனுங்க, நம்மூர்ல இருந்து 11 கி.மி'ல கேரளா வந்திருதுங்க.. நமக்கும் கேரளாவுல தோட்டமெல்லாம் உண்டுங்களா.. அதான் கொஞ்சம் மலையாள வாசனை...
//I mean கன்னங்கள் ;-)
அப்படிங்களா.. நான் கூட நீங்க கண்ணை சொல்ரீங்களோன்னு நினைச்சேன்.. ;-)
//மனசுக்குள் ரசித்தேன் அந்த பாடலை :-))
படத்தோட பார்க்கும்போதுதான் கடுப்பாயிருச்சு, டி.வி.யில சுமார இருந்துச்சுங்க விஜய்..
Nice Blog you have Gentleman. I have almost read all your archives and I find that you are simply great in presenting issues with humor.
Cheers
TCD
Post a Comment