Friday, September 9, 2005

ஓரு கல்லுரியின் (வெட்டி) கதை..




அஞ்சு வருஷமா, ஒரே இடத்துல சிக்கிட்ட கேசட் மாதிரி, மனநிலை பாதிக்கப்பட்டு தவிக்கிற நண்பனுக்காக, அவன் காலேஜ்ல படிச்ச அத்தனை பேரும் சேர்ந்து மறுபடியும் ஒரு சூழல் உருவாக்கி, அதே மாதிரி காலேஜ், அதே பசங்க, அதே கலாட்டா, அதே சண்டை, அதே காதல்'ன்னு கேசட் ரீவைண்ட் செய்யிற மாதிரி செஞ்சு, அவனை குணமாக்கிற கதை.. ம்ம்.. இப்படி ரெண்டு வரியில சொல்லும் போது நல்லாத்தான் இருக்கு.. ஆனா தியேட்டர்ல உக்கார முடியலையே சாமி..
யுவன், நா.முத்துகுமார்'ன்னு ஆசைபட்டு மழையில இந்த படத்துக்கு போனதுக்கு பதிலா பேசாம வீட்டுல உக்காந்து மொட்டை ஆட்டத்தை பார்த்திருக்கலாம்.



தல செமியில நுழைஞ்சுட்டாரு.. என்ன வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்..!! ஒரு வேளை ஸ்டெபியக்காவோட பலத்துல பாதிய வாங்கிட்டு ஆடுறாரோ என்னவோ.. எப்படியாவது இந்த தடவை ஜெயிச்சுட்டு ரிடையர் ஆகலாம்னு இருப்பரு போல.. செமி'யில 'ரோபி'தான்.. பைனல்ஸ்ல தான் இருக்கு.. ம்ம்.. பார்ப்போம்

--
#120

9 comments:

ஜெகதீஸ்வரன் said...

நல்ல வேளை !! இந்த வாரயிறுதியில் இந்தப் படம் பார்க்கலாம்னு இருந்தோம்.... தப்பிச்சோம்...

Anonymous said...

vanga rasaa..enga poiteenga ivolo nallla..onka site patthu pathu kannu valzhi vanthuduchu... adikadi yeluthunga..


--jagan

குழலி / Kuzhali said...

அய்யய்ய என்ன இப்பிடி சொல்லிபுட்டிங்க, படம் நல்லா கீது னு ஒருத்தன் சொன்னானே! சரி எதுக்கும் பார்த்துடுவோம்.

யெய்யா ராசா ஏகப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் போல கீது உங்க ப்ளாக்ல, லோட் ஆக நெறய டைம் ஆகுது, கொஞ்சம் எதுனா பார்த்து செய்றது, சோத்தாங்கை பக்கத்துல நியோ கவுண்டர் ல visitors to the date அந்த ஸ்கிரிப்ட் தான் லோட் ஆகச்சொல்ல பேஜார் பண்ணுது தல.

வரட்டா

தருமி said...

அடடே! நம்ம ஊரில டென்னிஸ் பாக்கக்கூட ஆளுக இருக்காகளா, என்ன? எல்லாமே மட்டையடி ஆளுக மட்டும்தான இருப்பாக. சந்தோசமுங்க, என்ன மாதிர் இன்னொரு சீவன பாக்கிறது.

இல்லீங்கப்பு..என்னதான் மொட்டை எப்போதும் பிடிக்கும்னாலும் இந்த தடவை ப்ளேக் கெலிச்சிரணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்

தருமி said...

அடடே! நம்ம ஊரில டென்னிஸ் பாக்கக்கூட ஆளுக இருக்காகளா, என்ன? எல்லாமே மட்டையடி ஆளுக மட்டும்தான இருப்பாக. சந்தோசமுங்க, என்ன மாதிர் இன்னொரு சீவன பாக்கிறது.

இல்லீங்கப்பு..என்னதான் மொட்டை எப்போதும் பிடிக்கும்னாலும் இந்த தடவை ப்ளேக் கெலிச்சிரணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்

Boston Bala said...

கெட்ட ஆட்டம் போட்டாங்க... என்ன அடுத்த நாள் ஆபீஸ் இருக்கு என்று தெரியாம அர்த்தராத்திரி வரைக்கும் ஆடினாங்க!

வீ. எம் said...

இந்த 'சிக்கிட்ட கேஸட்' படத்தை நான் 1 வாரத்துக்கு முன்னால பார்த்தேன் ராசா..
ஆனா ஓசில... நன்பன் ப்ரிவ்யூ ஷோக்கு டிக்கெட் இருக்கு வாடா போலாம்னு சொன்னான்.. போயிட்டு ..
அடப்பாவமே... என்னத்த சொல்றது..
எதைனு சொல்றது.. படம் பார்த்தப்போ பட்ட அவஸ்தைய விட..
கடைசியா வரும்போது...தயாரிப்பாளர் அண்ணன் வந்து ..படம் எப்படி சார் நல்லா வந்திருக்கானு கேட்டப்போ , என்ன சொல்றதுனு தெரியாம முழித்த அவஸ்தை இருக்கே...
ஒசில டிக்கெட் கொடுத்து..நடுவுல கூல்டிரிங்கஸ், பிஸ்கெட் கொடுத்தவங்க கிட்ட போய் நல்லா இல்லனு சொல்ல முடியுமா??
ஒரு மாதிரி சமாளிச்சு, ஏதோ எனக்கு 2 பாட்டு பிடிச்சிருந்தது.. அதனால.. பாட்டு நல்லா வந்திருக்குனு சொல்லி.. எப்படியோ வீடு வந்தோம்... அப்புறம் அந்த நன்பனுக்கு விட்டேன் பாருங்க டோஸ்... அது தனி கதை

Anonymous said...

padathu peraiyum soneenganna naanga ellam avoid panradhukku vasadhiyaa irukkum.

Pavals said...

ஜெகதீஸ்>> சத்தமா சொல்லாதீங்க, சினிமாகாரங்க யாரும் கேட்டா, எனக்கு தர்ம அடி விழும்..

jagan>> ஆறு நாளா என்னை காணாமா, இவ்வளவு வருத்தமா... ஆஹா.. எல்லாம் என் நேரம்..

குழலி>> உன் பார்வை போலே என் பார்வை இல்லை.. ;-).. அப்புறம் அந்த ஜாவாஸ்கிரிப்ட் சமாச்சரம்... கவனிக்கிறேன்..

தருமி >> இன்னாங்க இப்படி சொல்லிட்டீங்க.. அதுக்கெல்லாம் ஒரு கூட்டமே இருக்கு இங்க..

பிபி >> நான் அடுத்த நாள் க்ளப்'ல ரெக்கார்டட் மேட்ச் தான் பார்த்தேன்.. ;-)

வீ.எம்>> அய்யோ பாவம்.. நான் ஜோடி'ன்னு ஒரு படம் பார்த்துட்டு இதை அவஸ்த்தைய பட்டேன்.. ஏன்னா பிஸ்கட் டீ'க்கு பதிலா கோடம்பாக்கம் நயாகராவுல உக்கார வச்சு, படம் எப்படின்னு கேட்டரு 'ப்ரவீன்காந்த்'.. எதோ அந்த நிலமையிலயும் கடைசி ட்ரெயின் 12.20'க்குன்னு சமாளிச்சு வந்துட்டேன்.. :-(

உமா>> அதான் தலைப்புலயே டைட்டில் குடுஹ்ட்துட்டேனே.. (ஒரு கல்லூரியின் கதை)