
தரையின் ஈரம் நெற்றி வரை சில்லிடுகிறது..
வெண்மேகங்கள் பார்வையை மறைக்கின்றன..
சிறு சத்தமும் எதிரொலியாய் கேட்கிறது..
உலகமே என்னை சுற்றி வருவது போல் இருக்கிறது..
வெளிச்சம் கொஞ்சமாய் கண்ணாமூச்சி காட்டுகிறது..
அருகாமையில் நடக்கும் எதுவும் என்னை கவரவில்லை..
மனது கட்டவிழ்ந்து தொலை தூரம் பறக்கிறது..
'சார் பில் பண்ணிரலாமா!!'
மெதுவா வெள்ளை சட்டையும் கருப்பு 'போ-டை'யும் கட்டிகிட்ட ஆள் வந்து கேட்டதும்தான் தோனுச்சு.. ரொம்ப நாள் கழிச்சு எல்லா பயலும் வந்திருக்காங்கன்னு உக்காந்து.. நாலு ரவுண்ட் ஜாஸ்தியா போயிருச்சு போல.. விடியக்காலையில அஞ்சரைக்கு முகூர்த்தம்.. எவன் எந்திரிக்கலைன்னாலும் நம்ம எப்படியாவது எந்திருச்சு போயிடனும்.. இல்ல, மாப்ள அசிங்கமா திட்டுவான், கிளம்பும் போதே சொல்லியனுப்பிச்சான்.. :-(
--
#122
5 comments:
நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறீங்க ராசா !!!
முதல் பாகத்தை படித்ததும் என்னமோ நினைசேன்(!).
நண்பர் கல்யாணம் jolly தான்.
ராத்திரி சீட்டு கச்சேரி இருந்ததா?
ekandham righttu! Ana.. yean romba ekantham? Thirumbi vandhu ezhudha arambinga raasa.
- karthik
ஜெகதீஸ்வரன>> எத்தினி பேரு இப்படி கிளபம்பியிருக்கீங்க.. நான் பாட்டுக்கு சந்தோஷமா சுத்திட்டு இருக்கேன், அதுல உங்களுக்கு என்னங்க இப்படி ஒரு பொறாமை..
நன்றி.. விமலா__
இளா>> கார்ட்டை கையில அடுக்கி வச்சுகிற அளவுக்கு அன்னைக்கு எவனுக்கும் தெம்பில்லை.. :-(
கார்த்திக்>> ஏகாந்தம் இல்லீங்க.. அது ஒரு சோகக்கதை.. இன்னைக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க..
Post a Comment