Monday, April 24, 2006
விதி வலியது..!!
இந்த விதி விதி'ன்னு ஒரு சமாச்சாரம் சொல்லுவாங்களே, இந்த மோகன், பூர்ணிமா எல்லாம் நடிச்ச 'விதி'யில்லீங்க.. நம்ம கோடு கட்டம் எல்லாம் ஒழுங்குபடுத்தி நம்ம வாழ்க்கைய நிர்ணயம் செய்யுதும்மாபாங்களே, அந்த விதி.. அதை நீங்க நம்பியிருக்கீங்களா?.. நான் பொதுவா யாராவது இதைபத்தியெல்லாம் பேசுனா, அதையெல்லாம் கண்டுக்கறதில்லீங்க.. நம்ம தான் பதிவு எல்லாம் எழுதற அளவுக்கு பெரிய(!) ஆளாயிட்டமில்ல.. இன்னும் அதெல்லாம் நம்பறதா சொல்லிகிட்டு இருந்தா அப்புறம் நல்லாயிருக்காதுபாருங்க.. அடப்போங்கடான்னு சொல்லிட்டு வேலைய பார்க்க போயிருவேன்.. ஆனா பாருங்க, நேத்து தான் எனக்கு அதுல ஒரு பெரிய நம்பிக்கையே வந்துச்சு.. ஒருத்தனுக்கு கோடும் கட்டமும் சரியில்லைன்னா அவன் கையில பெட்ரமாக்ஸ் என்னங்க 1000w சர்ச் லைட் குடுத்துவிட்டாகூட சரியா போயி பாழுங்கிணத்துல விழுந்து தான் தீருவான் என் கூட்டளி 'சித்திர' சொல்லுவான்.. அவன நான் நக்கல் பண்ணிட்டு கிடப்பேன்.. ஆனா அப்படி ஒரு சமாச்சாரம் நமக்குன்னு வந்து வாய்ச்சாத்தான்.. அதுவுஞ்சரிதான்னு தோணுது..
நான் ரொம்ப நச்சு பண்ணுணேன்னு சென்னைப்பட்டனத்துல இருந்து நம்ம சகா ஒருத்தன் 'மலைகள்ள'ன கூரியர்ல அனுப்பிவச்சதுக்கப்புறமும், போனவாரம் வந்திறங்கின நம்ம பையன் ஒருத்தன் பாசமா குடுத்த 'கருப்பும் வெள்ளையும்' பொட்டலம் பிரிக்காம அட்டாலியில அம்போன்னு தூங்கிறத பார்த்ததுக்கப்புறமும், பக்கத்தால சந்தியாவுல செகன்ட் (செகன்டா, தேர்டா??) ரிலீஸ் ஆயிருக்கிற 'காக்ககாக்க' போஸ்டர பார்த்துக்கப்புறமும், லூசுத்தனமான திரைக்கதை, கேணத்தனமான காட்சியமைப்பு, வெளெக்கெண்ணெய்த் தனமான வசனங்களை' - இதையெல்லாம் படிச்சதுகப்புறமும், கரெக்ட்டா நம்ம ஆளுக பக்கத்துல போனதும் மூடின கவுன்டரை பார்த்ததுக்கப்புறமும், பார்க்கிங் டோக்கன் வாங்கிற ஆளுகிட்ட பேசி டிக்கெட்டுக்கு கூட இருவது ரூவா குடுத்து 'திருப்பதி' பார்த்தப்போ தாங்க தெரிஞ்சது..
விதி வலியதுன்னு..!!
--
# 165
குறிப்பு : கொஞ்சம்கொஞ்சம் சுதர்சனின் வேண்டுகோளுக்கினங்க.. இன்றிலிருந்து ராசபார்வையின்எழுத்துருக்கள் கொஞ்சம்கொஞ்சம் பெருசாக்க பட்டிருக்கிறது.. :)
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
என்ன செய்றது தல, எல்லாம்
சம்பவாமி யுகே யுகே...!
"நாங் கதய நம்பியா படம் எடுக்கறேன்...
என்ற கட்டத்த நம்பில்லா படம் எடுக்கறேன்"
அப்டீனு மணிவண்ணன் பேசுன டயலாக் ஞாபகத்துக்கு வருது தல!
:-)))))))))))))))))))) நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிங்கன்னு புரியுது....
இருந்தாலும் 'தல'யோட ஈர்ப்பு இன்னும் போகலையோ?
பொங்கலப்போ, இப்படித்தான் பொலம்புனீங்க!!!
இந்தக் கதைக்கும் மொதல்ல இருக்கர சின்ன பையன் படத்துக்கும் என்ன சம்பந்தம்?
சிவகாசிக்கு அப்புறமும் பேரரசு படத்தப் போய் பாக்கறது உங்க மதி செஞ்ச சதி.. எதுக்கு விதிய இழுக்கறீங்க?? :)
ஞான்ஸ் >> இப்படி நினைச்சு நினைச்சு தான் ஒவ்வொருவாட்ட்டியும்.. :(
KVR >> நூடுல்ஸா.. அதுக்கும் மேல எதாவது இருந்தா சொல்லுங்க..
பெத்தராயுடு /தியாக் >> என்னத்த செய்யிறது போங்க.. பாழாப்போன மனசு, உன்னைத்தேடி'யில ஆரம்பிச்சு 'சிட்டிசன்' வரைக்கும் முதநாளே பார்த்த பழக்கம்.. இப்பவெல்லாம் முதல் நாள் இல்லைன்னாலும், யாராவது கூப்பிட்டா உடனே ஒரு சபலம் தட்டியிருது.. இந்தியன் படத்துல சொல்றமாதிரி 'புத்திக்கு தெரியுது, ஆனா மனசுக்கு தெரியலையே' :(
பொன்ஸ் >> அதுக்கு என்ன அர்த்தம்னா.. வந்து... வந்து... இங்க பாருங்க இந்த மாதிரி என் பதிவுக்கு அர்த்தம் கேக்கிறதெல்லாம் வச்சுக்காதீங்க.. ஆமா.. :)
//சிவகாசிக்கு அப்புறமும் பேரரசு படத்தப// அந்த விசயத்துல ஸ்ட்ராங்கா இளையதளபதி பக்கமெல்லாம் அவ்வளவு சுளுவா போயி மாட்டிகிறதில்லீங்க.. தல 'கிட்ட தான் கொஞ்சம் சறுக்கிடறேன்..
when i read the title.
i thought u got married or
fell in love:).dont worry
u will have another chance to
write like this after seeing
GodFather, so relax bro :).
anon >> :)
thiyag >> செக் பண்ணிட்டேன், நீங்க சொன்னது சரி தான்.. :)
ஆனா இதை எப்படி சரி செய்யிறது :( அதையும் யாராவது சொல்லிங்களேன்.
பரமசிவம்- பாசக்கார தல, நான் எடுத்த சபத்ததை இப்படி பொசுக்குன்னு சொல்லாம கொள்ளாம கைவிடுவேன்னு நினைக்கலை போல, வழக்கம் போல ஒரே பின்னல் தான்.. செம ஆக்ஷன் படம், உள்ளார போன உடனே, 'ஏண்டா வந்த, ஏண்டா வந்த'ன்னு மூஞ்சி மேலயே உதைக்கிறாரு
'திருப்பதி': லூசுத்தனமான திரைக்கதை, கேணத்தனமான காட்சியமைப்பு, வெளெக்கெண்ணெய்த் தனமான வசனங்களை'
இப்படியே தலை படம் பண்ணினா தலையா தலை இருப்பாரான்னு தலை ரசிகர்கிட்ட கேட்டு சொல்லுங்க
நாலு + குத்து வாங்கியிருக்கு இந்தப் பதிவுன்னா "திருப்பதி"யோட தாக்கம் நல்லாவே விளங்குது.மலைக்கள்ளன்,காக்க காக்க சரி.அது என்ன கருப்பு வெள்ளை???துளசியக்கா ....உதவிக்கு வரவும்.(அது சரி மலைக்கள்ளனை எங்கே புடிச்சாரோ???)
எழுத்துருவைப் பெருசாக்கினதுக்கு ரொம்ப நன்னீ.
இளா >> வருஷக்கணக்கா இப்படியே எடுத்தும் இன்னும் 'ஓபனிங்' கிடைக்குது.. அதை புரிஞ்சுகிட்டு தல உருப்படியான வழியில போகனும்.. ம்ம்.. யாரு போயி சொல்றது..எல்லாம் 'சிங்கம்புலி' ஆரம்பிச்சு வச்ச விளையாட்டு..
//அது என்ன கருப்பு வெள்ளை??// கண்ணு அது வேற சமாச்சாரம்.. நீ கண்டுக்காம பால் குடிச்சிகினு தூங்குமா.. !! ;)
இதுகெல்லாம் போயி துளசி டீச்சர கூப்பிட்டுட்டு.. இதுக்கு 'உமா' வேற ஒருத்தர் இருக்காங்க :)
எல்லாம் 'சிங்கம்புலி' ஆரம்பிச்சு வச்ச விளையாட்டு
Red???
//Red???// அதே.. அதே.. அந்த படத்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அவரு அந்த படத்தையும், அதுல அஜித்தோட கேரக்டரையும் பத்தி பேசின பேச்சு இருக்கே.. அப்பவே உள்ள பட்சி சொல்லுச்சு.. இது விளங்காதுன்னு.. :(
நானும் இப்படித்தான் மாட்டிகிட்டேன் தலைவா!!! அஜித் கூட பரவாயில்ல, நம்ம பேரரசு அடிக்குறாரு பாருங்க!! எல்லாம் இந்த சேரன் குடுத்த தைரியம். அதத்தான் சாமி என்னால தாங்க முடியல. சித்திரம் பேசுதடி படத்துல தல நடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு எனக்கு ஒரு எண்ணம்.
//நம்ம பேரரசு அடிக்குறாரு பாருங்க!!// அதுவும் அவர் பஞ்ச் டயலாக் பேசி டைட்டில் கார்ட் போடும் போது கூட்டம் இருக்கிற தியேட்டர்ன்னு கூட யோசிக்காம நல்லா வந்துதுருச்சுங்க வாயுல.. கத்திட்டு, அப்புறம் நமக்கே கொஞ்சம் ஷை'யா போச்சுங்க..
(கொஞ்சம் கூட டயலாக்குலயோ இல்ல முகத்துலயோ உணர்ச்சியில்லாம நடிக்கிற ஒரு டைரக்டர் எப்படிய்யா நடிக்கறவங்க கிட்ட வேலை வாங்குவாரு.. தயாரிப்பு உதவியாளர் எல்லாம் டைரக்டர் ஆனா இப்படித்தான்.. இன்னொரு உதாரணம்.. சங்கரி'ன் தயாரிப்பு உதவியாளர் மாதேஷ்- இவர் இயக்குன 'மதுர' பார்த்தீங்களா?)
சித்திரம் பேசுதடி'யில அஜித்.. ம்ம்.. எல்லாபயலும் ஒரே மாதிரித்தான் நினச்சிருக்கம்.. எங்க.. ??
சில நேரம் நானும் விதி வலியதுன்னு நம்பறது உண்டு... சங்கமம், பார்த்தாலே பரவசம்ன்னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு.
:)
http://raasaa.blogspot.com/2006/01/blog-post_17.html
ராசா, இப்போ தாங்க நான் சொன்னதுக்கு எதுனா பதில் சொல்லி இருக்கீங்களான்னு பாக்க வந்தேன்.. உடனே உங்க பதிவு தமிழ்மணத்துல மறுமொழி இடப்பட்ட இடுகைகள்ல வந்துடுச்சு..
அஜீத்துக்கு ரொம்ப வயசாயிடுச்சுங்க.. இனிமே அவர் இந்த மாதிரி சண்டை படமா தேர்ந்தெடுக்காம, ரெண்டு சாப்ட் படம் பண்ணாருன்னா ஒருவேளை ஹிட்டாகும்
//அஜீத்துக்கு ரொம்ப வயசாயிடுச்சுங்க..// என்னங்க நீங்க, மினிமம் 40 வயசு ஆனாத்தான் ஆக்ஷன் படங்களுக்கான ஹீரோ லுக்கே வரும்ங்க..
எதோ ஹிட் படம் குடுத்தாருன்னா சரி..
சரி உங்க கேள்விக்கான பதில் கிடைச்சிருச்சில்ல.. :)
///கூட்டம் இருக்கிற தியேட்டர்ன்னு கூட யோசிக்காம நல்லா வந்துதுருச்சுங்க வாயுல.. கத்திட்டு, அப்புறம் நமக்கே கொஞ்சம் ஷை'யா போச்சுங்க.. ///
அநியாயத்த தட்டி கேக்க வெக்கப்படத் தேவை இல்லை. என்னவோ போங்க! நான் கடவுள் கை குடுத்தா சரிதான்.
///Friend, I will recommend to watch only Tollywood or Bollywood films.///
தெலுங்கு படம் பார்க்குறதுக்கு பேரரசு படம் பார்துட்டு போயிடலாம். ஆமா தெரியும்ல அடுத்த பவன் கல்யாண் படம் நம்ம கமர்ஷியல் கிங் தான். விதி உண்மைலயே வலியது.
//தெலுங்கு படம் பார்க்குறதுக்கு பேரரசு படம் பார்துட்டு போயிடலாம்.//
well said :)
Post a Comment