கள்ளத்தனமாக..
அவனுக்குள்ளே சிரித்து கொள்கிறான்
அவளை நினைக்கும் போதெல்லாம்..
மொட்டைமாடி சுவற்றில்
காபியை ரசித்தபடி அவளும் சிரிக்கிறாள்
அவனை பற்றி பேச்சு வந்தால்..
தினமும் சந்தித்துகொள்கிறார்கள்
வெட்கத்துடன் கடந்து செல்கிறார்கள்
சொல்லமுடியாமல் தவிக்கிறார்களா..?
இல்லை
இந்த கள்ளத்தனத்தை ரசிக்கிறார்களா?
அவனுக்குள்ளே சிரித்து கொள்கிறான்
அவளை நினைக்கும் போதெல்லாம்..
மொட்டைமாடி சுவற்றில்
காபியை ரசித்தபடி அவளும் சிரிக்கிறாள்
அவனை பற்றி பேச்சு வந்தால்..
தினமும் சந்தித்துகொள்கிறார்கள்
வெட்கத்துடன் கடந்து செல்கிறார்கள்
சொல்லமுடியாமல் தவிக்கிறார்களா..?
இல்லை
இந்த கள்ளத்தனத்தை ரசிக்கிறார்களா?
---
# 167
19 comments:
ஆகா, மறுபடி சாய்ஞ்சு பாத்திட்டிகளோன்னு பதறிப்போய்ட்டம்ல,
மக்கா எங்கயாவது காதல்ல விழுந்திட்டிகளா?
இப்படிக் கலக்குறீக.
அடுத்தவங்க தப்புல இருந்து நாம திருந்திக்கனும்னு சொல்லுவாங்களே.. நாம அந்த வகைங்க பரணி.. :)
எந்தத் தப்ப சொல்றீக ராசா? இங்ஙன ரெண்டு பேர் சொல்லாமலே சுத்திகிட்டிருக்காகளே, அந்தத் தப்பா??!!! திருத்திட்டீகளா?
//சொல்லாமலே சுத்திகிட்டிருக்காகளே, அந்தத் தப்பா??!!!// எப்படிங்க பொன்ஸ்.. இப்படி பின்றீங்க..? இதுக்கெ பேரு reading between the linesஆ.. நான் சொன்னதுல இப்படி ஒரு கோணம் இருக்கும்னு நினைக்கவே இல்லைங்க.. :)
திருந்திட நான் ரெடிதான்.. ஆனா நம்மள நினைச்சு மொட்டைமாடியில உக்காந்து சிரிக்கறதுக்கு ஆளில்லயே :(
ராசா..
தலைப்பை பார்த்துட்டு ஏதோ வில்லங்க நியூசுன்னு ஓடியாந்தேன்!
நெலம அவ்வளவு மோசமில்லை!! :)
//சொல்லமுடியாமல் தவிக்கிறார்களா..?
இல்லை
இந்த கள்ளத்தனத்தை ரசிக்கிறார்களா?//
என்னத்தையோ செஞ்சுத் தொலைங்கப்பா!! ( இது பொகையினால் அல்ல!! )
//நெலம அவ்வளவு மோசமில்லை!! :)//
கொஞ்சம் மோசம்தாங்கறீங்களா??
//என்னத்தையோ செஞ்சுத் தொலைங்கப்பா!! ( இது பொகையினால் அல்ல!! )// ஒத்துகிட்டோம்.. ;)
//இதுக்கெ பேரு reading between the linesஆ//
Reading between comments ;)
சரி, அத விடுங்க.. அதெல்லாம் தானா அமைஞ்சுட்டு போகுது.. இந்தக் கவிதைக்கும் பூட்டு சாவிக்கும் என்ன பொருத்தம்? எதுக்குப் போட்டிருக்கீங்க??!!
//எதுக்குப் போட்டிருக்கீங்க??!!// பாருங்க இதெல்லாம் நல்லாயில்லை.. ஆமாம், எல்லா பதிவுலயும் வந்து இப்படி படத்துக்கு அர்த்தம் கேட்டுகிட்டே இருக்கீங்க,, அன்னைக்கும் இப்படித்தான் 'விதிவலியது'ல கேட்டீங்க. :(
சொல்லாம மனசுகுள்ளார பூட்டி வச்சிருக்காங்கன்னு 'சிம்பாலிக்'கா சொல்லியிருக்கேன்..
(யப்பா..எப்படியோ ஒரு காரணம் கண்டுபுடிச்சாச்சு)
ஸ்வீட்டான கவிதைக்கு இப்படி ஒரு தினத்தந்தி தனமான தலைப்பு வச்சிருக்க வேண்டாம்! :-(
//ஒரு தினத்தந்தி தனமான தலைப்பு வச்சிருக்க வேண்டாம்! :-(// அப்படிங்கரீங்க.. அதுவும் சரிதான்..
நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்களேன்,,
சொல்லாமலே??
//ஸ்வீட்டான கவிதை// கவிதைன்னா சொன்னீங்க.. நான் கவனிக்காம விட்டுட்டேன்..
ஆஹா.. ஒரு ஆள் ஒத்துகிட்டாங்க.. இது போதும்.. :)
நன்றி நிர்மலா :)
கள்ள காதல்!! நான் காலைல தான் திருட்டு பயலே படம் பார்துட்டு வந்தேன். அத பத்தி இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா சொல்லணும்ங்க, அருமையான "கவிதை". நான் என் நோட்ல எழுதி வெச்சிட்டேன், இந்த கவிதையை. கீழ சின்னதா நன்றி ராசானு போட்ருக்கேன் தலைவா!!! தப்பு இல்லயே???
ஹிஹி... அதை 'கவிதை' ன்னு எழுதும் போது யோசிச்சதென்னவோ நிஜம்னு சொன்ன நம்பவா போறீங்க?! :-)
தினத்தந்தி படித்து நாளாயிடுச்சுன்னு தெரிச்சுட்டு ஓடி வந்து பார்த்தா ச்சே... இவ்ளோதானா... ஏமாத்தீடீங்களே ராசா!!!!!
"காதலில் நல்ல காதல் கள்ளக் காதல் ஏது?".
இத நான் சொல்லல, கலாபக் காதலன்'ல சொன்னது
ப்ரசண்ணா>> //கீழ சின்னதா நன்றி ராசானு போட்ருக்கேன் தலைவா!!! தப்பு இல்லயே???// இதுல என்னங்க தப்பு.. என்ன சின்னதா போட்டத கொஞ்சம் பெருசாவே போட்டிருக்கலாம் ;)
நிர்மலா >> யோசிச்சாலும்.. சொல்லிட்டீங்களே.. அது போதும்
உதயா>> இதெல்லாம் ஓவரு..!! ஆமாம்!
D The D >> ரொம்ப சந்தோஷம்.. :)
இளா >> //"காதலில் நல்ல காதல் கள்ளக் காதல் ஏது?"// கள்ளகாதல் வேற கள்ளத்தனமான காதல் வேறயோ??
// சொல்லாம மனசுகுள்ளார பூட்டி வச்சிருக்காங்கன்னு 'சிம்பாலிக்'கா சொல்லியிருக்கேன்..
(யப்பா..எப்படியோ ஒரு காரணம் கண்டுபுடிச்சாச்சு) //
இருவரும் அடுத்தவரைத் தன் மனதில் சிறைப்படுத்திவிட்டு வெளியே வர இயலாதவாறு பூட்டியிருக்கிறார்கள் என்றல்லவா நான் நினைத்தேன்.
:-)))
Post a Comment