கடைசியா அஞ்சு வருஷம் முன்னாடி ஒரு ஜனவரி மாசத்து நிறைஞ்ச முகூர்த்த நாள்ல வடக்கத்திக்காரங்க ஸ்டைல்ல கட்டுன ஒரு பிங்க கலர் பட்டுபுடவையில லார்ட்ஸ் ஹாஸ்பிடல் சர்ஜன் 'ரஞ்சித்'கூட ஜோடியா நம்மூர் வழக்கப்படி 'வரவேற்ப்பு'க்கு நின்னப்ப பார்த்தது, அதுக்கப்புறம் இப்பத்தாங்க, நேத்து சகா ஒருத்தன வண்டி ஏத்திவிட போனப்ப எத்தேசையா சுமி'ய பார்த்தேன். கொஞ்சம் பூசினாப்புல ஆயிட்டா.
'ஹேய்..எப்படிப்பா இருக்கே?' இன்னும் கண்ணுல அதே சிரிப்பு..
'ரஞ்ச், இது ராஜ், என் ஸ்கூல்மேட், நம்ம மேரேஜ்ல மீட் பண்ணினது, டு யூ ரிமம்பர்?'.. டாக்டர் அப்ப மாதிரியே ட்ரிம்மா இருக்காரு. கல்யாணத்தன்னைக்கு ஒரு பூங்கொத்து குடுத்து சம்பிரதாயமா பேசுனது, அதுவும் ஆறு வருஷம் முன்னாடி, பாவம் அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்.. இருந்தாலும் 'யா!யா!..ஹவ் டு யு டூ?'ந்னு ஒரு ஆச்சிரிய புன்னகையோட கைகுடுத்தாரு.
ஒரு மாச லீவுல வந்திருக்காங்களாம், சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் போயிட்டு, அப்படியே கொஞ்சம் ஊர்சுத்தல், இப்ப ரஞ்ச்'க்கு எதொ கான்ஃப்ரன்ஸ் அட்டன்ட் பண்ணனுமாம், அதுனால சுமி'மட்டும் சென்னையில இன்-லா வீட்டுக்கு போறதுனால ட்ராப் பண்ண வந்திருக்காராம்..
சுமி சொன்னத சுருக்கி குடுத்திருக்கேன், சரியான வாயாடி.. ஸ்கூல் படிக்கும் போது சுமி, மரக்கடை செட்டியார் பொண்ணு பொன்னரசி, நான், அப்புறம் துரை எல்லாரும் ஒரே பெஞ்ச். (ஃபார் யுவர் இன்போ : நாங்க படிச்சப்போ எங்க ஸ்கூல்ல நாலாவது வரைக்கும் தான் கோ-எட்) பக்கத்துல உக்காந்துட்டு, பெஞ்ச், டேபிள் எல்லாம் பென்சில்ல கோடு போட்டு, இதை தாண்டி உன் நோட்டு, பென்சில்பாக்ஸ் எதுவும் வரக்கூடாதுன்னு என்னையும் துரையனையும் ஒரு வழி பண்ணிருவா.. மிஸ் கிட்ட சொன்னாலும் கடைசியில எங்களுக்கு தான் திட்டு விழும், சில நேரங்கள்ல அடியும்.. ஏன்னா இவ வாய் சாமார்த்தியம் அப்படி, அது போக நம்ம துரையன் ட்ராக் ரெக்கார்ட் அப்படி..(நான் குட்பாய்!)
நாலாவதோட ஸ்கூல் மாறி போயிட்டாலும், அடுத்த வீதியில தான் சுமி'யும் இருந்தாங்கிறதுனால அந்த நட்பு மட்டும் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு.. நமக்கு சும்மா புஸ்தகத்தை பார்த்தாலே எதோ பேயடிச்ச மாதிரி ஆயிடும், தினமும் 'இப்படியே போனா நீ சினிமா கொட்டாயில முறுக்கு விக்கத்தான் போக போற'ன்னு தினமும் வீட்டுல சாபம் குடுப்பாங்க.. நமக்கு மனசுகுள்ள ஒரே சந்தோஷம், அப்படி போன தினமும் சினிமா பார்க்கலாமேன்னு, அதுனால நம்ம வீட்டாளுக எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி நான், சிவா, ஸ்ரீ, மங்கை அப்படின்னு ஒரு கூட்டத்தை உருவாக்கி பத்தாவது படிக்கும் போது எல்லாம் சுமி வீட்டுல தான் க்ரூப் ஸ்டடி..
எல்லாரும் ஒழுங்கா படிக்க, நான் மட்டும் மும்முரமா புஸ்தகத்தோட பின்னட்டையில படம் வரைஞ்சுகிட்டு இருப்பேன், சுமி' பயங்கிற தொணதொணப்பு, எதாவது பேசிகிட்டே இருப்பா. 'நான் இன்னைக்கு கருப்பு பென்சில் வாங்கினேன், கருப்பு பேனா வாங்கினேன், கருப்பு டாப்ஸ் வாங்க போறேன்னு, ஒரே கருப்பு புராணமா இருக்கும்..அவளுக்கு கருப்பு ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிருக்காம், 'ஐ ஹாவ் ஸ்டார்டர்ட் லவ்விங் ப்ளாக்'ன்னு அவ சொல்லும் போதே அவ்ளோ சந்தோஷம் தெரியும் அவ கண்ணுல.. கருப்பா ஒருத்தன தான் கட்டிக்குவேன்னு வேற சொல்லுவா..
நமக்கு வீட்டுல் உக்காந்து வரைஞ்சாத்தான் எங்க அம்மா 'படிக்கறத வுட்டுபோட்டு என்னடா எப்பப்பாரு கிறுக்கிட்டே கிடக்கற'ன்னு தொணதொனக்க ஆரம்பிச்சிருவாங்கன்னு இங்க வந்தா, இவ வேறன்னு ஒரே எரிச்சலா இருக்கும்.. இதுக்கு நடுவால மத்தவங்க வேற பயங்கிர படிப்பாளிக நம்மள இவகிட்ட விட்டுட்டு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டாங்கன்னா அவ்ளோ தான், சுமி'யோட அம்மா காம்ப்ளான் கொண்டு வந்தாத்தான் புஸ்தகத்துகுள்ளார இருந்து தலைய எடுக்குங்க.. அன்னைக்கு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டது, இன்னைக்கும் கம்ப்யூட்டருக்குள்ளார தலையவிட்டுட்டு கிட்க்கறாங்க.. ஒரு வித்தியாசமும் இல்ல..
அப்படி இருந்த நாங்க இந்த அஞ்சு வருஷமா மட்டுமில்லீங்க, அதுக்கு முன்னாலயும் ஒரு நாலு வருஷம் எந்த தொடர்புமில்லாம தான் இருந்தோம்.. அதுக்கு காரணம் 'சந்துரு', அவனும் எங்க செட்' தான். அவனுக்கு சுமி' மேல 'தெய்வீக' காதல், அப்படித்தான் எங்கிட்ட சொன்னான்!.. நான் இன்னொன்னு சொல்லலையே, சுமி' எங்க ஏரியாவும ரொம்ப பிரபலமான் 'பிகர்', தெரு முக்குல ஒரு கூட்டமே அவ தரிசனத்துக்கு நிக்கும், ஆனா நம்ம தான் பள்ளிகூடம் தாண்டுற வரைக்கும் பச்சபுள்ளையாவே இருந்துட்டமா, அதுனால அந்த தெரு முக்குல நிக்கிற சமாச்சாரத்துல எல்லாம் நான் (அப்போ!) கலந்துகிட்டதில்லைங்க.. (அவங்களும் நம்மள சேத்திக்கலைங்கிறது வேற விஷயம்)
அந்த கூட்டத்துல முக்கியமான் ஆள் இந்த சந்துரு'. நம்மகிட்ட வந்து 'மாப்ளே, நீ தான்எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்'ன்னு சொல்ல, அதுவரைக்கும் நம்மள ஒரு பொருட்டா கூட சீன்டாத பசங்க, நம்மள வந்து மாப்ளே'ங்கிறானுகன்னு ஒரு மிதப்பாகி நானும் பெருமையா அவன்கிட்ட இருந்து 'லவ்லெட்டர்' வாங்கி போஸ்ட்மேன் வேலை பார்த்தேன், அப்படியே இதை சாக்கா வச்சு, அவனுக கூட்டத்துல கலந்துடனும், நாமளும் அப்படியே ஒரு ஜமாவா தெருமுக்குல நிக்கனும்னு ஒரு நப்பாசை. எவ்ளோ நாள் தான் குட்பாய்'யாவே இருக்கிறது.. !
நம்மள எதோ அல்லக்கை வேலைக்கு அவனுக பயன்படுத்திருக்கானுகங்கிறதெல்லாம் பிற்காலத்துல தான் நமக்கு தெரிஞ்சுது.. அப்படி ஒரு கேடுகெட்ட போஸ்ட்மேன் வேலை பார்த்ததுல தான் சுமி'க்கு பயங்கிற கோபம், என்னை கிட்டத்தட்ட சட்டைய புடிச்சு ஒரு உலுக்கு உலுக்கிட்டா,எப்படிடா நீ இதை செய்யலாம், உன் மூஞ்சியிலயே இனிமேல் முழிக்க மாட்டேன்னு அழுது சத்தம் போட்டுட்டு போயிட்டா...எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு, ச்சே அந்த பெரிய பசங்க கூட்டத்துல சேர ஒரு சான்ஸ் கிடைச்சுது. இவ இப்படி அதை கெடுத்துட்டாலேன்னு.. நல்ல வேளை வீட்டுல யாரு கிட்டயும் சொல்லாம விட்டாளேன்னு ஒரு சந்தோஷம்..
அப்புறம் அப்படியே கொஞ்ச நாள்ல அவுங்க வீட்டுல வேற பக்கம் வீடுகட்டி அங்க குடி போயிட்டாங்க, நாமளும் அப்புறம் +2 பிசி, வெளியூர்ல காலேஜ்ன்னு அப்படியே வேற மாதிரி போயிட்டோம். அப்புறம் அவ கல்யாணத்துக்கு எங்கய்யன் எங்கயோ வேற வேலையா போனதுனால எங்கம்மாவுக்கு சாரதியா போயி, ரிசப்ஷன்ல வாழ்த்து சொல்லிட்டு வந்ததோட சரி.. அதுக்கப்புறம் நேத்து தான் பார்க்கிறேன்...
'வண்டி வேற ஒரு மணிநேரம் லேட்டு, ரஞ்சித்துக்கு எதோ அப்பாயின்ட்மென்ட் இருக்காம், ஒரே போர்ப்பா'ங்க, நான் 'ஃப்ரி தான், நான் இருக்கேன், வண்டி கிளம்பர வரைக்கும்னு' சொல்லி ரஞ்சித்த அனுபிச்சுட்டு நாங்க ரெண்டு பேரும் காபிஷாப்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்..
மலரும் நினைவுகள் எல்லாம் பேசிட்டு இருந்தோம், அப்போத்தான் சுமி கேட்டா, 'கல்யாணம் எப்படா?'. வர வர யாரை பார்த்தாலும் இதே கேள்விய தான் கேக்குறாங்க, நானும் வழக்கம் போல சிரிச்சுகிட்டே 'பண்ணிக்கலாம்னு' வழக்கம் போல சொன்னேன்.. 'யாராவது பார்த்து வச்சிருக்கியா?' இது அடுத்த கேள்வி.. நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவளே 'உன்கிட்ட போயி இதை கேக்குறேன் பாரு , நீ எங்க போயி...'
'ஏன் அப்படி, என்னை பார்த்தா அவ்ளோ இளக்காரமா இருக்கா என்ன?'
'பின்ன என்ன, உனக்கு என்னைக்கு அதெல்லாம் புரிஞ்சிருக்கு.. சரி அதை விடு.. சிவா,எப்படி இருக்கான்'ன்னு அப்படியே பேச்ச மாத்திட்டா... நானும் கண்டுக்கல.. அப்புறம் ஒரு மணி நேரம் லேட்டுன்ன வண்டி ஒன்னரை மணி நேரம் கழிச்சு கிளம்ப தயாராக, (என்னைக்காவது ஏர்-டெக்கான் நேரத்துக்கு கிளம்புமா.. ஒரு போட்டியே வைக்கலாம் போல அதுக்கு) நாங்க பரஸ்பரம் போன் நம்பர், ஈமெயில் ஐடி எல்லாம் குறிச்சுகிட்டோம்.
போகும் போது கடைசியா 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, இப்ப பார்க்க கொஞ்சம் கலராயிட்ட'ன்னு சிரிச்சுகிட்டே கிளம்புனா.. 'ம்ம்.. அப்படியா'ன்னு பக்கத்துல இருந்த கண்ணாடியில பெருமையா பார்த்துகிட்டேன்.. 'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா, growup man! ஆல் தி பெஸ்ட்'ன்னு சொல்லிட்டு டாடா காமிச்சுட்டு போயிட்டா..
திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சுகிட்டே வந்தேன்.. 'growup man'?.. நம்மள பார்த்து எதுக்கு அப்படி சொன்னா??... ம்ம்.. அப்படியே யோசிக்கிட்டே போயி சிக்னல்ல வண்டிய நிறுத்துனேன். இந்த 200 செகன்ட் சிக்னல்ல நிக்கிறது மாதிரி ஒரு கொடுமையே இல்லீங்க.. எப்எம்'ல எதோ இங்க்லீஸ் பாட்டு.. ஆயிரம் இருந்தாலும் ரெயின்போ மாதிரி வராதுன்னு மனசுகுள்ள சொல்ல சொல்ல.. டக்குன்னு அவ சொன்னது ஞாபகம் வந்துச்சுங்க 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, கொஞ்சம் கலராயிட்ட'..
நமக்கு எல்லாமே லேட்டாத்தான் புரியுது.. இன்னும்..!!
pic courtesy: http://www.modernartimages.com/
---
#164
43 comments:
இது கதைல வர நெசமா? இல்லை நெசத்துல வர்ற கதையா?! உங்களுக்கே வெளிச்சம்! ஆனா படிக்க ஜோரா இருந்தது..
//'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா // ம்ம்ம்.. நம்பிட்டோம்! :)
ராசா,
Nalla sirukathai padiththa niraivu!
.:dYNo:.
Unmai nigazhvuthan endralum, athai oru sirikadhai poal vivaritha vidham arumai... :)
பின்னிடீங்க ராசா
Hmmmmmmmmm... (oru perumoochu) unga pathivai padichitu ungalukkaaka vita perumoochchu.
Anbudan, PK Sivakumar
A touching post!
Move on... Rasaa!
Regards,
Karthik
ராசா,
நன்றாயிருக்கிறது. இன்னும் இது போல நிறைய எழுதுங்கள்.
இளவஞ்சி> அது நிசமாதிரி பொய், பொய் மாதிரி நிசம் - வகை..
////'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா // ம்ம்ம்.. நம்பிட்டோம்! :)// நம்பித்தான ஆகனும், நம்ம முகராசி அப்படி
.:dYNo:. >> நன்றி டைனோ. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..
neodawn >> நன்றி.. இதை சிறுகதை வகையில சேர்த்ததுக்கு :)
chiper >> நான் ஏதும் பழச கிளரிவிட்டுட்டனா?? ;)
PKS >> வரனும், வரனும்.. அதே பெருமூச்ச தான் நான் இப்ப விட்டுகிட்டு இருக்கேன்..
கார்த்திக் >> தொட்டுட்டோம்ங்கரீங்க..? நன்றி
சோழநாடன் >> //இது போல நிறைய எழுதுங்கள்// நாங்க என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றோம், சட்டியில இருந்தாதாங்க அகப்பையில வரும்.. ம்ம்.. பார்ப்போம்..
அடப்பாவி, இப்படி அநியாயத்துக்குக் கோட்டை விட்டுட்டியே!
கருப்புதான் சுமிக்குப் புடிச்ச கலரு.
வாங்க துளசி.. நம்ம பொழப்பே இப்படித்தாங்க.. ;)
வரும் போது சுமி'க்கு இன்னும் கருப்பு புடிக்குதான்னு கேட்டிருக்கலாம்.. மறந்துட்டேன் ;)
அன்னிக்கு என்னடான்னா ஒரு வென்னிலா கேக்கு, இன்னிக்கு இப்படி ஒன்னு-எப்படீங்க ராசா?!
நல்லாருகுங்க ராசா,
டைனோவின் கருத்தை வழிமொழிகிறேன்.
இராதாகிருஷ்ணன் >>
வென்னிலா கேக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க.. அது வேறு.. இது வேறு. ;)
கண்ணன் >> நன்றி.
இதை எப்படி எடுத்துக்றதுனு தெரியல.இதுக்கு நிங்க வருத்தப்படாம இருந்தா சரி.
chalam>> // நிங்க வருத்தப்படாம இருந்தா சரி.// அட நீங்க வேற.. இதுக்கெல்லாம் போய் வருத்தப்படுவமா என்ன.. நாமெல்லாம் 'வருத்தப்படாத வாலிபர் சங்க'த்தோட நிரந்தர உறுப்பினர்ங்க.. :)
இன்னைக்கு நடக்கிற விஷயத்துக்கே நான் வருத்தப்படுறது இல்லை... பத்து வருஷம் முன்னாடி நடந்த்ததுக்கு போய்.. ஹி.. ஹீ..
anyhow, thanx for the concern..!
(பதிவுல எழுதறதெல்லாம் இந்த உலகம் சீரியசா கவனிக்குது அப்பு.. கவனம்)
சூப்பர்!
You have grown up Man!
வாங்க கோபி, நன்றி..
You have grown up Man!// ofcourse iam, ஆனாலும் நான் இன்னும் அதே அப்பாவி ராசு தான். :)
அப்பாவி, பழம், நல்ல பையன், குட் பாய்.... இன்னுமா ராசா? சொல்லவே இல்லை
இளா >> //இன்னுமா ராசா? சொல்லவே இல்லை// :).. நானா மாறா நினைச்சாலும் விட மாட்டேங்கிறாங்க.. காலத்துக்கும் இப்படியே நல்ல பையனாவே இருக்கனும்னு விதி போல ;)
//ஆனாலும் நான் இன்னும் அதே அப்பாவி ராசு//
இதற்கு இளவஞ்சியின் முதல் பின்னூட்டததிலுள்ள இரண்டாவது பத்தியை வழிமொழிகிறேன் :-P
இதெல்லாம் உண்மையா இல்ல கதையான்னு சொல்லவே இல்லையே?
கோபி >> இந்த உலகம் என்னைக்கு உண்மைய நம்பியிருக்கு ;)
சுதர்சன் >> //உண்மையா இல்ல கதையா// அது வந்து.. வந்து.. என்னன்னு சொன்னா நீங்க நம்புவீங்களோ அது.. :)
priya an indian >>
ரொம்ப தெளிவா விளக்கம் குடுத்திருக்கீங்க.. பயங்கிர அனுபவசாலியா இருப்பீங்க போல..
//I mean really "always"// இதெல்லாம் சும்மா இந்த puppylove'ன்னு சொல்லுவாங்களே அந்த வகைன்னு இல்ல நினைச்சேன்..
what priya says is 100% true
Intha comments kku ellam ore bathil, seekiram kalyana sapadu podarathu than !!! hihi..
நல்லா எழுதி இருக்கீங்க ராசா. உங்களைப் பெருமூச்சு விடவைத்தாலும் உள்ளே மறக்க முடியாத ஒரு இன்னுணர்வைத் தருவதாக இருக்கும் அனுபவம்.
Hi raasa,
Excellent writing.
regards
Suresh R
"ciper >> நான் ஏதும் பழச கிளரிவிட்டுட்டனா?? ;)" --- அப்படி இல்லை.....இருந்தாலும் ஒரு மாதிரி feel பண்ணவச்சுடீங்க.......
Raasaa, sooper post
ராசா,
நல்ல பதிவு. பழைய நினைவுகளைக் கிளறி விட்டுட்டீங்க. puppy love-ஆ இருந்தாலும் first love மவுசே தனி.
-வித்யா
WOW. Excellent writting. Manasai ennamo seeiyuthu.
Suresh
ஜனாதிபதிலயிருந்து சூப்பர் ஸ்டார்வரைக்கும் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், கொஞ்சம் கலராயிட்டேனு சொன்னா ஒரு சின்ன சந்தோசம் இருக்கத்தான் செய்யுது. :)
ஜெகதீஸ்வரன் >> ;)..எங்க ஆள கொஞ்ச நாளா காணோம்?
செல்வராஜ் >> நன்றி
சுரேஷ் >> வாங்க வாங்க.. புது புது ஆளுக எல்லாம் வர்ரீங்க.. நன்றி
உமா >> :)
வித்யா >> //first love மவுசே தனி.// பின்னூட்டம் எல்லாம் பார்த்தாலே தெரியுதே.
அனுசுயா >> //ஒரு சின்ன சந்தோசம் இருக்கத்தான் செய்யுது. // அப்புறம்,, அதுவும் எதிர்பக்கம் இருந்து சொல்லும் போது கண்டிப்பா சந்தோஷம் தான்..
//'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா // நம்பிட்டோம் :-)
கொஞ்சம் அடிக்கடித்தான் எழுதுமேன்.
//கொஞ்சம் அடிக்கடித்தான் எழுதுமேன்.// சரக்கு இருந்தாத்தான் எழுதிருவமே.. :(
Cape Town (South Africa) la irukken Raasaa. Client Place Network la Blogger ellam ban pannittaanga.. Tamilmanam pdf mattum than padikka mudiyuthu..athanala comments poda mudiyarathu illa..
உங்க எழுத்து நடை நன்றாகவும், எளிமையாகவும் இருக்கு.
இது கதை என்றால் கற்பனை அற்புதம்
இது உண்மை என்றால் உங்கள் வெள்ளந்தித்தனம் ஒரு அற்புதம்.
ம்ம் நல்லா எழுதி இருக்கீங்க. மற்ற பதிவுகலும் நல்லா இருக்கு.keep it up.
இப்போ இதைப் பார்த்தேன். நல்லா இருக்குங்க ராசா. அவ்ளோ நல்ல பையனா நீங்க?!!
குமரன் /விஜி >> நன்றி.. நன்றி
பொன்ஸ் >> //அவ்ளோ நல்ல பையனா நீங்க?!!// இன்னுமா உங்களுக்கு அதுல டவுட்டு??
ரொம்ப லேட்டுன்னாலும், பதிவை படிச்ச உடனே பதில் எழுதணும்னு தோணுச்சு.ஏன்னா,உங்க நடை அப்புறம் நம்ம பிளாஷ்பேக்..என்ன நீங்க ஏர்போர்ட்ல பழம்னு உணர்ந்தீங்க, நமக்கு ரயில்வே ஸ்டேஷன்..
Post a Comment