Monday, November 13, 2006

முகூர்த்த போட்டோ


கல்யாணத்துக்கு நாம காசு குடுத்து ஒருத்தர போட்டோ புடிக்க வரச்சொன்னா, அவரே நாலு ஸ்டில்கேமிரா, மூனு மூவிகேமிரா'ன்னு வந்து சுத்தி நின்னு ஒரு வழி பண்ணிட்டாருங்க, இது பத்தாதுன்னு, நம்ம சகாகூட்டம் வேற 'வந்திறங்கும்' போது கொண்டு வந்த சைபர்ஷாட்'ட்டும், கேஸியோ'வயும் தூக்குட்டு சுத்தி நின்னு பாரா காத்துட்டாங்க.. பாவம்.. கிட்ட வர முடியாத ஒரு 'ஜார்கண்ஃட்' மாநிலத்து சகா எடுத்த படம் இது.. எடுத்ததோட மட்டுமில்லா, நம்ம வேலையிடத்துல பெருசா அச்செடுத்து ஒட்டி வேற வச்சுட்டாரு.. எல்லாம் ஆர்வக்கோளாருல நடக்கிறது.. :)

-00--

உடுமலைப்பேட்டை கொல்லம்பட்டரை ரோட்டுல மூணு அடிக்கு தண்ணி ஓடி இந்த 72 வருசத்துல நான் பார்த்ததேயில்லைன்னு நம்ம அம்மிணியோட சின்ன அப்பாரு ஒரு வாரமா, ஓயாமா சொல்லிகிட்டே இருந்தாருன்னா பாருங்க..
அந்தளவுக்கு வரலாறு காணாத மழைக்கு நடுவால, வெள்ளமா ஓடுற தண்ணியில சிக்கிகிட்ட மூணு வண்டிய, பட்டு வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு வெளிய எடுத்து, 'மாப்ள அந்த தண்ணியிலயும் நறுவுசா காரோட்றார், அவருதான் பெரிய வண்டி மூணையும் அலுங்காம தண்ணியில ஓட்டிட்டு வந்தாருன்னு'னு ஒரு பெருசு புகழுரைக்க பக்கத்துல நின்னுட்டிருந்த சகா 'ஏம்மாப்பு, அவரு சொல்றது எந்த தண்ணி?'ன்னு காதோரமா கேட்டத கண்டுக்காம ஓடிப்போயி துணிமாத்திட்டு, வெளியில மழையடிக்கறதால உள்பக்கமாவே குவிஞ்சுட்ட கூட்டத்துல மண்டபமே நிறைஞ்சு கிடக்க, 'மாப்ளைக்கு வழிஉடுங்கப்பா, அவர் வராட்டி அப்புறம் கல்யாணம் எப்படி நடக்கும்னு' கவுண்டமனி ரேஞ்சுக்கு கூட்டத்தை விலக்கி, சாயங்காலம் அஞ்சுல இருந்து அஞ்சரைக்குள்ளார மண்டபத்துக்குள்ள வர வேண்டியவன, ஒரு வழியா ஏழரை மணிக்கு மண்டபத்துல கொண்டு போயி சேர்த்தாங்க... அப்புறம் உருமால் கட்டுசீருக்கு உக்காந்தப்போத்தான் மழைவிட்டுது..

அப்புறம் எல்லாம் வழக்கப்படிதான்.. அணைத்தும் நலமாகவே நடந்தது.. நேரில் வந்தும், தொலைப்பேசியில் அழைத்தும், தந்தி அடித்தும், ஈ-வாழ்த்து அனுப்பியும், மனதார வாழ்த்திய அனைவருக்கு.. நன்றிகள் பல..

--
#211

14 comments:

லதா said...

// *அணைத்தும்* நலமாகவே நடந்தது.. //

வாழ்த்துகள் ராசா
:-)

Anonymous said...

'ஏம்மாப்பு, அவரு சொல்றது எந்த தண்ணி?'ன்னு

:-))

அனுசுயா said...

Ayya raasaa kalyana photo pakkalamnu asaya odi vantha ipdi panniteengle. Aanalum coimbatore kusumbu rombathan. :))))

Puthu mapillaiku vazhthukkal

துளசி கோபால் said...

சூப்பர் போட்டோ.
பொண்ணு கட்டி இருக்கற சீலைக் கலர்தான் சரியாத்தெரியலை (-:

Viji said...

அண்ணா வணக்கமுங்க,
நமக்கு சொந்த ஊரு உடுமலைப்பேட்டைப் பக்கமுங்க, யாராவது நம்ம ஊருக்காரங்க பதிவுலகில இருக்கங்களானு பாத்ததுல உங்க Blog கண்ணுல பட்டுதுங்க. "புதுமாப்பிள்ளைக்கு என் இனிய வாழ்த்துக்கள்"

Sud Gopal said...

வாழ்த்துகள் மாப்ளை சார்.

புதுவீடு பார்த்து செட்டில் ஆயாச்சா??

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள், போட்டோ பாக்கலாம்னு வந்தா, இப்படி ஏமாத்திப்புட்டீங்களே. எப்போ விருந்து? இந்த வாரம்?

இராம்/Raam said...

எப்பிடி,என்ன கமெண்ட் போட்டாலும் யாருக்கும் பதில் சொல்லமாட்டிங்க....;-))) எனிவே வாழ்த்துக்கள் இராசா!!!!

மணியன் said...

வாழ்த்துக்கள் ராசா.

Udhayakumar said...

:(. Nalla photo please...

இராதாகிருஷ்ணன் said...

இனிய திருமண வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//மனதார வாழ்த்திய அனைவருக்கு.. நன்றிகள் பல..
//

அட! நமக்கும் மறக்காம நன்றி சொல்லிட்டீங்க!

எனிவே வாழ்த்துக்கள்.

(தவிர்க்க இயலாத சூழ்நிலையால் கலந்து கொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்)

Divya said...

புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

Tisai said...

Kongu Rasa, wish you a happy married life. Welcome to the club.

Regards,
Siva