நான் பாட்டுக்கு எழுத்துலக சேவை எல்லாம் செய்யாம அமைதியா ஒரு வழிப்போக்கனா பராக்கு பார்த்துட்டு உக்காந்திருந்தா.. நம்ம அனு வந்து அழகை பத்தி எழுதுங்கன்னு இழுத்து விட்டுட்டாங்க.. ம்ம்.. விதி யாரை விட்டுது.. :)
அழகை பத்தி எழுதறதுன்னு நினைச்சதும்.. எல்லாமே அழகா தெரியுதுங்க.. 'என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகு.."ன்னு பாடாத குறை தான்..
நமக்கு எல்லாமே அழகு தான், பதினேழு இன்ச்ல தட்டையா அடக்கமா எதிர்தாப்புல இருக்கிற கணிணி திரை, அதுல ஒரு ஓரத்துல பணியிடம் மாறி வேற தேசம் போன ஒரு தோழி 'மார்க்கர்'ல கிறுக்கி வச்சுட்டு போயிருக்கிற 'bye-bye dumbo'ங்கிற வாழ்த்துரை, பின்பக்கம் விசாலமான நடைபாதையில ஒரு ஓரத்துல இருக்கிற கண்ணாடி தொட்டியில சாவித்ரி, ஜமுனா'ல இருந்து ஷில்பாசெட்டி, சிம்ரன், ஏன் ஷக்கீரா வரைக்கும் எல்லாருமே தோத்துபோற அளவுக்கு நெளிவு சுளிவோட வளையவர்ற சீனத்து தங்கமீன், காலையில வீட்டை விட்டு கிளம்பும்போது, அவசர அவசரமா புத்தகத்தை ஒரு கையால புரட்டிகிட்டு தலைமுடிய ஒதுக்கிவிட்டுகிட்டே நம்ம வூட்டு பக்கம் இருக்கிற மைனா-காலேஜுக்கு போயிட்டிருந்த ஒரு மைனாவோட தொங்கட்டான், நம்ம கண்ணு மைனா பக்கம் போறத தலைக்கவசத்தை மீறியும் கண்டுபுடிச்சு நங்'குன்னு கவசத்துமேல ஒரு கொட்டு கொட்டி 'ஒழுக்கமா போயிட்டு வா'ன்னு நம்ம அம்மணி காமிச்ச செல்லகோவம், அவசரத்துக்கு காலைப்பசிய போக்க போகும் உடுப்பி கடை மசால் தோசை மேல மின்னுற வெண்ணை கட்டி, மாசக்கணக்கா தண்ணியோ துணியோ பார்க்காத என் செல்ல RX, நம்ம சகா கூட்டத்துக்குன்னு வச்சிருக்கிற 'ஆசை நூறு வகைய' தினமும் நாலு தடவையாவது எனக்கு பாடிக்காட்டுற கைப்பேசி, ஒரு விடுமுறையில அதிரப்பள்ளி அருவியில ஒரு நிமிச அஜாக்கிரதையில தண்ணியில அடிச்சுட்டு போயி எதோ ஒரு மரவேரை புடிச்சிட்டு தத்தளிச்சத, கரையில இருந்து என்ன செய்யிறதுன்னு தெரியாம, என் சகா ஒருத்தன் புடிச்ச வச்ச புகைப்படம், 'இதெல்லாம் ஒரு படம், இதையும் பார்க்கிறானுக, ஹிட் ஆகுது'ன்னு புலம்பும் போது, பத்து வருசம் முன்னாடி ஒரு 'குப்பை' படம் பார்க்க முதநா கூட்டத்துல கம்பிய புடிச்சு அடுத்தவன் தோள் மேல ஏறி டிக்கட் வாங்கும்போது பின்னங்கழுத்துல கம்பி அறுத்து ரத்தக்காயத்தோட விடாம போயி படம் பார்த்தத நினப்பக்கூட்டும் பின்னங்கழுத்துதழும்பு, வூட்டு வாசல்ல சீசனுக்கு முதமுதலா பூக்கிற மேஃப்ளவர் மரம், கூடவே போட்டி போடுற வேப்பம்பூ மணம், நல்ல வெய்யில்ல மாறான் வெட்டி தர்ற கீழ்தோட்டத்து செவ்விழநி, தென்னங்கீத்துக்கு நடுவால விழுகற பெளர்ணமி நிலா வெளிச்சம், கூடவே வழிஞ்சு ஓடுற 'மொட்டை', உச்சிவெயில்ல முள்ளுப்பாடி கேட்டுல நிக்கும் போது, வேலை செய்யாத ஏசிக்காக எங்கய்யனை கறுவிக்கிட்டே, சாப்பிடுற உப்புமிளாகாப்பொடி தடவுன வெள்ளரிபிஞ்சு, நம்ம மக்க கூட ஜமா சேர்ந்து பொங்கும் போது மட்டும் வாங்கும் 'சங்கு' ப்ராண்டு லெமன் ஊறுகாய் பாக்கெட், சீக்கிரமா தூக்கம் கலைஞ்ச விடுமுறைகள்ல சூரியன் உதிக்கப்பாக்குற நேரத்துல யாருமே இல்லாம நமக்கே நமக்கு மட்டும்னு சில்லுன்னு தெரிக்கிற ஆழியார் குரங்கு அருவி, வரப்புல நடக்கும் போது ஒரு நிமிசம் பயங்காட்டிட்டு, சரசரன்னு நெளிஞ்சு ஓடி வேலியோரம திரும்பி படம் புடிக்கும் மஞ்சக்கோடு விரியன் பாம்பு, ஊரையே ரெண்டாக்கிட்டு திரியர என் சகா 'செந்தான' சும்மா அடிச்சு மிதிச்சு பணிய வச்சிடுற 'அவன பெத்த' ஒன்னரைவயசு 'மித்து', முன்ன ஒரு நாள் கரண்ட் இல்லாத முன்னிரவுல இடி மின்னல் இல்லாம ஆர்பாட்டமா பெய்ஞ்ச மழை, எல்லா விசேஷத்துக்கும் நான் கட்டிட்டு திரியும் எங்கய்யனோட கல்யாண பட்டு வேட்டி, இப்படி ஒரு வரைமுறையே இல்லாம அரைப்புள்ளி அரைப்புள்ளியா வச்சு நான் எழுதறது.. இதுவும் அழகு தான். (ஒத்துகோங்க.. இல்லாட்டி இன்னும் ஒரு பக்கம் இதே மாதிரி அரைப்புள்ளி தொடரும்.. ஆமா)
இது அத்தனையும் விட "எம்பத்துமூணு வயசாச்சு, இதுல இந்த சிக்கன்குனி வேற வந்து படுத்திபோடுச்சு, உக்காந்தா எந்திருக்க முடியல.. ரொம்ப நேரம் கால தொங்கப்போட்டவாக்குல உக்கார முடியல"ன்னு ஆயிரம் வேதனை இருந்தாலும் பேரன் குடித்தனம் செய்யுற அழகை பார்க்கனும்னு புடிவாதமா சில நூறு கிலோமீட்டர் பயணஞ்செஞ்சு வந்து, 'நம்மூட்டு ஆசாரத்தை வுட வூடு சிறுசா இருக்கு, இதுக்கு இத்தனை வாடகையா'ன்னு அங்கலாய்ப்போடவே சமையக்கட்டுல சேர் போட்டு உக்காந்து வெங்காயம் உரிச்சுகிட்டே 'உம்மச்சானுக்கு பருப்புஞ்சோத்துக்கு கத்திரிக்கா பொரியல் வச்சீன்னா நொம்ப புடிக்கும்'னு நம்ம அம்மணிக்கு 'டிப்ஸ்' குடுத்துகிட்டே நம்ம சின்னவயசு அடாவடிகள 'போட்டுகுடுத்துட்டு' இருக்கிற எங்க அம்முச்சி எனக்கு "அழகு .. பேரழகு".
----
மூணு பேரை கூப்படனுமா..??
யாரு சிக்குவா.. ??
ரைட்டு நம்ம பங்குக்கு இவுங்க..
-வித்யாசாகரன் (ஆளையே காணோம்.. இழுத்து விடுவோம்)
-மோகன்தாஸ (நல்ல அழகான் சினிமா எதாவது கிடைக்கலாம்)
-ஆசிஃப்மீரான் (நல்ல 'அழகான' படம் கிடைக்கலாம்.. ஹீ..ஹி)
--
#221
14 comments:
நல்ல டெச்சிங் அழகு பதிவு...ஒக்கே ஒக்க பேராவா போடாம கொன்சம் கேப் உட்டு அடிச்சிருந்தீங்க இன்னும் நன்னா இருந்திருக்குமே !!!!
மொபைல் கேமராவில் எடுத்ததா பாட்டி படம் ? நோக்கியா ?
வழக்கம் போலவே ... அழகா இருக்குங்கண்ணா..
இத்தனை அழகுகளா?
Super appu kalakipitenga :)
--
Jagan
//இப்படி ஒரு வரைமுறையே இல்லாம அரைப்புள்ளி அரைப்புள்ளியா வச்சு நான் எழுதறது.. இதுவும் அழகு தான்//
Ithu enna kodumainu naanga than sollanum :)
ரவி >> //நோக்கியா ?// நோக்கியில்லா.. சோனி :)
தேவ் / இளா / ஜெகன் >> :)
அனுசுயா>> நம்மள இழுத்து விடுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்.. இப்போ கொடுமை'ன்னு புலம்பி என்ன ஆகப்போகுது :)
paatimma, mamamma,ammamma, papamma, aachi..nnu..ethanai vagayaka koopitalum..avanga alagu alagu than..
Raasaa... Yedho neenda payanam ponadhu polla irundha anaithu azahum... Kadaisiya vayasanna Ammaayii-a illuthu vittu kalakki puttaa... Vazhthukkal-ppu...
Raasaa... Neenda oru payanam ponnadhu pola irundhadhu, nee sonna oru oru azahayum karpanai-la illuthu vandhu parthapodhu... Aanalum kadaisiya Ammaayiya illuthu vittu, vayadhanna kuzhandhaikku vaseegaram kootiyaa, un varthaihael yellam azahu. Vazhuthukkal.
ராசா,
சூப்பரப்பு... படிச்சிட்டே வர்றப்போ லேசா அலுப்பு தட்டினமாதிரி இருந்த சமயத்திலே ஊறுகாயை பத்தி போட்டு சுர்ன்னு ஏறவைச்சிட்டிங்க.... ஹி ஹி... இந்த வார வெள்ளிக்கிழமை பொங்கலுக்கு அதை மறக்கமாட்டோமில்லே :)
ராசா, இதோ நானும் வந்துட்டேன். தாமதத்திற்கு மன்னிக்க.
http://vidyasa.blogspot.com/2007/05/blog-post.html
உடுப்பி கிட்டயா உங்க வீடு? பக்கத்துல இருக்கோம் போலருக்கே! :)
ஐயா இந்த popup பின்னூட்டப் பெட்டியக் கொஞ்சம் மாத்துங்க. பின்னூட்டம் அடிக்கக் கஷ்டமா இருக்கு.
இப்படித்தாய்யா ஒங்களைப் பதிவு போட வெக்க வேண்டியிருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும். நல்ல அழகாச் சொல்லீருக்கீக. பிரிச்சு பிரிச்சுச் சொன்னா நாங்க பிரிச்சு மேஞ்சுருவோம்னு மொத்தமாச் சொல்லீட்டீரே! சரி. மொத்தீர வேண்டியதுதான். :-))
பெங்களூருக்கு வந்திருக்காங்களா? ஊருல நல்ல சலாத்தா இருந்தவங்களுக்கு இங்க அடஞ்சு கெடக்குறது கஷ்டமாயிருக்கும். எதுக்கும் போரம் கருடா எல்லாம் கூட்டீட்டுப் போங்க. நல்லா பொழுது போகும்.
அசத்தல் ராசா...அதிலும் அந்த பொங்கலுக்கு ஊறுகாயும், அம்முச்சியும் சூப்பர் :-)
அட ஏனுங்க என்ற அமிச்சிகளை ஞாபகப் படுத்தி உட்டீங்க? அவிய இப்ப உசுரோட இல்லை. :(
Post a Comment