ஒருத்தரை தொலைபேசியில கூப்பிட்டு, அவர் அந்த பக்கம் ஹலோ'ன்னு சொன்னதும் 'டேய், நான் தான் பேசுறேன்' / 'நான் தாம்பா பேசுறேன்' / நான் தாங்க பேசறேன்'னோ சொல்றவங்க அத்தனை பேரும் நரகத்துல அரக்கன் கையால எண்ணைச்சட்டியில வறுபடுவாங்கன்னு யாராவது ஒரு ஸ்ரீ ஸ்ரீ டகால்டியானந்தா சுவாமிகள் மாதிரியான ஆளுகலாவது அறிவிச்சிடுங்கப்பா..
:(
இவுங்க ரவுசு தாங்கமுடியல.
மத்த நேரத்துல கூட சரிங்க, ஆனா, காலங்காத்தால பெங்களூர் ட்ராபிக்க நொந்துகிட்டு சிக்னல்ல கியரும் க்ளட்ச்சுமா நிக்கும் போது சுத்தியும் அத்தனை சத்தத்துக்கு நடுவால காதுல மாட்டியிருக்கிற ஈயர்போன்ல 'நான் தான் பேசுறேன்'னு சொன்னா.. ங்ஙொய்யால.. நல்லா வருது வாயுல..
சில நேரம் நம்ம மாமனார் வீட்டு ஆளுகலும் இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க.. அதுனால 'நா காக்க' வேண்டியிருக்கு..
மனுசனுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது பாருங்க.. ச்சே :)
img : http://www.jezblog.com/
--
#228
1 comment:
ராசா!
இது காலையோ இரவோ; தெருவிலோ; வீட்டிலோ பேசுவது யாரென்பதைப் பொறுத்துதான் ; இதில் அலுப்பு வரும்
காதலனுக்கு காதலியிடன் இருந்து வரும்" நான் தாங்க பேசுறேன்"
கணவனுக்கு புது மனைவியிடம் இருந்து வரும் இதே "நான் தாங்க பேசுறேன்"
சிலருக்கு சின்னவீட்டில் இருந்து வரும் அதே "நான் தாங்க பேசுறேன்"
எப்பொழுதுமே அலுத்ததில்லை.
அவங்க மூஞ்சியில இருந்து வழியும் ஜொள்ளுவைப் பார்க்கவேண்டும்.
இதுக்குப் போய் இப்படி? அலட்டிக் கொள்ளுறீங்களே!
Post a Comment