Thursday, June 14, 2007

சிக்'ன்குனியா !!

கேரளாவுல சிக்கன்குனியா பரவலா இருக்குதாங்க.. ஆறு மாசம் முன்னாடி நம்மூர் பக்கமெல்லாம் ஒரே ரகளையா இருந்துச்சு, ஆளாளுக்கு முட்டிய புடிச்சுக்குட்டு படுத்திருந்தாங்க.. எல்லா க்ளினிக்'லயும் ஹவுஸ் புல் போர்ட் மாட்டாத குறை..

க்ளினிக் பக்கத்துல இருந்த ஷெட்ட வாடகைக்கு புடிச்சு அங்க பெட் போட்டு க்ளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு ஒரு பெரிய கலெக்ஷ்ன் பார்த்தாங்க. :)

நம்ம சகா ஒருத்தன் மெடிக்கல்ஷாப் வச்சிருக்கறவன்.. 'அது பொற்க்காலம்'ன்னு சொன்னது இன்னும் மனசுல இருக்கு.

இப்ப கேரளாவ ஆட்டிவச்சுட்டு இருக்குதாம், பருவ காத்து வேற அடிக்க ஆரம்பிச்சிருக்கு, மழை கொஞ்சமா வருட்டுமா வேண்டாமான்னு போக்கு காட்டிட்டு இருக்கு.. கொசுவுக்கு அருமையான காலம் தான்.. :( அதுனால நம்மூரு பக்கம் எல்லாம் கொஞ்சம் கிலியாத்தான் இருக்காங்க..

கேரளாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு பரவாம இருக்க தமிழக அரசு முன்னேற்ப்பாடு செஞ்சிருக்குன்னு சொன்னாங்க.. சந்தோசமா இருந்துச்சுங்க .. கொஞ்ச நேரம் வரைக்கும்..

என்ன முன்னேற்ப்பாடுன்னா? பெரிய ஆஸ்பத்திரியில எல்லாம் மருந்துக்கு ஆர்டர் குடுத்திருக்காங்களாம், அதுபோக, கேரளா பார்டர் தாண்டி வர்ற எல்லா வண்டியயும் நிறுத்தி கொசுமருந்து அடிக்கறாங்களாம்.. சித்த முன்னாடி எங்கய்யன் 'பார்டர்' தாண்டி வந்தப்போ அடிச்சிருக்காங்க.. 'சுத்தி சுத்தி அடிக்கறானுக.. டிக்கு ஓப்பன் செய்ய சொல்லி வேற அடிச்சானுக'ங்கிறாரு..

அடப்பாவிகளா.. கொசு பஸ் / வேன் புடிச்சா வருது.. !!

என்ன கொடுமைங்க சரவணன் இது.. :(

நம்ம அரசாங்க இயந்திரத்தோட கடம உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாம போச்சு.. பார்டர் தாண்டி மேஞ்சுட்டு வர்ற எருமைமாட்டுக்கு மருந்து அடிக்கனும்னு கணக்கு எழுதி அள்ளாத வரைக்குஞ்சரி..

--
#229

3 comments:

ILA (a) இளா said...

என்ன கொடுமை சரவணன் இது...

Kupps said...

yaanaikku alwa vaangi pOtta kadhai thaan chikungunya-vukku kosu marundhu adikkaradhu.

வவ்வால் said...

சிக்குன் குனியாவின் துன்பங்களை மறக்க , நிம்மதி பெற எனது சிக்குன் குனியா சிறப்பு கவிதைகளைப்படிக்கவும் ராசா, சென்ற ஆண்டு சிக்குன் குனியாவை தமிழக்கத்தில் இருந்து விரட்ட நான் எடுத்த தனி நபர் முயற்சி என மத்திய சுகாதார அமைச்சர் கூட எனக்கு பாரட்டுத்தெரிவித்தார் எனில் பார்த்துக்கொள்ளுங்கள்!

http://vovalpaarvai.blogspot.com/2006/10/blog-post_10.html