Tuesday, October 9, 2007

எனக்கு 'ஹேப்பி பர்த்டே ' :)

மூணு நாளு மாசம் முன்னாடியிருந்தே எனக்கு 'ஹேப்பி பர்த்டே வருது'ன்னு ஊரெல்லாம் சொல்லி திரிஞ்சுட்டு இருந்தது ஒரு காலம்.. புரட்டாசி கடைசியில வர்ற அந்த கிரகத்துக்கு நம்ம வூட்ல 'ஆடி தள்ளுபடி'யில ஒப்பனக்கார வீதியில அங்கராக்கு வாங்கிட்டு வந்துருவாங்களா, அப்ப இருந்து பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் 'எனக்கு ஹேப்பி பர்த்டே வருது' புராணம் தான்.

'க்வீ'பாலீஷ் பளபளக்க பாட்டா ஷூ போட்டுட்டு, முதுகுல புத்தகபொதியும், ஒரு கையில சாப்பாட்டு பையும், மறுகையில முட்டாய்பொட்டியுமா பள்ளிக்கூடம் போயி பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் எனக்கு ஹேப்பி பர்த்டே'ன்னு சொல்லி முட்டாயி குடுத்து, ரெண்டு மூணு முட்டாய் எடுத்துக்கிற மிஸ்'கள எல்லாம் மனசுகுள்ளாரயே திட்டிகிட்டு, இன்னைக்கு பூராவும் யாரும் நம்மள 'ஷோ யுவர் ஹான்ட்'ன்னு 'ஸ்டிக்' எடுக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல க்ளாஸ் லீடர் பேர் எழுதிவச்சாலும் பரவாயில்லைன்னு பக்கத்துல உக்காந்திருக்கிற சிவா'னையும், சுதா'வையும் வம்பிழுத்து பேசிகிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு போறதுகுள்ளார தீர்ந்துட போகுதுன்னு முட்டய் போட்டியில இருந்து ஒரு கை அள்ளி புத்தக பையில போட்டு வச்ச சரக்க அப்ப அப்ப தொட்டு தொட்டு பார்த்துட்டே சந்தோசமா போயிடும் ஒரு நாள் முழுசும்..

அப்புறம் ஒரு காலத்துல ஆடித்தள்ளுபடியில ஓடிப்போயி வாங்க வேண்டியதெல்லாம் இல்லாம என்னைய கூட்டிட்டு போயி புடிச்ச மாதிரி கோட்டும் டையும் 'பிங்கி ரெடிமேட்ஸ்'ல எடுக்கிற காலத்துல தான் புதுசா சாயங்கால நேரத்துல காலனியில சுத்துற எல்லா குரங்குளையும் கூப்பிட்டு 'ப்ரெட்டிஹவுஸ்'ல ஆர்டர் செஞ்ச கேக்கு மேல மெழுகுவர்த்தி எல்லாம் கொளுத்தி வச்சு அப்புறம் அதை ஊதி அணைச்சுட்டு கேக் வெட்டுற சடங்கெல்லாம்..

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வயசு ஏற ஏற, 'வயசு ஏற ஏற அறிவு ஏறும்னு' நாலு பேரு சொன்னதுல, நம்மளா நமக்கு அறிவு வந்திருச்சுன்னு நினைச்சுகிட்டு, பொறந்தநாளும் அதுவுமா இதென்ன ஊதி அணைக்கிற பழக்கம்னு 'வெவரமா' பேசி புரட்சியா கெளம்பி 'அன்னை இல்லத்து'க்கு போயி டொனேசன் ரசீது வாங்கிட்டு வந்திட்டிருந்தேன்..

இன்னும் கொஞ்சம் வயசு ஏறிப்போயி பொறந்தநாள் அன்னைக்கு வூட்ல இருக்க வேண்டியதில்லைன்னு ஆனதுக்கப்புறம் நடுராத்திரி 12 மணிக்கு புரட்சி பீர்பாட்டில்ல பொங்கிவர ஆரம்பிச்சுது..

மெதுமெதுவா.. நம்ம பொறந்த நாள நம்மளே கொண்டாட கூடாது, நம்மள சுத்தி நாலு பேரு அதை ஞாபக வச்சு கொண்டாடனும்னு தத்துவம் பேசிட்டு திரிஞ்சது சமீபகாலம் வரைக்கும்.. இன்னும் அப்படித்தான் நெனச்சாலும்.. 20 வருசம் முன்னாடி இருந்த கதை தான் இன்னைக்கும் ரிப்பீட் ஆகுது.. என்ன முன்ன நானே போயி ஊரெல்லாம் எனக்கு 'ஹேப்பி பர்த் டே'ன்னு சொல்லிட்டு இருந்தேன்.. இப்போ அந்த வேலைய எனக்கு பதிலா 'ஆர்க்குட்' செய்யுது :)

'வாழ்த்து சொன்ன சங்கத்து சிங்கங்களுக்கு, நண்பர்களுக்கும் நன்றி..

15 comments:

இராம்/Raam said...

சூப்பரு...... ரசிக்க வைச்சிட்டிங்க...

இங்கயும் இன்னோருக்கா ஹேப்பி பர்த்டே... :))

Ayyanar Viswanath said...

happy B'Day rasa

MyFriend said...

me the first. படிச்சுட்டு வர்றேன். ;-)

MyFriend said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். :-)

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் கொங்கு வேந்தரே!

Anonymous said...

ஆப்பி பர்த்டே :-)

முரளிகண்ணன் said...

many more happy returns of the day

துளசி கோபால் said...

ஹேப்பி பர்த் டே டு யூ
ஹேப்பி பர்த் டே டு யூ

கமான் எவ்ரிபடி.......ஹேப்பி பர்த் டே டு யூ

நிலா said...

கொங்குராசா மாமாக்கு இந்த கொங்கு குட்டி இளவரசியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அனுசுயா said...

//அங்கராக்கு வாங்கிட்டு வந்துருவாங்களா//
இதுதான் கொங்கு ஸ்பெஷல்

ஒன்ஸ்மோர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராசா :)

முத்துகுமரன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராசா

Unknown said...

Happy Birthday :)

தகடூர் கோபி(Gopi) said...

//இங்கயும் இன்னோருக்கா ஹேப்பி பர்த்டே... :))//

ரிப்பீட்டே

ILA (a) இளா said...

இப்படி பம்மாத்து போஸ்ட் எல்லாம் வேணாம். ஆர்குட் அந்த வேலைய செய்யுதுன்னு சொல்ல ஒரு பதிவா? விளங்கும். எல்லாம் அம்மணி வந்த நேரமா?

Anonymous said...

Happy B'day Rasaaaa....Wish you many more happy returns of the day.

Anbudan,
Inder