"எங்கயோ செம்மானம் இடறுதுன்னு நான் நினைச்சேன்..
இங்க தான் எம்மானம் இடறுதுன்னு அறியலையே.."
"நீங்க செத்துபோயிட்டா நான் என்னன்னு பாடி அழுகறது"ன்னு சாவோட வலி தெரியாம கேட்ட 9 வயசு பேரனுக்கு அவுங்க அப்பாரு சொல்லி குடுத்த ஒப்பாரி பாட்டு இது.. அன்னைக்கு அந்த பேரனுக்கு பொறந்த நாள் வேற.. அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் பொறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையவே கிடையாது அவருக்கு.
இன்னைக்கு அந்த பேரனுக்கு 61வது பிறந்த நாள்.. இந்த நாள் ஞாபகம் இருக்கறதே, அவரோட தம்பி பையன் பொறந்தநாளுங்கிறதால தான். இன்னைக்கும் வழக்கம் போலவே எதும் விசேஷம் இல்ல.. . அப்பாரு சொல்லிகுடுத்த பாட்டை முதன்முதலா ரெண்டாம்மனுசங்க - மகனும் மருமகளும் - கிட்ட சொன்னது தவிர..
இன்னும் எதேதோ நினைவுகள்.. சப்-ஜெயில் வார்டனா இருந்த அவுஙக் அப்பாரு மீசை, வெள்ளை டவுசர், காக்கி பட்டை'ன்னுபெருமைய எல்லாம் சொல்லிகிட்டிருக்காரு.. மகனுக்கு புடுங்க வேண்டிய ஆணிகளோட ஞாபகம்.. 11.30 மணிக்காவது வேலையிடத்துக்கு போகனுமே.. சாயங்காலம் பேசுவோம்ன்னு ஒடியாந்துட்டான்..
வந்து ஆணி புடுங்கறதுக்கு நடுவால.. இந்த பதிவு.!!
இந்த 29 வயசுல ரெண்டாவது தடவையா எங்கய்யன் கண்ணுல கண்ணீர் எட்டிபார்க்கிறத பார்த்திருக்கேன்.. சாயங்காலம் நேரத்தோட வூட்டுக்கு போகனும்.. யாரவது வந்து 'ஆணிய புடுங்க வேண்டாம்னு' சொல்லுங்களேன்..
* செம்மானம் - செவ்வானம்
* இடறுது - இடி இடிக்கிறது
- கொங்கு பேச்சு வழக்கு
1 comment:
அணியே புடுங்க வேண்டாம்
அப்பாரு தான் முக்கியம்
பொட்டிய கட்டு அப்பு ..
Post a Comment