Friday, September 12, 2008

ஓர் இரவு / ஒரு கேள்வி

"உங்க கிட்ட ஒன்னு கேக்கனும்ங்க", ராத்திரி சாப்பாடு முடிஞ்சதும் மேசையில இருந்து வூட்டம்மிணி தட்டெடுத்துட்டு நகர்ந்ததும் அய்யன் கிட்ட கேட்டேன். ராகி குழாபுட்டும் சுண்டகடல குருமாவும், அவ சமைச்சது, முததடவையா, எங்கய்யனுக்கும் ரொம்ப புடிச்ச ஐட்டம்.., எனக்கும்.

"கேளு" கையத்தொடச்சிகிட்டே கேட்டாரு.

மிச்ச பாத்திரங்கள எடுக்க மறுபடி மேசைக்கு வந்த வூட்டம்மிணிய விலக்க வேண்டி அவசரமா குருமா பாத்திரத்தையும் காலி டம்ளரையும் நகர்த்தி குடுத்தேன். மெலிசா சிரிச்சுகிட்டே வாங்கிட்டு போனா. "கேக்கிறதுக்கு முன்னாடியே சொல்லீறனுங்க, கண்டிசனா சரியான பதில சொல்லோனும்"

" அப்படி என்னத்த கேக்க போற?"

வேகமா தலையாட்டுறேன் "கண்டிசனா சொல்றேன்னு சொல்லுங்க, கேக்குறன்"

கைய தொடச்ச துண்டை மடியில போட்டுகிட்டு நல்லா சாய்ஞ்சு உக்காந்துகிட்டு சரிங்கற மாதிரி தலையாட்டினாரு.

"ரொம்ப நாளாவே கேக்கனும்ன்னு தானுங்க நினைச்சிட்டிருந்தன்.. " கொஞ்சம் தண்ணி குடிச்சிகிட்டேன், "என்னைய பத்தி நிசமாலுமே பெருமையா நினைச்சுக்கறீங்களா...?

....

# 70 [பழைய நினப்பு]



2 comments:

Anonymous said...

அப்பறமா அய்யன் என்ன சொன்னாரு? உங்கய்யன் பதில கேட்டுட்டு எங்கய்யங்கிட்டயும் இதெ கெள்விய கேக்கலாமான்னு ஒரு யோசனை :)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இப்போ எதுக்கு திடீர்னு இந்தக் கேள்வி? எதுக்கும் அட்வான்சா ஒரு வாழ்த்துக்களைச் சொல்லி வச்சுக்கிறேன். :-) எதுக்குன்னு தெரியல்லீன்னாலும்!