நம்மள பார்க்கும் போதெல்லாம், லேட்டஸ்ட் சினிமா பத்தி பேசுவாரு, நானும் ஆர்வக்கோளாறா அங்க இங்க படிச்சத எடுத்துவிடுவேன், அவரென்னமோ ரொம்ப விவரமான பையன்னு தான் நினைக்கிறாரு, ஆனா எங்கய்யன் தான் சினிமா, பாட்டு பத்தி பேசினா பேசிட்டே இருப்பான்'னு ஒரு கடுப்பு பார்வை பார்ப்பாரு. ... ஸ்டாப்.. இப்ப நான் எழுத வந்தது அவரை பத்தியோ இல்லை என்னோட சினிமா அறிவை(!) பத்தியோ இல்லீங்க.. இது வேற சமாச்சாரம். ஒரு வேலையா வேட்டைகாரன்புதூர் வரைக்கும் போகவேண்டியிருந்துங்க. நான், எங்கய்யன், எங்கம்மா'ன்னு குடும்பமே கிளம்பிபோயிட்டு வந்துட்டிருந்தோம், வர்ற வழியில புது வண்டி எடுத்ததுல இருந்த இன்னும் கோயிலுக்கே போகலைன்னு எங்கம்மாவோட ஆசைக்காக அப்படியே ஆனமலை மாசானியம்மன் கோயிலுக்குள்ளார விட்டோம், இல்லாட்டி நம்ம என்னைக்கு கோயலுக்கு போனோம், அதுவும் அய்யன் அம்மா கூட, எதாவது விசேஷ நாளன்னைக்கு மட்டும் நம்ம சகா'க்க கூட கோயலுக்கு போயி வேடிக்கை பார்க்கிறதோட சரி. வேடிக்கை பார்க்கிறதுன்னு தப்பான அர்த்தம் அடுத்துக்காதீங்க.. நான் ஒழுங்கான அர்தத்துல தான் சொன்னேன்.. ;-).
அப்படி கோயலுக்கு போனப்ப தான், எங்களை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டாரு உடையகுளத்து பெரியப்பா, அவர் ஊர் பெரிய மனுஷனாச்சுங்க்ளா, அடிக்கடி கோயில், தாலுக்காபீஸ்ன்னு எங்காவது சுத்திகிட்டே இருப்பாரு. நான் அப்படியே சிரிச்சுகிட்டே 'சும்மா அப்படியே'ன்னு ஒரு மாதிரி இழுத்தேன், சடார்ன்னு எங்கய்யன் 'ராசு, புதுசா வண்டி வாங்கியிருக்கானில்ல, அதான் அப்படியே கோயலுக்கு 'ன்னாரு.
நானா புதுசா வண்டியா?.. ஓ.. என் அக்கவுண்ட்ல இருந்து செக் குடுத்தத இப்படி சொல்றாறா'ன்னு அப்படியே திரும்பி எங்கய்யன் முகத்த பார்த்தேன்.. எங்கய்யன் முகத்துல அப்படி ஒரு பளீர் வெளிச்சம்.
27 வருஷமா ராஜா மாதிரி என்னை வளத்தி, ஸ்கூலுக்கு போகவே RX100 வாங்கி குடுத்து, கப்பல் மாதிரி வண்டியோட்டிட்டு ஊருகுள்ள போற ஆளு, ஒரு சில்வண்டு வண்டிக்கு, அதுவும் அவரா வாங்க முடிவு செஞ்ச வண்டிக்கு என் அக்கவுண்ட்ல இருந்து செக் குடுதுதுட்டு, எல்லாம் அவரே குடுத்தது.. இப்போ.. "'ராசு, புதுசா வண்டி வாங்கியிருக்கானில்ல"வா. பெரியப்பா தோள்ல கைய போட்டுகிட்டு என்னமோ சொன்னாரு, எனக்கென்னவோ உச்சி பூசை சத்ததுல ஒன்னுமே காதுல விழுகலைங்க.
அப்புறம் கோவில்ல இருந்து திரும்பும் போது டர்னிங்க்ல வேகமா திருப்பினேன்னு ஒரு சண்டை.. நமக்கு தினம் ஒரு தடவையாவது அவருகிட்ட வாயை குடுத்து மல்லுக்கு நிக்காட்டி தூக்கம் வர மாட்டேங்குதுங்க.
(தலைப்பு எதுக்குடா 70'ன்னு போட்டிருக்கேன்னு கேக்கரீங்களா.. அடபோங்க.. நம்மளே சொன்னா, நல்லாவா இருக்கும்)
---
#144
27 comments:
ஆக மொத்தத்தில் புது வண்டி வாங்கியிருக்கிறீங்க வாழ்த்துக்கள். ஆனா 70 ன்னா ஒண்ணும் புரியவே இல்லை.
wow.புது வண்டி வாங்கியாச்சா? congrats. ஆனா, 70 வயசுல வண்டி ஓட்டுறது கஷ்டமா இல்லை?? hehe. இப்போ தமிழ்-ல நல்ல type பண்றேனா?? thanks for your guidance.. anyways, when is the treat?
நன்றி அனுசுயா! 70'க்கு கூடிய சீக்கிரம் யாரவது சொல்லிடுவாங்க.. வெயிட் பண்ணுங்க..
பெயர் சொல்லாதவருக்கு >> எப்படியோ சமாளிச்சு 70 வயசுலயும் உங்கள மாதிரி ரசிகர்களோட ஓட்டிட்டு இருக்கேன்.. ;-)
பேரு கூட சொல்லாம ஒளிஞ்சுகிட்டு ட்ரீட் கேட்ட எப்படிங்க??
தன்னுடைய 30-வது வயதில் 70 வருட அரசியல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட எங்கள் தங்கம், கொங்கு நாட்டு சிங்கம் வாழ்க வாழ்க!!
Sidebar-ல் சிம்ரன் வந்து வாழ்த்துச் சொன்னதும் கூட இதற்காகத்தானோ, தல!
பின்னாலேயே தீபக்கை நான் அனுப்பவில்லை!
;-)
===========
marriage in 70 days!
//பின்னாலேயே தீபக்கை நான் அனுப்பவில்லை//
ஓ இது தான் எங்கப்பன் குதிருக்குள்ளார இல்லைங்கிற கதையா??.. ரைட்டு..
//marriage in 70 days! //
அடப்போங்க.. நான் என்ன மேட்டர் சொல்றேன்.. நீங்க என்ன சொல்றீங்க..
//தன்னுடைய 30-வது வயதில் //
அதான் பதிவுல தெளிவா 27ன்னு சொல்லியிருக்கமில்ல.. நீங்க பாட்டுக்கு வயசை ஏத்தினா எப்படி..
ஞான்ஸ்.. u too dint get it..??
வண்டி வாங்கியிருக்கீங்களா? சூப்பர். எனக்கு ரெண்டு சந்தேகங்க ராசா..
ஆர் எக்ஸ் 100 - மோட்டர் சைக்கிள்தானே. பள்ளிக்கூடத்துப் பையனுக்கெல்லாம் வாங்கிக்கொடுத்தா என்னாவுறது. :P
சில்வண்டு வண்டி என்னான்னு சொல்லவே இல்லையே..
இடுகை நல்லாருந்துது..
-மதி
//ஆர் எக்ஸ் 100 - மோட்டர் சைக்கிள்தானே.//
அதே.. யமாகா பைக் (யமன் பைக்குன்னு வேற சொல்லுவாங்க) ஊர்ல 10 டூவீலர் திருட்டு போன அஞ்சு இதுவாத்தான் இருக்கும்.. போட்டுல மாட்டுறதுக்கு இந்த இஞ்சின் தான் சரின்னு திருடி கடல் தாண்டி அனுப்பறதா பேசிக்குவாங்க.. இப்போ 100 இல்லை.. 135 தான்.. 100 அளவுக்கு இல்லைன்னாலும் அந்த எபஃக்ட்காக வச்சிருக்கேன்..
சில்வண்டு வண்டி.. அதாங்க இந்தியா நடுத்தரங்களின் தேசிய வண்டி.. அம்மாவுக்காக வாங்கினது..எனக்கு 135தான்.
//இடுகை நல்லாருந்துது..// நன்றி மதி.
அந்த படத்துக்கும் தலைப்புக்கும் எதாவது???? ஒரு வேளை நீங்க 70 கிலோ குதுப்மினாரோ?
//ஒரு வேளை நீங்க 70 கிலோ குதுப்மினாரோ?//
ஆகா.. இது நல்லா இருக்கே.. இருந்தாலும் உங்க ஆசைக்காக சொலிடறேன்.. நான் 74 கிலோ..
இந்த தலைப்போட அர்த்தத்தை கண்டு புடிக்கறவங்களுக்கு அன்பளிப்புன்னு ஒரு போட்டியே வைக்கலாம் போல.. :-)
தங்கள் தந்தையின் 70வது பிறந்தநாளில் அவரது பாசத்தை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.
ஆமாம், அது என்ன 144 ? எல்லோருக்கும் தடாவா?
70 பதிப்பு போட்ட கொங்கு நாட்டு தங்கமே !!!
தலைப்போட அர்த்தம் சரியா .. பரிசு எதுனா உண்டா
Anyway congrats
//தங்கள் தந்தையின் 70வது பிறந்தநாளில//
எங்கய்யனுக்கு இப்பொத்தாங்க 57..
//70 பதிப்பு போட்ட கொங்கு நாட்டு தங்கமே //
//ஆமாம், அது என்ன 144 ?//
144ங்கிறது பதிவோட எண்ணிக்கைங்க..
சாரி கார்த்திக்.. இன்னொரு சான்ஸ் எடுத்துக்கோங்க..
Koilukku friends-oda vedikkai paaka poravunga ellam ozhungaana arthathoda povaangannu thonale.
Kudumbathoda kovila poi ponnu paatheengalaa? Indha 70kkum adhukkum edhaachum sambandham irukkumo?
அய்யோ.. விக்கட்(!) வழக்கமான பேருல இல்லாம என்ன இந்த தடவை ப்ளாகர் ஐ.டி.'லயே?..
உங்க கணிப்பும் தப்பு..
நான் எங்கப்பா அவர் ஃப்ரெண்டு கிட்ட சொன்னதையும், தாடிக்காரர் ஒண்ணேமுக்கால் அடியில சொன்னதையும் கணக்கு செஞ்சு எழுதினேன்....
ஆனா நான் சொன்னது யாருக்குமே புரியலைங்கிறப்போ... எனக்கென்னமோ நான் "எளக்கியவாதி" ஆகிட்டனோன்னு கொஞ்சம் பயமா இருக்கு.. :-(
#70நு பதிவ போட்டு 'எலக்கியவாதி ?' ஆகிவிட்ட கொங்கு நாட்டு தங்கமே :-)
தாடிதாத்தா(திருவள்ளுவர் - இதுவாச்சி கரெக்டா ?) ரொம்ப சொல்லிருக்குறார்.அதுல எது இது ? அதான் சொல்லிடேனே 'எலக்கியவாதி - ராசானு' பதில சொல்லிடு கண்ணு, என்னக்கு மட்டுமாவது.
தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
அப்பா வள்ளுவர் வழி வாழ்க்கை நடத்துறதா, இவ்வளவு அழகாச் சொன்னீங்களே, உங்களைப் பெற உங்கப்பா என்ன தவம் பண்ணினாரோ!
கரெக்டாப் புடிச்சேனா?
(க்ளூவுக்கு நன்றி)
சதீஷ்.. ;-).. 70 சீட்டா.. அதுவும் நானா?? ம்ம்..கேக்க நல்லாத்தான் இருக்கு
கார்த்திக்..>> கிட்ட வந்துட்டீங்க.. கரெக்ட்டு தான்.. ஆனா அதுகுள்ளார வித்யா புடிச்சுட்டாரே
வித்யா.. நீங்க சொன்னது 67.. அதுவும் சரி தான்.. நான் என் பார்ட்டுல 70ன்னு சொன்னேன்.. ;-)
T.N Election in 70 days!
அப்படியா ஞான்ஸ் ??
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
- குறள் # 70 - அறத்துப்பால் - புதல்வரைப் பெறுதல்
அதிருக்கட்டும் ராசா.. என்னூறா? ALT+0 வா
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல். (70)
விளக்கம்:
---------
மகன், தந்தைக்குச் செய்யும் உதவி இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.
//வண்டி வாங்கிட்டீங்க, அப்புறமென்ன பொண்ண கொண்டு போய் அப்பா அம்மா கிட்ட காட்டிடவேண்டியது தான :)// எப்படி.. அய்யா ராஜ்.. அப்படி யாரும் நம்ம கிட்ட 'ஸ்டாக்' இல்லீங்க ;-)
கோபி, ஞான்ஸ்.. ரெண்டு பேரும் ஆளுக்கொரு தேன்முட்டாய் வாங்கி என்பேரை சொல்லி சாப்பிட்டுகோங்க..
அப்புறம் கோபி.. 800 தாங்க.. அம்மா எங்காவது போகனும்னா எங்கள எதிர்பார்க வேண்டாம்னு.. வாங்கினது
இனி பாட்டுதான், கும்மாளம்தான், ஊர் சுத்தல் தான். நடத்து
//அப்புறம் கோபி.. 800 தாங்க.. //
அருமையான வண்டிங்க.
சாண்ட்ரோ வாங்கியிருந்தா குறள் 69 கூட பொறுத்தமா இருந்திருக்குமில்ல!
;-)
(சான்றோன்க்கு பதில் சாண்ட்ரோ ஓனர்னு போட்டா)
I've tagge you. Check my page for info.
Post a Comment