Friday, February 10, 2006

நான் ரெடி.. நீங்க ரெடியா??


என் இனிய தமிழ் வலைப்பூ மக்களே..
இதோ உங்கள் பாசத்துக்குறிய கொங்குராசா, இந்த வாரம் அவள்விகடனி'ல் வந்திருக்கிறேன்..

அலோ.. யாருங்க அது.. டபாருன்னு ப்ரொளஸர மூட போறது..

சும்மா ஒரு பில்ட அப்புக்காக, இப்படி பாரதிராஜா எபக்ட்டுல சொன்னேன்.. அதுக்குள்ளார பயந்துட்டீங்களே..ம்..ம்.. சரி விஷயத்துக்கு வருவோம்..

ஒரு தமாசான சமாச்சாரம்ங்க.. நம்ம முன்னாடி போட்ட காதல் கடிதம் & பதில் கடிதம் பதிவை 'அவள் விகடன்'ல நம்ம பதிவு முகவரியோட போட்டிருக்காங்கலாம்.. எல்லாரும் இங்க போயி பார்த்துட்டு ராசாவுக்கு ஒரு பாராட்டு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வீங்களாம்..
(ஞான்ஸ்... காது கேக்குதுங்களா..?)

என்னதான் நான் சும்மா மொழிபெயர்த்து போட்டேன்னாலும்.. அது ஒன்னும் பெரிய தப்பில்லீங்களே.. நம்மூருல கதை கட்டுரை சினிமா இதெல்லாம் சுட்டு போட்டுட்டு.. நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதும்.. இதெல்லாம் 'நான் கடந்து வந்த வலிகள்'அப்படின்னு ஆரம்பிச்சு அப்படியே.. ஒரு ரேஞ்சுக்கு எடுத்து விடுறதில்லையா..

அதுனால.. சும்மா ஆளாளுக்கு பின்னூட்டத்துல வாழ்த்து சொல்ல்றத விட்டுபுட்டு.. ஒரு பாராட்டு கூட்டம் நடட்த்திடுங்க.. உலகத்துல எந்த மூலையில நடத்துலாஉம், உங்க அன்புக்கு கட்டுபட்டு நான் வந்து கலந்துக்குவேன்..
(ஃப்ளைட் டிக்கெட் நீங்க குடுத்துருவீங்கள்ள??)

--
#143

24 comments:

யாத்திரீகன் said...

raasaa kalakkipputtiika... mathura maavattaththalaiwakara vattasseyalaaLar maaNpumiku, mathippiRkuRiya,thaanaiththalaivan,ponmanassemmal,pursi thalai aNNan yaaththiriikan thalaimaiyil, wamma kongkuraasaavukku poLLaassiyila avar thalaimaiyilee, avar selavil wataththappatum paaraattukkuuttaththukku anaivarum varuka varukavena varaveeRkinReen ;-)

யாத்திரீகன் said...

ராசா கலக்கிப்புட்டீக... மதுர மாவட்டத்தலைநகர வட்டச்செயலாளர் மாண்புமிகு, மதிப்பிற்குறிய,தானைத்தலைவன்,பொன்மனச்செம்மல்,புர்சி தலை அண்ணன் யாத்திரீகன் தலைமையில், நம்ம கொங்குராசாவுக்கு பொள்ளாச்சியில அவர் தலைமையிலே, அவர் செலவில் நடத்தப்படும் பாராட்டுக்கூட்டத்துக்கு அனைவரும் வருக வருகவென வரவேற்கின்றேன் ;-)

neighbour said...

yaathrikaan avargalae.. ungalaku avalavu periya punai peyar raasavukku onnum illaiyaa...

Rasa just now I read your kadhal kaditham and pathil kaditham..

chumma kalaiputeeenga poonga.... ungalaku nijamaavae paaratu kootam nadathalaaam...

கொங்கு ராசா said...

நாங்க என்ன அரசியல்வாதியா, இலக்கியவாதியா.. இல்ல சினிமாக்காரனா.. எனக்கு நானே பாராட்டு விழா.. அதுவும் என் செலவுல நடத்திக்க..

யாத்ரீகன்.. சும்மானாச்சுக்கும் தமாசுக்கு சொல்றாரு. நீங்க யாரும் அதை நம்பாதீங்க.. நீங்க பாட்டுக்கு விழா ஏற்பாட்டை கவனிங்க.. ;-)

நன்றி.. பக்கத்துவூட்டுக்காரரே.. neighbour'na அதானுங்க,. ;-)

மணியன் said...

பாராட்டுக்க்கள்.

ஏனுங்க, சல்மான்கான் மாதிரி முண்டாபனியன் சட்டையில் 'அவள்'விகடனை அசத்திட்டீங்களாக்கும் :))
(திரைக்குப் பின்னால் ஒளிந்தால் கண்டுபிடிக்க முடியாதா ?)

கொங்கு ராசா said...

மணியன் கண்டுபுடிச்சுட்டீங்களா?? அப்படி என்ன கண்டு புடிச்சீங்கன்னு தனியா என்கிட்ட மட்டும் சொல்லுங்களே..

சல்மான்கான்'னெல்லாம் சொல்லியிருக்கீங்க.. நேர்ல உங்கள பார்த்த கண்டிப்பா ஒரு 'சிங்கிள்' டீ.. என் செலவுல உண்டு.. ;-)

Agent 8860336 ஞான்ஸ் said...

//ராசாவுக்கு ஒரு பாராட்டு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வீங்களாம்..
(ஞான்ஸ்... காது கேக்குதுங்களா..?)// - கொங்கு ராசா.

கேக்குதாவா... இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.... தல!

இதோ... புறப்பட்டு விட்டான்... உங்கள் (போர்)வால்!

ஏற்கெனவே வலைப்பூவில் ஒரு வருடம் நிறைவு செய்ததற்கு வாழ்த்து போஸ்டர் அடித்தும்,
இடைவேளைக்குப் பிறகு திரும்ப வந்ததற்கு வரவேற்பு போஸ்டர் அடித்தும் கலக்கிய உங்கள் ஞான்ஸ்...
இதோ... இப்போது புறப்பட்டு விட்டான்... உங்களுக்கு பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்ய...

அனைவரும் வருக!

இடம்: இங்கே

அனுசுயா said...

கலக்கீட்டீங்க ராசா. இன்னக்கி சாயந்தரம் திருச்சி ரோடு ஆர்யாஸ்ல ஒங்க பேர சொல்லி சந்தோஷமா சின்னதா விருந்து சாப்டாச்சுங்க. ஏதோ அடிக்கடி பத்திரிக்கைல கலங்குங்க ராசா. கோயமுத்தூர்காரங்க சார்புல பாராட்டுக்கள்.

கொங்கு ராசா said...

அனுசுயா>> //திருச்சி ரோடு ஆர்யாஸ்ல // அட என்னங்க நம்ம ரேஞ்சுக்கு, அட்லீஸ்ட் ரெஸிடென்சி'க்காவது போயிருக்கனும்.. வேண்டாம் பீப்பிள்ஸ் பார்க்'காவது போயிருக்கனுமே.. இப்படி சின்னதா முடிச்சுட்டீங்களே.. சரி விடுங்க.. எதோ ஒண்னு விருந்து சாப்பிட்டா சரி..

Dubukku said...

ராசா வாழ்த்துக் கூட்டம் ஒன்னு இங்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
(கொஞ்சம் பொறுங்க...நான் ஊருக்குப் போகிறதுக்கு டிக்கெட் புக் பண்ணிருக்கேன்...போய்ட்டு வந்து அந்த டிக்கெட்ட அனுப்பறேன் வந்து சேருங்க...கூட்ட ஏற்பாடு வகைக்கு முன்பணமாக 500 ரூபாய் அனுப்பவும் கணக்கில் கழித்துக் கொள்ளலாம்)

Cipher said...

பிண்ணிடீங்க ராசா....ஆனந்த விகடன் -ல போட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்... இருந்தாலும் உங்களுக்கு இவ்வளுவு பெண் ரசிகைகள் கூடாது...

thanara said...

எலே என்ர ராசாக்கு நான் வைக்கிறேன்
பாராட்டு விழா.நான் இருக்கேன் ராசா.
ஆராரைக் கூப்பிடோனும் ராசா....
தகவல் அனுப்புறேன் மண்டபத்துக்கு
வந்தால் போதும் ராசா.வரேக்கே உன்
அய்யனையும் கூட்டிவா ராசா, மண்டப
சோலியளை,சிலவுகளை கோடுக்க
வேணுமில்ல. என்ர ராசா மறக்காதை.

capriciously_me said...

aahaa...neengalum prabalam aayaachu...edho engala ellam marandhudaadheenga :P

Uma said...

Treaaaaaat?

Rams said...

அகில உலக ராசா ரசிகர் மன்றம் சார்பிலே உகாண்டால சின்னதா பார்ட்டி கொடுத்த வகைக்கு ஒரு மில்லியன் ஷில்லிங்ஸ்க்கு பில் வீட்டிற்கு அனுப்பி இருக்கேன். மறக்காம கட்டிடுங்க தல.

வருங்கால உகாண்டா ஜனாதிபதி ராசா வாழ்க... :-)))

padmaja said...

hello raasa ,
athu seri motha motha paathu sudoda suda ongala koopittu vivaranm solli vaazhithina enna maranthupittega illa.ennamo ppu nalla iruntha seri.happy blogging .
vaazhthukaludan .veena

கொங்கு ராசா said...

டுபுக்கு சார்.. முன்பணமா??.. நாங்கெல்லாம் யாரு.. எத்தனை பேருகிட்ட முன்பணம் வாங்கிருப்போம்.. எங்களுக்கேவா??

ராஜ்குமார்>.. பெண் ரசிகர்களா??..அட ஏங்க நீங்க வேற..;-)

தனரா> ரொம்ப சந்தோஷம்ங்க..

சி.எம்'ம மறக்க முடியுங்களா??

உமா>> ட்ரீட்? நான் கேட்ட மாதிரி ஒரு விழா நடத்துஙக.. அந்த மேடைய விட்டு இறங்கினதும் உங்களுக்கு ட்ரீட்..

ராம்ஸ்>> எதோ கவுன்சிலர் பதவியா இருந்தாலும் சரி.. பொள்ளாச்சியில வாங்கிகுடுங்க ஏத்துக்கறேன்.. உகாண்டாவுக்கு போக சொல்ரீங்களே.?

அய்யோ வீனா.. உங்கள மறக்க முடியுமா.. உங்களுக்குத்தானே முதல் நன்றியே சொன்னேன்..

Anonymous said...

Hi!! saw your article in 'aval vikatan'. good one... keep it up..

கொங்கு ராசா said...

நன்றி... பேரை சொல்லிட்டு போயிருக்கலாம்ங்களே..!!

Anonymous said...

naangallem silent admirers.. peru solla mattom ;-). anyways, ungalukku innum oru fan kedachachu..hehe

கொங்கு ராசா said...

பெயர் சொல்ல பயப்படும் ரசிகர்கள்.. ம்ம்.. எதோ நாலு பேரு நல்ல இருந்தா சரி

Anonymous said...

btw, tamil-la eppadi comment panradhu.. u can plz delete this comment after replying(even my previous one, if you find it accomodating more space)...thanks in advance.

Appuram oru vishayam. 'Love story-a seekiram mudinga.. nalla novel. dont miss it. :-)

கொங்கு ராசா said...

try http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

or else download e-kalappai, install it and use the same

love story kithathatta mudichitten.

சுதர்சன்.கோபால் said...

தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.