Wednesday, June 30, 2004

நம்ம வரிசையில் இனி பில்கேட்ஸும்..!!

சொந்தமா வலைப்பூ வெச்சிருக்கவங்க எல்லாரும் இனிமேல் காலர தூக்கி விட்டுக்கலாம்.. (நம்மளை மாதிரி சட்டை போடாத ஆளுக தலையில கட்டியிருக்கிற துண்டை தூக்கி விட்டுக்கலாம்.. இதெல்லம் சொல்லித்தர வேண்டியிருக்கு..!)..
பின்னே என்னங்க.. நம்ம இங்கே எழுதறத பத்தி ஒரு கூட்டம் (சரி..சரி.. நம்ம இல்ல.. 'நீங்க' போதுமா!!!.) இதெல்லம் வேலையத்தவன் செய்யிர வேலை, வெட்டிப்பசங்க கூட்டம் அப்படி. இப்படின்னு நிறையா சொல்றவங்களுக்கு பதில் சொல்ல ஒரு மேட்டர் கிடைச்சிருக்குங்க..
ஆனானப்பட்ட.. பில்கேட்ஸ் கூட அவருக்கே அவருக்குன்னு ஒரு blog ஆரம்பிக்கபோறாருங்க..
யாருக்கு எப்படியோ.. நமக்கு ஊருக்குள்ள 'அப்படி என்னத்ததாண்ட கம்ப்யூட்டருல செய்யுற??'ன்னு கேக்குறவனுக கிட்ட பெருமையா சொல்லிக்கலாம்.. 'நான் ஏற்க்கனவே செஞ்சிட்டு இருக்கிற வேலையத்தான் இனிமேல் பில்கேட்ஸ் கூட செய்யபோறாருன்னு'..

போற போக்குல கொங்குபாஷைய பதிவு செய்ய ஒரு பதிவு ஆரம்பிச்சி இருக்கிறத பார்த்தேன். நாமளும் அதுல் பங்கெடுத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.. (இது ஒண்ணு தான் குறைச்சல்!!)

3 comments:

Kasi Arumugam said...

ராசாதிராசா,

இப்படி ஒரு வலைப்பதிவு இருக்கிறதே எனக்கு இன்னிக்குத்தான் தெரிஞ்சுது. வாங்க வாங்க. சுவையா எழுதுவீங்கபோல தெரியுது.

அப்புறம், அந்த குரல் பதிவு ரொம்ப நாள் முந்தி நா.கண்ணன் முயற்சியில் ஆரம்பித்தது. ஆனால் யாரும் பெரிசா அதில் பன்கெடுக்கவில்லை. அப்படியே கிடக்கு. அதை எங்கே புடிச்சீங்க?

Kasi Arumugam said...

oops: பன்கெடுக்கவில்லை= பங்கெடுக்கவில்லை (பண்ணிக் கெடுக்கவில்லை? :))

Anonymous said...

ண்ணா...செம்மயா எளுதறீங்க! நமக்குங்கணா, கோயமுத்தூரப் பத்திப் பேசினாலே நெம்ப சந்தோசமாயிரு...எப்பனாச்சும் mood out ஆயிருக்கும்போது கோட, நம்மூரு காந்திபொரம், டவுனாலு, பூமார்கெட்னு ஆராவது ஆரம்பிச்சா ஒரே ரவுசாயிரு...அதனாலீங்ணா, நம்மூரு நியூசும் அப்பப்ப யெடுத்துடுங்க, ஊருக்கு ஒரு தாட்டி போனமார்ரி இருக்கும்...

- கண்ணன் (knski@yahoo.com)