சத்தமான இரவில்..
முன்னே செலுத்தியது பயணம்,
பின்னே இழுத்தது இதயம்,
நிலவிற்க்கு என்மேல் கோவம்போல்,
வழியனுப்ப வராமல் விலகிநின்றது.
கனத்த இதயம் ஏங்கி நிற்க,
ஈர இமைகள் துணைதந்தது.
உணர்வுகளை பெயரிட முயன்றேன்,
நித்திரை இழந்து பரிதவித்தேன்.
இரவின் நிசப்த்ததிற்க்கு காதுகொடுத்தேன்,
முத்தமிட்டு தோள்கொடுத்தது.
இருளின் கருப்பில் வண்ணம் கண்டேன்,
நிஜத்தின் நினைவில் நிலைத்து நின்றேன்.
இந்த இரவின் விடியலை நாடி,
'நம்பிக்கை' குழந்தை கருவுற்றேன்.
எப்படிங்க இருக்கு??? ஐய்யோ!! இவன் இது வேற ஆரம்பிச்சுட்டானான்னு விசனப்படாதீங்க..!! இது நம்ம சரக்கு இல்ல..!! (நம்மள அப்படியெல்லம் யாரும் நினைக்க மாட்டீங்க.. இருந்தாலும் ஒரு சின்ன பேராசை..)
'சிந்து ஜா'ன்னு ஒரு அம்மணி எழுதியிருக்கிற மேட்டரு இது..!! அவுங்க தங்கிலீஷ்'ல் எழுதியிருந்ததை யுனிகோட்டுக்கு மாத்துனது மட்டும் தான் நான்!!(எதோ நம்மால ஆன ஒரு சேவை).. இது மாதிரி நிறையா எழுதியிருக்காங்க.. நல்லயிருக்கா இல்லையான்னு சொல்ற அளவுக்கு நமக்கு பத்தாதுங்க.. (அப்படியே நான் சொன்னாலும், யாரு அதை ஏத்துக்க போறாங்க??).. யாரவது விஷயம் தெரிஞ்ச பெரியவங்க பார்த்து சொல்லுங்கய்யா!!
(அப்பா..!! எப்படியோ ஒரு பதிவு பண்ணியாச்சு...!!!)
2 comments:
வலைப்பூ மறுமொழிப் பெட்டியில் உங்களைப் பார்த்து இங்கு வருகிறேன். உங்க எழுத்தில் ஒரு நல்ல வேகம் இருக்கிறது. நிறைய எழுதுவீர்களா? :)
என் எழுத்தில் வேகமா???.. என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை!!!!
Post a Comment