Sunday, July 11, 2004

ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!! ( Part II )

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, மீண்டும் தொடரும், என் பயணக்குறிப்புகளுக்கு உங்களை மீண்டும் வரவேற்க்கிறேன்...

ஒரு வழியா..எப்படியோ சமாளிச்சு வண்டிய தூக்கி ஒரு ஓரமா நிறுத்திட்டு, அந்த பக்கமா வந்த ஒரு பள்ளிகூட பையன நிறுத்தி அவனோட சைக்கிள்ல லிஃப்ட் கேட்டு பக்கத்து ஊருக்கு போய்சேர்ந்தனுங்க. அங்க போனா 'ஞாயித்துகிழமையெல்லம் டாக்டர் வரமாட்டரு கண்னு நீ அப்படியே பஸ் புடிச்சு டவுனுக்கு போய்டு'ன்னு K.MUTHUSAMY. MBBS'ங்கர போர்டுக்கு கீழ உக்காந்துட்டு ஒரு பெருசு தகவல் சொல்லுது... (இண்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த்!!!).
நல்ல வேளையா.. அங்க நின்னுகிட்டு இருந்த ஒரு மினிடோர் (அதாங்க.. எலிக்குட்டி விலையில் புலிக்குட்டி வாகனம்னு விளம்பரம் போடுவாங்களே.. சரக்கு ஏத்தர ஆட்டோ..!!) வண்டிய கூட்டிக்கிட்டு போய்.. நேஷனல் ஹைவேஸ்ல அநாதையா நின்னுகிட்டிருந்த என்னோட பைக்க ஏத்திக்கிட்டு நானும் ஊர் வந்து சேர்ந்தேன்.
அப்புறம்.. இப்பொ மாவுக்கட்டு போட்டுகிட்டு, எங்கய்யன்.. 'ஒழுங்கா முறையா போய்ட்டு வராம.. இப்பொ உனக்கும் வண்டிக்கும் சேர்த்து 3 ரூவா செலவுன்னு' திட்டுறத கேட்டுகிட்டு.. விட்டத்த பார்த்துட்டு உக்காந்திருக்கேன்..

மொத்ததில 3 விஷயம்ங்க..
1.கண்டிஷன் இல்லாத வண்டியில வேகம் போகக்கூடாது.
2.அப்படியே போனாலும் என்ன மாதிரி ஹெல்மெட் போட்டுகிட்டு தான் போகனும் (அது மட்டும் போடம நான் போயிருந்தா.. அநேகமா இந்நேரம் நம்ம வீட்டு வாசல்ல.. 'ஊஊ'தான்..)
3. இது ரொம்ப முக்கியமான பாய்ண்ட்டு...ஒழுங்கா போனமா வந்தமான்னு இருக்காமா.. முன்னாடி போறா புள்ளையா பாக்க அலையகூடாது....

ஆனா இதுவும் ஒரு வகையில நல்லதுதான் பாருங்க.. இவ்ளோ நாளா வேலைபாக்குற இடத்துல நம்மல பார்த்தா தள்ளி பொயிடுர ஆளுக கூட இப்போ ஆப்பிள், ஹார்லிக்ஸோட வந்து பார்த்து பேசறாங்க
(நான் ஆளுகன்னு சொன்னது ஆம்பிளைகள மட்டும் தான்......
சத்தியமாங்க........!!!
என்னங்க சொன்னா நம்பமாட்டேங்கரீங்க....
சரி.. சரி ..
பொம்பிள புள்ளைக தான்.. போதுமா!!)

ஆகவே.. தமிழ்கூறும் நல்லுலக மக்களே...யாரும் அவசரப்பட்டு 'அப்பா கொஞ்சநாள் இவன் கிறுக்கரது இருக்காது நிம்மதின்னு மட்டும்' நினைச்சர வேண்டாம்.. இந்த 'ராசா' இது மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் அடங்கிரமாட்டான்..
எழுதியே தீருவான்....தீருவான்....தீருவான்.. (எக்கோ எபக்ட்டு!!)

(பையன் சும்மா வீட்டுல இருக்கானேன்னு எங்கய்யன் மார்க்சீம்கார்க்கீயின்'தாய்'ன்னு ஒரு புஸ்தகம் வாங்கிட்டு வந்து குடுத்திருக்காரு.. அது பத்தி கொஞ்சம் கேள்வி பட்டு இருக்கேன், ஆன பெருசா ஒன்னும் தெரியாது..இனிமேல் தான் எழுத்துக்கூட்டி ஆரம்பிக்கனும்.. )

போய்ட்டு மறுக்கா வரனுங்ன்க..!!!

5 comments:

ராஜா said...

அட பாவி ராசா! பாவம்..ஒரு பொண்ணு பின்னால சுத்தி இப்படி குப்புற அடிச்சிட்டியே!. பரவாயில்ல விடு.அந்த பொண்ண பின்னால மட்டும் பார்த்ததுனால ஏதோ துன்பம் இத்தோட போச்சினு நெனச்சுக்கோ !!. இத்தன அடி வாங்கி, விழுந்தடிச்சி, அத முன்னால போய் பார்த்து, அது மட்டும் ஆயாக் கணக்கா இருந்திருந்தா - வாழ்க்கையே வெறுத்திருப்ப. இந்த மூஞ்சிக்கா இத்தன கஷ்டப்பட்டோம்னு அப்போ உடம்ப விட மனசு ரொம்ப ஃபீலாகியிருக்கும். ஒடம்ப தேத்திக்க இப்போதான் நல்ல சான்ஸ். அத்தால கொண்டாந்து கொடுத்த ஆப்பிள், ஹார்லிக்ஸ் எல்லாம் மிச்சம் வக்காம காலி பண்ணுற வேலைய பாரு.

அத்தோட மறக்காம அந்த "தாய்" ஒழுங்கா படிச்சி முடிச்சி அதப் பத்தி நாலு வரி புளாக்குல எழுது.

இப்படிக்கு,
ஒரு பொண்ண ரொம்ப நாள் பின்னால இருந்து மட்டும் பாத்து ஜொள்ளு விட்டு, ஒரு நாள் முன்னால போய் பார்த்து வாழ்க்கையை வெறுத்த ஒரு அப்பாவி இளைஞன் :((

Anonymous said...

udambai parthukkanga raasa...take care and get well soon.!
Adhithya

Pavals said...

ராஜா, பாண்டி, அதித்யா.. மற்றும் அனைவருக்கும் நன்றி...
(சும்மா வெறும் hairlinfe fractureதான, அதுக்கு போய் இவ்ளோ பில்டப் குடுத்திருக்கியேன்னு, இங்கே நம்ம சகாக்கள் எல்லோரும் காலாய்க்கிறாங்க) :-(

Unknown said...

ராசா நீங்களாவது ரோட்ல போன அக்காவை வேடிக்கைப் பார்த்து விழுந்திங்க. உங்களை கிண்டலடிச்ச ராஜாவைப் பாருங்க.... போயும் போயும் ரோட்ல போற நாயைப் பாத்து.. ஹ்ம்ம் வேண்டாம் ராஜா பாவம்

Unknown said...

உங்க பதிவுகள் படிக்க சொகமா இருக்குது. என்னை மாதிரி சிங்காரச்சென்னையில சிங்கி அடிச்சிட்டிருந்தவங்களுக்கு மத்த வட்டார வழக்கு வீசினா ஆனந்தம்தான்.