(வழக்கம் போல) எங்கய்யனுக்கு சாரதியா கோயமுத்தூர் வரைக்கும் போக வேண்டியிருந்ததுங்க.. சூரியன் FM 105.8'ல்ல.. "குங்குமம், இந்த வாரம், எனக்கு திருமணத்தில நம்பிக்கை இல்லை" கமல் ப்ரத்தியேக பேட்டி"ன்னு நிமிஷத்துக்கு மூனு தடவை சொல்ற இரைச்சல் தாங்காம RAINBOW FM 103'க்கு தாவினேன்.. அப்பத்தான் ஹிந்தி பாட்டெல்லாம் முடிஞ்சு நம்மபக்கம் வந்திருந்தாங்க.. வந்ததும் முதல் பாட்டா.. 7Gரெயின்போ காலனியிலிருந்து
"கனா காணும் காலங்கள், கரைந்தோடும் நேரங்கள்.." போட்டாங்க.. அப்பா.. என்ன பாட்டுங்க அது.. 100-120ல போயிட்டிருந்த வண்டி எப்படி 40-50க்கு வந்ததுன்னே தெரியலைங்க.. எத்தனயோ தடவை கேட்ட பாட்டுதான் ஆனாலும் ஒவ்வொருதடவையும் இந்த பாட்ட கேக்கும் போது எதோ அப்படியே மிதக்கற மாதிரி இருக்குதுங்க ..
அப்படியே அந்த மிதப்புலயே போயிட்டிருந்தேன், ஆனா, டக்குன்னு அடுத்தபாட்டு 'சத்ரபதி'ல இருந்து போட்டு வெறுப்பேத்திட்டாங்க..
(ச்சே, இப்பெல்லாம் கேசட்டும் வாங்கிறதில்லை, இதுக்கு தான் இந்த செட்ட குட்டுத்துட்டு ஒரு நல்ல mp3 ப்ளேயர் வாங்கி மாட்டலாம்னு பாக்கறேன்.. யாராவது எது நல்லா இருக்கும்னு சொல்லுங்கப்பா)
ரொம்ப நாளைக்கு அப்புறம், பிதாமகன் - 'இளங்காத்து வீசுதே'க்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு mesmerising பாட்டு (நடுவால அலைபாயுதே'வில 'உண்மை சொன்னால் நேசிப்பாயா'வும் சேர்த்துக்கலாம்)
பாரதிராஜா - இளையராஜா -வைரமுத்து மாதிரி செல்வராகவன்-யுவன்சங்கர்-முத்துக்குமார் கூட்டணி வரும்போல தெரியுதுங்க..
=====================================
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயதில் மெல்லிய சலனம்
இனி இரவுகளின் ஒரு நரகம்,
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்,
கடவுளின் ரகசியம்
உலகே மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவே இனி மழை வரும் ஒசை
நனையாத காலுக்கெல்லாம், கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வஎறு என்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ
தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே
இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிகொண்டு அந்தி வேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம், தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மவுனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனொ மயக்கங்கள் பிறக்கும்
பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன்?
நில நடுக்கம்.. அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம்.. அது மிக கொடுமை
=========================================
5 comments:
நல்ல ரசனை ராசா...
சீக்கிரம் ஒரு அம்மணிய பிடிச்சு லவ்ஸ் பண்ணி, கல்யாணம் பண்ணுங்க..
இல்ல...ஏற்கனவே நடக்குதா.?? :-)
athennamo theriyala...aanaa avaroda appaa intha paattelllam thambi ketu caara methuvaa oottuthunnu, amma kaathila poduvaaru...appuram amma "dei thambi.. ennaa kalanaam pathi yosikalaamaam" baaha...
oru nalla naal-lla namakku ellam oru pathrikkaiya blog-la poturvaaru...ennanaancholrathu... :-)
//சீக்கிரம் ஒரு அம்மணிய பிடிச்சு லவ்ஸ் பண்ணி.
ஏஞ்சாமி... நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா??
பாலாஜி நீங்க சொன்ன மாதிரி ஏற்கனவே ஒரு தடவை நடந்து.. இப்போ துழாவர படலத்தில இருக்குது.. :-)
நீங்க ரசிங்க வேணாங்கல. இந்த வயசுல ரசிக்காம வேற எப்போ ரசிக்கிறதாம் :P
ஆனா,
>>
நடுவால அலைபாயுதே'வில 'உண்மை சொன்னால் நேசிப்பாயா'வும் சேர்த்துக்கலாம்
>>>
இது 'ஃ' படத்துல வர்ற பாட்டு. அந்த்னான் சாமி முக்கி முனகி பாடுறது :)
//இது 'ஃ' படத்துல வர்ற பாட்டு. அந்த்னான் சாமி முக்கி முனகி பாடுறது
.. சின்ன தப்பாகிப்போச்சு மன்னிச்சுக்கோங்க.. மனிரத்னம் படம்.. பைக்ல போற ஹீரோ.. சின்ன குழப்பமாயிடுச்சுங்க..
Post a Comment