Saturday, December 4, 2004

ஒரு பதிவு, 220+ பின்னூட்டங்கள்.

க்ருபாஷங்கர் : சென்னையை சேர்ந்த ஆங்கில வலைப்பதிவாளர்கள்ல ரொம்ப முக்கியமான ஆளுங்க இவரு. சும்மா போற போக்குல அப்படியே சொல்லிட்டு போற மாதிரியான நடையிலயே பல மேட்டர பதிவு செய்யிற ஆளு. திடீர்ன்னு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு விவகாரமான பதிவு ஒன்னு போட்டாருங்க, அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்க 220 தாண்டி போயிட்டிருக்கு (இன்னும் போகுது).
அப்பப்போ எதாவது விவகாரமான சமாச்சரத்தை பதிவுல எழுதி, அப்புறம் பின்னுட்டத்துல நம்ம ஆளுக பூந்து வூடு கட்டி அடிக்கிறதெல்லாம் சகஜம்தாங்க. ஆனாலும் இந்த சமாச்சரம் என்னமோ கொஞ்சம் ஓவராத்தாங்க தெரியுது..
பதிவுல சொல்லியிருக்கிற சாமாச்சரத்தை விட பின்னூட்டத்துல இருக்கிற விஷயங்கதான் கலக்கலா இருக்குது போய் பாருங்க..
சுட்டி...

(ஆமா, அது நிஜம்மாவே அவுங்க தானா?? )

4 comments:

Anonymous said...

The link doesn't take to the right post.
-dyno

ராஜா said...

நீங்க கொடுத்திருக்குற சுட்டில போய் பார்த்தா ஒண்ணும் காணலியே?

/திடீர்ன்னு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு விவகாரமான பதிவு ஒன்னு போட்டாருங்க/
அப்படியென்னதான் விஷயம் நீங்களே சொல்லிடுங்களேன் :)

மீனாக்ஸ் | Meenaks said...

டிஸம்பர் 4ந்தேதி அவர் போட்டிருக்கிற பதிவின் அடிப்படையில் அந்தப் பழைய பதிவை வைத்திருந்தால் சட்டப்படி அவர் மீது வழக்கு தொடர முடியும் என்று கருதி பழைய பதிவை நீக்கி விட்டார். ஆனாலும் விவகாரமான மேட்டர் தான்.

நான் வீடியோ பார்த்தேன். அவங்க மாதிரி தான் தெரியுது ;-)

Pavals said...

அந்த விவகாரமான பதிவுனால திடீர்ன்னு ராத்திரியில வந்து அரெஸ்ட் செஞ்சிருவாங்களோன்னு 'க்ருபா' அந்த பதிவை நீக்கிட்டாராம். அதை இங்க நான் எழுதி அப்புறம் பொள்ளாச்சிக்கு ஸ்பெஷல்போலீஸ் டீம் வந்துட்டா?? நான் மாட்டேன்சாமீ..!!

அப்படியா மீனாக்ஸ்!! எனக்கு அப்படி தெரியல..