Thursday, December 9, 2004

கல்வெட்டுகள்

--------------------
காலம் கடந்து
பழைய பாதைகளில்
பயணிக்கிற போது
பழைய ஞாபகங்கள்..

அந்த
அறைகள்தான் எங்களின் சொர்கங்கள்..

அந்த
மைதானங்கள்தான்
எங்கள் நட்பு வளர்த்த ஊடகங்கள்..

அந்த
அடுமணைகள் தான்
அன்பு வேரோட தேனீர் ஊற்றிய
அட்சய பாத்திரங்கள்

காக்கைகளாய் தான்
இல்லை இல்லை
காக்கைகளாய் மட்டுமே வாழ்ந்தோம்

காரணமில்லாமல் இறுகிப்போனோம்

உயிரோடு உயிராய் உருகிப்போனோம்

பகலை இரவாக்கி
இரவை பகலாக்கி
காலத்தை வென்றிருக்கிறோம்

எங்கள்
குரல் கேட்காத திரையரங்குகள் இல்லை..

நாங்கள்
பயணிக்காத இரவு நேரப் பேருந் துகள் குறைவு

பணம் எங்களை பாகுபடுத்தவில்லை

குணம் பார்த்து நாங்கள் பழகியதில்லை

எதன் பொருட்டும் எங்கள் நட்பில்லை

அமைந்து போனது அப்படித்தான்..

பிரியும் நேரம் வந் தது

பிரிவு உபச்சரங்கள்
அழுகைகள்
அரவணைப்புகள்
ஆட்டோகிராப்புகள்

பிரிய மனமில்லாமல்
வேறு வழியில்லாமல்
பிரிந்து போனோம்

காலம் கடந்தது, வயது கரைந்தது..

நண்பர்கள் உயர்ந்தார்கள்
உருமாரிப்போனார்கள்

இறுகி உயிராய் கிடந்த
ஒரிரு நண்பர்கள் சந்தித்து கொண்டோம்
வாழ்க்கை பயணத்தில்

அழுது அரற்றிய அதே நண்பர்கள்

கண்ணீர் சிந்திய அதே கண்கள்

இரும்பாய் கனத்த அதே மனது

இவை எல்லாம்
இரண்டு நிமிடத்துக்கு மேல்
என்னோடு நேரம் செலவிட தயராய் இல்லை

அடுத்தமுறை
அவசியம் வீட்டுக்கு வா..

வீட்டருகே சொன்னார்கள்..

நேரத்தின் முக்கியத்துவம் அவர்களுக்கு..

இபோழுதெல்லாம்
மரியாதைக்குரிய மனிதர்களை
எதிரிலே பார்த்தால்..
விலகியே போகிறேன்

காலத்தின் பிணைக்கைதிகள்..
அவர்கள் மீது தவறில்லை..

நிகழ்கால மாற்றம் பார்த்து
பழைய கல்வெட்டுகளை
அழித்தெழுத
நான் தயாராய் இல்லை...

----------------

யாரு எழுதினதுன்னு தெரியலைங்க.. forward mail'ஆ வந்தது..

இதை படிச்சதும் ஏனோ தெரியலைங்க.. எல்லா பசங்களுக்கும் போன் போட்டு சும்மானாச்சும் எதாவது பேசனும்னு தோனுச்சுங்க.. பேசிட்டேன்..


4 comments:

Anonymous said...

நெசம் தானுங்க..பிரிஞ்சு போன ஒரு நண்பனோட திரும்பவும் ஒண்ணா வேலை பார்க்கும் சந்தோஷம் கெடச்சது..ஆனா,ஆறே மாசத்துல திரும்பவும் பிரிவு..உங்க பதிவு பழச எல்லாம் ஞாபகப்படுத்துதுங்க..

--கிணத்துக்கடவிலிருந்து ஒரு குரல்

Unknown said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதேஏஏஏஏஏஏஏஏஏஏஎ

Kasi Arumugam said...

நானும் ரொம்ப நாளைக்கப்புறம் கோவையில் இருக்கும் நண்பருடன் தொலைபேசினேன், உங்களால். ஹும்..

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

I think this was written by Thiru Buhari (or Puhari?)