நேத்து starplusல'காக்கி' போட்டாங்களா சரி பார்க்கலாம்னு உக்காந்தேன், எத்தேசையா அந்த ப்க்கம் வந்தவரு அமிதாப்பு படமான்னு கேட்டுட்டு அவ்ரும் கூடவே உக்காந்தாருங்க, அப்பவே மனசுக்குள்ள தோனுச்சுங்க, இனி படம் பார்க்க முடியாது எந்திரிச்சு போயிருவோம்னு, இருந்தாலும் அமிதாப்புக்காக (சரி, சரி... ஐஸ்வர்யாக்காவும் தான்) ரிஸ்க் எடுக்கலாம்னு உக்காந்தனுங்க.
படமெல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது, ஆனா நடுவால போட்ட அந்த விளம்பிரத்துல தானுங்க வந்தது வினை..
அப்படி என்ன விளம்பரம்ங்கரீங்களா??
அதாங்க இந்த UTI Mutual fundக்காரங்களோட புது விளம்பரம்.
பாத்திருக்கீங்களா??
அப்படி என்னடா இருக்குது அந்த விளம்பரத்துலங்கரீங்களா?? பெருசா ஒன்னுமில்லீன்ங்க.. இதுதானுங்க விளம்பரம்.
------------------------
ஒரு சர்தார் வீட்டு பையனுக்கு பிறந்த நாள்..
அப்பா அவனுக்கு வாழ்த்து சொல்லி, அவனுக்கு ஒரு புது போலீஸ் டிரஸ் குடுக்கிறாருங்க..
குஷியான பையன் புதுத்துணி மாத்திக்க ரூமுக்குள்ள போறானுங்க.. வெளிய அவனோட அப்பா அப்படியே சேர்ல சாஞ்சுகிட்டு, பையன் வளர்ந்து பெரியவன் ஆகி பெரிய போலீஸ் ஆபிசர் ஆகப்போறாங்கிற கனவோட அப்படியே பூரிச்சு போய் உக்காந்திருக்காருங்க..
துணிமாத்திக்க போன பையன் வெளிய வரும்போது..
அவனுக்கு அவுங்கப்பா குடுத்த போலீஸ் டிரெஸ்ச, கொஞ்சம் மாத்தி, கொள்ளைக்காரன் மாதிரி போட்டுகிட்டு, "இனிமேல் நான் தான் ஃகப்பர் (ஷோலே!) "ன்னு சொல்லிட்டு துப்பாக்கிய தலைக்கு மேல சுத்திட்டு ஓட..
கொஞ்சம் பெருமிதத்தோட அப்படியே சிரிச்சுகிட்டு சாஞ்சு உக்காந்திருந்த அந்தப்பையனோட அப்பா அப்படியே ஷாக்காகி, அப்படியே பேயடிச்ச மாதிரி முழிக்கிறப்ப்போ, அப்படியே பின்னாடி UTI Mutual fund'ஓட children career plan பத்தி ஒரு குரல் வரும்..
--------------
விளம்பரம் முடிஞ்சதும் எங்கய்யன் அப்படியே நம்ம பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தாரு பாருங்க, அதுல ஆயிரம் அர்த்தம்..ஆயிரம் நக்கல்..
நான், எதுக்கு வம்புன்னு அப்படியே பாதிப்படத்துல டக்குன்னு எஸ்கேப் ஆகி ஓடிப்போய் படுக்கைய போட்டுட்டேன்.. 'காக்கி' போனா போகுது இன்னொரு நாள் எப்படியும் போடுவான் அப்ப பார்த்துக்கலாம்...