Tuesday, January 4, 2005

சிங்கம்லே...

வழக்கமா ராக்கோழி மாதிரி, எப்பவுமே ரெண்டாவது ஆட்டம் தாங்க நம்ம சினிமாவுக்கு எல்லாம் போறது, இந்த ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போறதுல கொஞ்சம் விசேஷம்ங்க, படத்துக்கு போறதுக்கு முன்னாடி ரெண்டு, மூணு ரவுண்டு போறது, (ராத்திரி வீட்டுக்கு போக எப்படியும் ஒரு ரெண்டு மணியாகிடும் அதுக்குள்ள அய்யன் தூங்கிருவாரு, அதான் ரகசியம்) அப்புறம் காலையில ஏழு எட்டு மணி வரைக்கும் தூங்கி, பொழப்பு கெட்டுபோறதுன்னு, ஒரு தினுசா இருக்கும் சினிமாவுக்கு பொறதே.. திடீர்ன்னு ஞானயோதயம் வந்து, நேத்து ரொம்ப நாளைக்கு அப்புறம் முதலாட்டம் சினிமாவுக்கு போயிருந்தனுங்க.

'காதல்'. ஏற்க்கனவே 'சமுராய்'ன்னு விக்ரம வச்சு ஒரு ப்டம் குடுத்த பாலாஜிசக்திவேலோட ரெண்டாவது படம், டைரக்டர் ஷங்கரோட தயாரிப்புல வந்திருக்கிற முதல் படம்..(அவனவன் சுனாமி வந்து கவலையில கிடக்கறான், நீ சினிமாவுக்கு போன கதை எழுதறயா - மனிதாபிமானி)
சும்மா ஒரே வரியில புதுமுகங்கள் நடிச்சு வந்திருக்கிற இன்னொரு காதல் படம்னு சொல்ல முடியாத மாதிரி, கொஞ்சம் நல்லா எடுத்திருக்காங்க. வழக்கமா எல்லாரும் சொல்ற ஒரு பணக்கார பொண்னுக்கும் ஒரு சராசரிக்கும் கீழான ஒரு ஏழை பையனுக்கும் நடுவால வர்ற காதல் தான் படத்தோட கரு. என்ன வழக்கமா சொல்ற 'தெய்வீக'க்காதல்ன்னு எல்லாம் சொல்லாம எதார்த்தமா நம்ம நடைமுறையில பார்க்கிற அதே முட்டாள்த்தனத்த காட்டியிருக்காங்க. (கிளைமாக்ஸ விட்ருங்க!).
படத்தோட உயிரே அந்த மதுரை நேட்டிவிட்டியில தாங்க இருக்குது, ஹீரோ ஹீரோயின விடுங்க, (அவுங்களும் நல்லாத்தான் நடிச்சு இருக்காங்க), அதைவிட ஹீரோயினோட அப்பாவும் சித்தப்பாவுமா வர்றவங்க, அப்புறம் அந்த மெக்கானிக் கடை குட்டிப்பையன்.. கிளப்பியிருக்காங்க..
"ஒன்னுக்கு அடிக்கனும்னே"ன்னு வண்டியில இருந்து இறங்கி போற பையன்கிட்ட
"சீக்கிரமா வரனும் என்ன"ன்னு ஒரு மிரட்டலோட ஹீரொயின் வீட்டு அடியாள் சொல்ல.
" முடிஞ்சா வந்துருவமில்ல, அதை வச்சு நாங்க என்ன பெட்ரோலா எடுக்க போறோ'ம்னு தெனாவட்ட சொல்லிட்டு போறப்ப அந்த பையனோட நடிப்பும் டயாலாக் டெலிவரியும்..
அப்புறம் ஹீரொயினோட அப்பா வச்சிருக்கிற டாட்டா சூமோவுல எழுதியிருக்கிற அந்த வரி .. "சிங்கம்லே..". . அதாங்க மண்வாசனை. :-)
என்ன.. இடைவேளை வரை இப்படியே எதார்த்தமா போற படம் அப்புறம் கொஞ்சம் வழக்கமான காதல் படம் பாணியில (அதுவும் அந்த மேன்ஷன் பாட்டெல்லாம்.. சாமீ!) போகுதுங்க, அதுவும் கடைசி பத்து நிமிஷத்துல டைரக்டர் சொல்ல வர்ற மனிதநேயம் அசல் சினிமாத்தனம்.. , ஆனா டைரக்டர் அதுதான் உண்மை, அதை அடிப்ப்டையா வச்சுத்தான் படமேங்கிறாரு.. சரி அதுவும் நல்லாத்தான் இருக்கு, கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாத்தான சினிமா..
இந்த படத்த பத்தின விமர்சனம் படிக்க ஆசைப்படுறவங்க, ஹரன்பிரசன்னாவோட பதிவை பாருங்க.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம கூட வந்த சகாவுல ஒருத்தன் "ஹீரொயின விட, அந்த பொண்னு கூட கொஞ்சம் உயரமா கண்ணாடி போட்டுகிட்டு இன்னொரு பொண்னு வருதே அந்த பொண்ணு தாம் பங்காளி நல்லா இருக்குது'ன்னு புலம்பிகிட்டே இருந்தான், நான் தான் சரியா கவனிக்கல போலிக்குதுங்க (வழக்கமா நான் எப்பவுமே பொண்ணுகள அவ்வளவு தீவிரமா பார்க்கிறதில்லைங்க,, ஹி.. ஹீ..!)
படம் நல்லா இருக்குது, ரொம்ப தரமான படம்னு பேசிக்கறாங்க..

மொத்தத்துல.. 'காதல்' வழக்கமான காதல் படமில்லைங்க. எங்கேயும் போரடிக்காம, இடுப்ப குலுக்கிட்டு ஆட்டம் போடாம, பறந்து பறந்து சண்டை போடாம.. இயல்பா, எதார்த்தமா ஒரு .. "ம்..நல்லா இருந்துச்சு" வகை படம்..

(அதென்னமோ, முடிவு கொஞ்சம் சோகமா இருந்தா, இல்லை மனச சங்கடபட வச்சாத்தான், நல்ல படம்ங்கிறாங்க.. நமக்கு தான் அந்த கிரகமெல்லாம் புரியவே மாட்டேங்குதுங்க.)

6 comments:

வசந்தன்(Vasanthan) said...

உங்கள் பதிவுக்கு நன்றி. தரமான படங்களை அடையாளங்காட்டி நாலு வார்த்தையாவது சொல்ல வேண்டும். நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை.

ரவியா said...

//படத்துக்கு போறதுக்கு முன்னாடி ரெண்டு, மூணு ரவுண்டு போறது//

ஒன்னு ரெண்டு போட்டாலே பட கதைப் புரியாது (எனக்கு)...ஹரிப்ரசன்னா பாத்த படம் தான் பாத்தீங்களா ராசா?

ILA(a)இளா said...

Good review, check my review also, as this is the real story we cant expect the cinematic climax as you said " this movie is not usual like others"

www.binarywaves.blogspot.com

capriciously_me said...

thnx for visiting my blog...

mechanic kadaila velai seiyyum andha chinna payyan, like u have mentioned, kalakittan....also, heroine-oda appava screen-la paatha enake oru bayam...angeyum characters-a kalakkala choose panni irukiraar director...since its a true story, nothing can be told abt the tragedy in the movie...is kinda depressing tho :)

on the whole, i thot that it was a god movie...must watch it once...very nice to see the variety that we get to see in tamil movies...

கொங்கு ராசா said...

வசந்தன்.. தவற விடாம பாருங்க, நல்ல படம்தான்..

ரவியா சார், உங்களுக்கு வயசாயிடுச்சு போல, நமக்கெல்லாம் ரெண்டு மூனு ரவுண்ட் தாங்கும்..

thanx ILA & capriciously_me.. (நம்ம பதிவுக்கு இங்கிலிபீஸ்காரங்கெல்லாம் வராங்கப்பா..)

இளவஞ்சி said...

// அதே முட்டாள்த்தனத்த காட்டியிருக்காங்க //
என்ன பன்னறது ராசா... அந்த முட்டாள்த்தனத்த நாமெல்லாம் தாண்டி வந்துட்டனாலதான் அது முட்டாள்தனம்னே நமக்கு தெரியுது...!

இத்தனை காதல் படங்கள் ஓடரதே நம்முடைய காதல்களும் அதை பற்றிய நிராசைகளும் தானால்தானோ..!