சமீப காலத்துல நான் பார்த்த படங்கள்லயே அற்புதமான ஒரு படைப்புன்னா அது சூப்பர் குட் பிலிம்ஸின் திருப்பாச்சி தானுங்க, என்ன படம், என்ன கதை, பின்னீட்டாங்க, எல்லாரும் சும்மா சொல்லுவாங்க, ஒவ்வொரு படத்துக்கும் 'இது ஒரு வித்தியாசமான' படம்ன்னு, ஆனா நிஜம்மாலுமே சொல்றனுங்க, இந்த படம் ரொம்ப வித்தியாசமான் படம்ங்க.
ஊருல கொல்லம்பட்டரை வச்சிருக்கிற ஒருத்தன் (அதுதான் நம்ம விஜய் - சிவகிரி) பட்டணத்துக்கு தங்கச்சிய கட்டிகுடுத்துட்டு (சென்னை), அப்புறம் அங்க நடக்கிற ரவுடியிசம் பொறுக்க முடியாம தவிச்சு, நடுவால தன்னோட சினேகிதன் ஒருத்தன் அந்த ரவுடியிசத்துக்கு பலிகுடுத்து, .... அப்புறம் பொங்கியெழுந்து, தன் தங்கச்சி வயித்துல வளர 'அந்த சிசு மேல' சபதம் எடுத்து, அந்த குழந்தை பொறக்கறதுக்குள்ளார அந்த ஊருல இருக்கிற எல்லா ரவுடியயும் கொன்னு தன்னோட தங்கச்சி குழந்தைக்கு ஒரு அமைதியான சமுதாயத்த ஏற்படுத்தி குடுக்கறாரு.. எவ்ளோ வித்தியாசமான படம்...
நான் வழக்கமாவே ஒரு படம் பார்த்து, நல்லாயிருந்தா மறுபடியும் படத்து போலாம்னு கிளம்பினா அதே படத்துக்கு போயிருவேன், தேவையில்லாம இந்த மாதிரி ரிலீஸ் படத்துக்கு, அதுவும் ஏற்க்கனவே 'மதுர'ன்னு ஒரு சூப்பர் ஹிட் படம் பார்த்த அனுபவத்துல, இந்த படத்துக்கு போகும் போது கடைசி வரைக்கும், 'டேய் வேணாம்டா, மருபடியும் ஒருதடவை காதல் வேணுமின்னா பார்க்கலாம், இந்த பொங்கல் ரிலிஸ் திருப்பச்சி, ஐயா எதுவும் வேண்டாம்டா"ன்னு கடைசி வரைக்கும் போராடுன்னங்க, அதையும் மீறி "வாடா! காமெடியா இருக்கும் நம்மாளு எதாவது மெசேஜ் சொல்லூவான், கேட்டுட்டு வரலாம்னு"கூட்டிடு போயிட்டானுக.. எல்லாம் என் விதி...
அப்புறம் என்ன வித்தியாசம்ங்கரீங்களா?? சொல்றேன், படத்துல 'பான்ப்ராக்' ரவின்னு ஒரு வில்லன்,இது வித்தியாசம் நம்.1, அவன் கொலஒ செய்யிற ஸ்டயில் இருக்குதே அதுதான் ஹைலைட்டு, நம்ம் வூட்ட்ல கரப்பான் பூச்சி கொல்றதுக்கு வச்சிருப்பமே HIT அதை எதிராளியோட வாயுல அடிச்சே கொல்லுறாம் பாருங்க அது தான் வித்தியாசம் நம்.2..
இதுக்கு மேல இந்த படத்த பத்தி எழுத முடியலைங்க, எனக்கு அதை நினைச்சாலே, ..ம்ம்.. முடியலைங்க, பட்ட கால்லயே படும்பாங்க, எனக்கென்னவோ இந்த தை பிறந்த்தலிருந்தே இப்படியே நடக்குது..
சன் டீ.வி ஸ்டையில்ல சொன்னா : திருப்பாச்சி.. வெறுப்பாச்சி
3 comments:
திருப்பாச்சி - ஊத்திக்கிச்சி. இது எப்டி இருக்கு?
அதுல வில்லன் பேரு சனியனாமே. அதோட "நான் சனிடா. புடிச்சா வுடமாட்டேன்"னு வில்லனுக்கு, அதான் சனியனுக்கு, ஒரு பஞ்ச் டயலாக் இருக்காமே. நானும் அதுமாதிரி வெக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கும்போது எவனோ காப்பியடிச்சுட்டாங்க. அதுக்காகவாச்சும் பாக்கணும்.
உங்களுக்கு திருப்பாச்சி சோகம் என்டால், எனக்கு ஆயுதம்! திருப்பாச்சிக்கு சனம் நிரம்பிவிட்டதென்று திரும்பிப்போகலாம் என்று போனால், நண்பன் சொன்னான், மினக்கெட்டு வந்தானங்கள் ஆயுதம் பார்ப்பமடா என்று. சரி சிநேகாவையும் நம்ம வெடிவெடி வடிவேலையும் பார்க்கலாம் என்று போனால், அந்த சோகத்தை ஏன் கேட்கிறியள்? ஆயுதம் - அற்புதம்.
நீங்கள் சன் ரீவி ஸ்ரையிலில் சொல்வதையும் கேட்க ஆவல்? ::)
PAthu raasa...sunaami varaumpodu padam pathiya??ADHU jaagiradhai.beware of karuthu aripan
Post a Comment