GlobalRichlistங்கிற தளத்துல நம்ம வருமானத்த வச்சு எதோ கணக்கு போட்டு சொல்றாங்க..
இப்படி ஒரு வரிசையில நம்ம வர்றதுல ஒரு அல்ப சந்தோஷம்ங்க, யாரு என்ன சொன்னாலும்.. நம்ம பொழப்புதனம் நமக்கு தானுங்க தெரியும்,
How rich are you? >> I'm loaded. It's official. I'm the 754,307,892 richest person on earth! |
---------------------
பாலாவின் சிந்தனை
etamil பாலா அவரோட வலைப்பதிவுல கடந்த வாரத்தில் என்னை சிந்திக்க வைத்த தமிழ்ப்பதிவுகள் சில'ங்கிற தலைப்புல ஒரு பதிவு போட்டிருக்காருங்க, அதுல என்ன விஷயம்ன்னா அவரு அந்த லிஸ்ட்ல நம்மளோட முந்தயபதிவையும் சேத்திருக்காருங்க. நம்ம பதிவை படிச்சுபுட்டு அவர் என்ன சிந்திச்சாருன்னு தெரியலைங்க, எனக்கென்னவோ, "இப்படியெல்லாம் கூட வெட்டியா ஒரு பதிவு எழுதலாமா?"ன்னு சிந்திச்சிருப்பாருன்னு தோணுதுங்க, கரெக்டுங்களா பாலா?
-------------------------
தமாசு
Ms.Independent'ன்னு ஒரு பஞ்சாப்பகார அம்மணி அவங்களோட writings on d wallங்கிற வலைப்பதிவுல ஜோக் ஒண்ணு போட்டிருக்காங்கபோய் பாருங்க.. அய்யோ!!
ரெண்டாவது தடவை படிச்சு தான் அவங்களுக்கு அந்த தமாசு சமாச்சாரம் புரிஞ்சுதாம், நமக்கு நாலஞ்சு தடவை படிச்சு தாங்க புரிஞ்சுது,ம்ம், என்னத்த செய்யறது, நம்ம இங்கிலிபீஸ் அறிவு அப்படி.... (ஆயிரம் இருந்தாலும் நம்ம மெக்ஸிக்கோ ஜொக் மாதிரி வராதுங்க)
-------
புதுசு
புதுசா நம்ம வலைப்பக்கத்துல ஒரு கடியாரம் தொங்க விட்டிருக்கேன், நல்லா இருக்குதுங்களா??
1 comment:
7ஜி நல்லாருக்குன்னு சொன்னீங்களா... வீடியோ எடுத்துப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது.
காதல் இப்போ டக்கரா இருக்குன்னு சொன்னீரா... எடுத்தேன்! அப்படி எதுதான் புதுசா இருக்கு என்று யோசிக்க ஆரம்பித்தேன்... (காதலுக்கு எல்லாம்) வயசாகிப் போச்சோ என்று சிந்தனை தொடர்கிறது :-S
Post a Comment