Friday, April 1, 2005

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது


"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்
எதை கொண்டு வந்தாய் நீ அதை இழப்பதற்க்கு.."


என்னாடா இப்படி கீதாஉபதேசமெல்லால் சொல்றானேன்னு பார்க்கரீங்களா.. அப்புறம் வேற என்னங்க செய்ய சொல்றீங்க, 4 1/2 இஞ்ச் போர்... 600 அடி போட்டு.. புகையா போனா வேற என்ன செய்ய சொல்றீங்க.
ஏற்க்கனவே மாசம் 50 நடை தண்ணி லாரியில வாங்கி ஊத்திட்டு இருக்கம்ங்க. நடைக்கு 300 ரூவா..!!

ம்..ம், இதே காசு, ஒரு 4 வருஷம் முந்தி சென்னைபட்டனத்துல, ஜெமினி மேம்பாலத்துகிட்ட, பொண்ணுக காலேஜ் எதிர்த்தாப்புல, ஏ.சி.யில உக்காந்து வேலைபாத்துட்டு, ஒரு மாசத்து வருமானமா வாங்கிட்டு இருந்தப்ப பெருசா தெரியலைங்க. இப்ப தெரியுது..

'சரி, மேற்க்கயாவது தண்ணி இருக்கில்ல, இதுக்கு ஏன் சலிச்சுக்கிற'ன்னு சாதரணமா சொல்லிட்டு போறாரு எங்கய்யன், நமக்கு தான்.. வயித்த கலக்குதுங்க.. பத்தாவது படிக்கிறப்போ 'the road not taken'ன்னு ஒரு poem இருந்துச்சுங்க, அதெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க..

என்னவோ போங்க..
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்"

9 comments:

இராதாகிருஷ்ணன் said...

//ஏற்க்கனவே மாசம் 50 நடை தண்ணி லாரியில வாங்கி ஊத்திட்டு இருக்கம்ங்க. நடைக்கு 300 ரூவா..!!// கஷ்டந்தாம்போங்க. இந்த சொட்டுநீர் பாசனத்தையெல்லாம் முயற்சி செஞ்சுருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதுக்கான ஆரம்ப செலவு கொஞ்சம் ஜாஸ்தின்னு வேற கேள்விப்பட்டேன்.

Moorthi said...

அய்யா ராசா.. மனசு ஒடைஞ்சுறாதீங்கய்யா.. நம்ம மாதிரி ஏழ பாழைங்களுக்கெல்லாம் வானம்தான்யா கடவுளு. எல்லாம் அவன் பாத்துப்பான்யா.. அதுக்காவ நீங்க சும்மா இருக்க வேண்டாமுய்யா.. பாரத்தை தூக்கி அவன் மேல போட்டுட்டு செவனேன்னு நீங்க உங்க கடமய செய்யுங்கய்யா.. எல்லாம் தானா நடக்கும்..

கொங்கு ராசா said...

//இந்த சொட்டுநீர் பாசனத்தையெல்லாம் முயற்சி செஞ்சுருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

'ட்ரிப்ஸ்' எல்லாம் போட்டு வருஷம் மூனாச்சுங்க,
அதை போட்டுதான் இவ்வளவு பாடுங்க.. அதில்லாட்டி.. போன வருஷமே வெட்டி விறகுக்கு போயிருக்குமுங்ண்ணா..

வித்யாசாகரன் said...

பொள்ளாச்சி பக்கம் விவசாயிங்க எல்லாரும் கால காலமாப் பண்ணிட்டு இருந்த பயிர்களை விட்டுட்டு தென்னைக்கு மாறினதாலதான் தண்ணிப் பிரச்சினை வந்துச்சு-ன்னு கேள்விப் பட்டேன், ராசா! உண்மையா? நீங்க படிச்சவங்க. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அந்த ஏரியா விவசாய முறையில ஏதும் தப்பு இருக்குங்களா?

கொங்கு ராசா said...

//பொள்ளாச்சி பக்கம் விவசாயிங்க எல்லாரும் கால காலமாப் பண்ணிட்டு இருந்த பயிர்களை விட்டுட்டு தென்னைக்கு மாறினதாலதான் தண்ணிப் பிரச்சினை வந்துச்சு//
அதுவும் ஒரு காரணம்தானுங்க, ஆனா பருத்திய எடுத்துக்கோங்க..
இன்னைக்கு இந்தியாவுல பருத்தி விவசாயமே கிடயாதுங்கிற ரேஞ்சுக்கு ஆகிப்போச்சு, எல்லாம் BT காட்டன் தான். அப்புறம் இன்னொன்னு, தென்னை கொஞ்சம் சொகுசான விவசாயம்ங்க, நிறைய பேரு அப்பனாத்த உண்டாக்குன தோப்ப வச்சுகிட்டு, 'அன்னான்ந்து பார்த்தா காசுன்னு'சௌகரியமா இருந்துட்டாங்க, அதுவும் ஒரு காரணம்..
எல்லாத்துக்கும் மேல.. மழை வரனுமில்லீங்க, அது தான் மாறிப்போசே நம்மூருல..
ஒரு சந்தோஷம்.. இதை எழுதிட்டு இருக்கும் போது, இப்ப வெளிய மழை தட்டிட்டு இருக்குதுங்க.. ம்.. ஒரு பதினஞ்சு நாளைக்கு தண்ணி லோடு தேவையில்லை.. :-)

Anonymous said...

//"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
//

//அதில்லாட்டி.. போன வருஷமே வெட்டி விறகுக்கு போயிருக்குமுங்ண்ணா..
//

சரிதானுங்களே??

//எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்//

இதுவும் சரியாத்தான் நடக்கும். கவலைப்படாதீங்கோ...

--பாண்டி

Wordsworthpoet said...

போர் போடறதுக்கு முன்னாடி, அந்த எடத்துல நீரோட்டம் இருக்கா?.. எவ்ளோ ஆழம் போட்டா தண்ணி வரும்?... அப்டீனு நீங்க போட்ட சோதனைகள் ரிசல்ட்-ல ஏதும் கோளாறா?.

நீரோட்ட சோதனைய சில பேரு, கையில தேங்காய வச்சுகிடு, அது ஆடுதானு பாக்குறது, இல்லாட்டி, wrist watch-அ ஒரு சின்ன கம்பியில கட்டி கையில புடிச்சுகிட்டு நடந்துகிட்டே, watch- கிர்...ர்னு சுத்தி வர்ர எடத்ததுல போர் போட சொல்றாங்கன்னு கேள்வி.

-----
விடுங்க ராசா...
போரைத் தானே இழந்தோம்... போர்க்களத்தை அல்லவே...
-------

SATHYARAJKUMAR said...

எல்லாரும் போர் போட்டுப் போட்டுத்தான் போர் போட்டா தண்ணி கிடைக்கறதில்லைன்னு சொல்றாங்களே? நிசமா ராசா?

[கூட இருந்தே போர் போடறேன்னு நினைச்சுக்காதிங்க. ஒரு பொதுவான கேள்வியைத்தான் கேக்கறேன் :-) ]

கொங்கு ராசா said...

நல்லதா நடக்கும்ங்கிற நம்பிக்கையில தானுங்க பாண்டி வாழ்க்கை ஓடுது..Wordsworthpoet >> டிவைனர கூட்டிட்டு வந்து பார்த்து தான் போட்டோம்.. அதுவும் இந்த கதை தான்.. வர வர டிவைனர்களும் ஜோசியகாரங்க மாதிரி ஆயிட்டாங்க.. என்னத்த சொல்றது போங்க..

"வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறாலாம்..
போரும்தான் மாறுமா" :-)

சத்தியராஜ்குமார் சார் >>
// எல்லாரும் போர் போட்டுப் போட்டுத்தான் போர் போட்டா தண்ணி கிடைக்கறதில்லைன்னு சொல்றாங்களே? //
அது நிசந்தானுங்க.. ஆனா எல்லாருக்கும் பசிக்குதே.. தீர்ந்து போயிறும்ங்கிறதுக்காக அரைவயிறோ/பட்டினியோ இருக்க முடியாதுங்களே.. ஒரு வேளை திருப்பூர் மாதிரி இடங்கள்ல சாயப்பட்டரைக்காரங்க நிலத்தடி தண்ணீர உறிஞ்சறத வேணுமின்னா தப்புன்னு சொல்லலாம் (ஆனா அவுங்களுக்கும் பசிதான் பாவம்??), ஆனா நம்மூருபக்கம் எல்லரும் போர் போட்டது அவுங்கவுங்க விவசாயத்த காப்பாத்திக்கதானுங்களே.. அதை எப்படிங்க தப்புன்னு சொல்றதுங்க..????