மொட்ட மாடியில மல்லாக்க படுத்துகிட்டு, ரெண்டு நாளா அடிச்ச கோடை மழையோட சிலுசிலுப்ப ரசிச்சுகிட்டே, தென்னங்கீத்துக்கு நடுவால மின்னுர நட்சத்திரங்களயும், பொளர்னமிய நெருங்கிட்டு இருக்கிற நிலாவயும் பார்த்துகிட்டு.. அப்படியே ரேடியோவ போட்டா, அதுல 'ராஜபார்வை'யில இருந்து 'அழகே அழகு' பாட்டு.. அடபோங்கப்பா 'சிப்லா' இன்னைக்கு 10 ரூபா ஏறியிருந்தா என்ன, இறங்கியிருந்தா என்ன.... என்ன பாட்டு.. என்ன இசை..என்ன காத்து.. சொர்கம் சொர்கம்ங்கிறாங்களே.. அது இப்படிதானுங்க இருக்கும்.
------
அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது
அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே
அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
-----------
கரண்ட் போனாக்கூட, எத்தனை இருக்குது ரசிச்சு சந்தோஷப்பட. அதை விட்டுட்டு எதுக்கெடுத்தாலும் ஆயிரம் நொட்டை சொல்லிட்டு.
#82
10 comments:
இன்னா ராசா,
தாகூர் ரேஞ்சுக்கு போயிட்டீங்க போல. ஒரு தடவை ரபிந்தரநாத் தாகூர் கவிதை எழுத ஒரு படகில் ஏறி அமைதியாக நதியின் நடுவில் சென்றாராம். விளக்கு வைத்து கவிதை எழுத நினைத்தவர் ஒன்னுமே தோனாம மொன்னையா உட்காந்திருந்தாரு. அட போங்கப்பா! கவிதையாவது ஒன்னாவது என்று விளக்கை அணைத்தவர், இந்த ரம்மியமான இருட்டில் வானில் முழுமதியுடனும், நட்சத்திர சிணுங்களையும் கண்டவர். தன்னை மறந்தார். வடித்தார் கீதாஞ்சலி.
அந்த மாதிரியா?
அந்த ராஜபார்வை பாட்டு ராசாபார்வையில் sorry sorry ராசா காதில் விழுந்திருச்சா? நல்ல பாட்டுல்ல. அடுத்த செக்மெண்ட் பார்க்குறதுக்கு முன்னாடி பிரேக்....
நல்லா எழுதறீங்க ராசா, நிறைய எழுதுங்க :)
இதுக்காகவாவது அடிக்கடி உங்கவீட்டுல கரெண்ட் போகணும் .. நற..நற.... ;)
kalkitte raasaa....
Sir thedirunnu romantic moodu-kku poyitaarru ;-) Veetla kalyanam pesitaangala ?
kavidhai, kavidhai...
romba poraamaiya iruku ungala paatha...we were discussing almost the same thing a couple of days ago here...spring time...wonderful weather...idhuve india-va irundhirundha veetu kadhava therandhu vechittu veleela kattil pottu paduthukalaam..inge idhellam pannina mudhalla 911 koopittu dangerous characters in the neighbourhood-nu complain pogum...adada...neenga enjoy maadi :)
நன்றி மக்களே!! ..ம்ம்ம்.. வைரமுத்து வரிகளுக்கு சொல்ல வேண்டிய பாராட்ட இங்க கமெண்ட்'ல சொல்லியிருக்கீங்க எல்லாரும்..
// இதுக்காகவாவது அடிக்கடி உங்கவீட்டுல கரெண்ட் போகணும் .. நற..நற.... ;)//
நாராயண்.. நிஜம்மாவே தினமும் ராத்திரி 9ல இருந்து 10 மணி வரைக்கும் இப்போ கரண்ட் கட் பண்ணிடறாங்க.. ஒரு நாள் கரண்ட் போனா கவிதை.. தினமும் போனா, கவிதையாவது.. #@%%#வது.. நேத்து FMஅ போட்டா, 'துண்ட காணோம், துனிய காணோம்..'ங்குது... :-(
cipher சார்.. எதோ நிம்மதியா மல்லாக்க படுத்துட்டி பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. அதுல உங்களுக்கு என்னங்க இவ்ளோ பொறாமை..
என்னங்க CM.. இன்னும் தடங்களுக்கு வருந்துகிறேன் தானா... டி.டி. தோத்துரும் போல..
Rasaa : vairamuththu? no.. the song was written by Kannadasan.
முன்னவர்," ... கொஞ்சமிரு நெஞ்சு பொறு/தாவணி விசிறிகள் வீசுகிறேன்/மன்மத அம்புகள் தைத்த இடங்களில்/சந்தனமாய் எனைப் பூசுகிறேன்.." ன்னு ஆகாசத்துலே பறப்பார். கண்ணதாசன் கொஞ்சம் டவுன் டு எர்த். "...மூங்கிலே தோள்களோ/தேன்குழல் விரல்களோ/
ஒரு அஙகம் கைகள் அறியாதது/ அழகே அழகு.. தேவதை.../
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்/
ஆஹா....
ஓ.. ஆமாமில்ல??
ராஜபார்வை'ன்னாலே 'அந்தி மழை பொழிகிறது' தான்னு ஆகிபோனதுல.. கொஞ்சம் தப்பாயிடுச்சுங்க..
நன்றி பிரகாஷ்..
கண்ணதாசன் இன்னொரு படத்தில் கண் தெரியாத பெண் கேள்விகளாகக் கேட்க அதற்கு ஆண் பதில் கேள்வி கேட்பதாய் எழுதியிருப்பார். வாஹ் !
இது இரவா, பகலா?
நீ நிலவா,கதிரா!?
ஜெயச்சந்திரன், வாணிஜெயராம் பாடிய அந்தப் பாடலை நாளைக்கு பவர்கட் ஆன பின்பு கேட்டுப் பாருங்கள் ராசா.
- சத்யராஜ்குமார்
Post a Comment