Friday, April 15, 2005

மும்பாய் X'பிரஸ்..

முதல் நாள் அடிச்சு புடிச்சு போயி படம் பார்த்தாச்சு.. எங்க ஊர்ல கமல் படத்துக்கு இவ்வளவு கூட்டம் பார்த்து நாளாச்சுங்க.. அதுவும் படம் ரெண்டு பெரிய தியேட்டர்ல (சாந்தி & ATSC) போட்டும் கூட்டம் வந்திருக்கு...

படம் பார்த்துட்டு வெளிய வரும் காதுல விழுந்தது
--------------

என்னடா படம் இது, ஒரு பைக், ஒரு குண்டு பையன், கமலு கூட மூனு பேரு.. இதையே எப்படி மாப்ள 2.30 மணி நேரம் பார்க்கிறது.. இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன், முதல்நாளே அடிச்சு புடிச்சு கமல் படத்துக்கெல்லாம் போகனுமான்னு..!!!

கமல் கலக்கிட்டாப்புல சகா.. நீட்டா ஒரு fastcomedy.. .. சூப்பர்டா..

ரெண்டு தியேட்டர்ல ரிலீஸ் செஞ்சிருக்கானுகளே.. பின்னிருப்பாங்கன்னு நினைச்சேன்.. வழக்கம் போல கமல் வெறுப்பேத்திட்டருப்பா.. இவரு எதுக்கு தேவயில்லாம இப்படி 'வித்தியாசமா' செய்யறேன்னு நம்மள வதைக்கிறாரு..

படம் நல்லாத்தான் நண்பா இருக்குது.. 2.30 மணி நேரம் கும்முன்னு போகுது... என்ன, ஒரு லவ் இல்ல, அன்பே சிவம் மாதிரி பெரிய விஷயம் எதுவும் இல்லை.. ஆனா எங்கயும் போரடிக்காம போகுது..

இதை பார்க்கிறதுக்கு தான்.. என்னை கூட்டிட்டு வந்தியா.. கம்முன்னு 'துரைஸ்'ல சச்சின் போட்டிருக்கான்.. அதுக்கு போயிருக்கலாம்.. ஒரு குத்தாவது போட்டுட்டு வந்திருக்கலாம்..

ஏன் ராசு.. படம் நல்லாத்தான இருக்குது.. நம்மாளுகளுக்கு.. ஒரு டூயட், ஒரு சண்டை.. இல்லாட்டி ஆகாது'ம்பாங்களே..

---

இன்னைக்கு காலையில தினமலர் லோக்கல் நியூஸ்:
மும்பாய் xபிரஸ் ஓடும் சாந்தி மற்றும் ATSC தியேட்டர் வாசலில் ஆர்ப்பாட்ட்ததில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கைது

எனக்கு தெரிஞ்சு.. நேத்து காலையில சாந்தி தியேட்டர் முன்னாடி ஒரு டி.வி.ஸ்.50ல ரெண்டு பேரு கருப்பு கொடி கட்டிகிட்டு வந்து, காவலுக்கு நின்ன போலீஸ்காரங்க கூட சிகரெட் புடிச்சுட்டு இருந்தாங்க.. அவ்வளவுதான்.. இதுக்கு பேர் தான் 'ஆர்ப்பாட்டமா'

-----
ச்சே.. நேத்து ஒன்னாந்தேதி கோயிலுக்கு போகனும் அது இதுன்னு எங்கம்மா படுத்தினதுல
தலைவர் படம் மிஸ்ஸாயிருச்சு..தலைவர் படமெல்லாம்.. ஒரு ரெண்டு சுத்துல போகனும்.. அப்பத்தான் அது தலைவர் படம், இன்னைக்கு சாய்ந்தாரம் சக்தி சியர்ஸ்ல டேபிள் போட்டாச்சு.. 'சந்திரமுகிய்ய்ய்...' டிக்கெட் வாங்கியாச்சேய்.... டண்டடனக்கு ..டண்டடனக்கு...

5 comments:

ஜோ/Joe said...

கடைசில நீங்க என்ன சொல்ல வர்றீங்க..ஒரு எழவும் புரியல்ல!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

விடுதலைச் சிறுத்தைகள் எட்டு பேரு காந்தி சிலையில் இருந்து சாந்தி தியேட்டர் வரை ஊர்வலமா வந்து தியேட்டரை முற்றுகை(?)யிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணதாகப் பேப்பர்ல படிச்சேன். ரெண்டுக்கும் இடையில ஒரு முப்பது அடி தூரம் இருக்குமா?
:-)

Pavals said...

-- // கடைசில நீங்க என்ன சொல்ல வர்றீங்க..ஒரு எழவும் புரியல்ல//

ஜோ'.. நான் ஒன்னும் சொல்ல வர்லீங்க.. என்ன காதுல விழுந்துதோ அதை சொன்னேன் அவ்ளோதான்.. நான் எதும் சொன்னா "நீ கமல்'ன்னா எப்பவும் இப்படித்தான் சொல்லுவே"ன்னு திட்றாங்க..

Wordsworthpoet -- தலைவா நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க.. யாராவது விவரமானவங்களா பார்த்து கேளுங்க..

vidyasakaran .. எப்ப எட்டு பேரு வந்தாங்கன்னு தெரியலைங்க.. நான் பார்த்ப்ப 2 பேரு தான் இருந்தாங்க.. ஒரு வேளை காந்தி சிலைக்கும் சாந்தி தியேட்டருக்கும் தூரம் ஜாஸ்தின்னு இவுங்க 2 பேரும் டி.வி.எஸ்'ல முன்னாடி வந்துட்டாங்களோ என்னமோ..

/இடையில ஒரு முப்பது அடி தூரம் இருக்குமா?// ATSCலயும் இதே படம் ஓடுது.. அங்க போயிருந்தாலாவது ஒரு கி.மி. தூரம்.. :-)..
காந்திசிலை பஸ்ஸ்டாப்புல இறங்கி தியேட்டர் வரைக்கும் வந்ததையே ஊர்வலம்ன்னு சொல்லிட்டாங்க போலிருக்குது.. :-)

ஆமா, வித்யாசாகரன்.. நமக்கும் பொள்ளாச்சிங்களா??

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

நீங்க கேட்டுட்டீங்கல்ல. நானும் பொள்ளாச்சிதானுங்க. பொள்ளாச்சில இருந்து ஒரு 25 கிலோ மீட்டர் தூரத்துல ராவணாபுரம்-னு ஒரு கிராமமுங்க. கேள்விப்பட்டிருக்கிற அளவுக்கு ஒண்ணும் பெரிய ஊரில்லீங்க. கஞ்சம்பட்டி, தேவனூர் புதூர் வழியாப் போகோணுமுங்க. ஊரு அடையாளம் தெரியுதுங்களா? நீங்க எப்படிங்க? நீங்க எழுதுறதைப் படிக்கும்போது ஆனைமலைப் பக்கம் மாதிரி தெரியுது, சரிதானுங்களா?

இதே கேள்விய அல்வாசிட்டி அண்ணாச்சி கேட்டிருந்தார்னா என்னோட பதில் இப்படியிருந்திருக்கும்.
'அய்ய அண்ணாச்சி, நல்லாருக்கீயளா? ஆமா! எனக்கும் திருநேலிதான். சாத்தான்குளம் கேள்விப்பட்டிருப்பீயல்லா! அதுகிட்ட அடையல் முதலூரு. எங்க ஊருக்கு எப்பவாவது வந்திருக்கீயளா?'

அதேதான். சொந்த ஊரு திருநெல்வேலி. பிறந்தது, படிச்சது, வளர்ந்தது எல்லாம் பொள்ளாச்சி. அவ்வளவுதானுங்க நம்ம ஜாதகம். இப்போ பெங்களூர்-ல குப்பை கொட்றதுங்க. காலேஜ்ல, அப்புறம் சென்னையில வேலை தேடும்போது, இப்போ பெங்களுர்ல, யாரு கேக்கறாங்களோ அதுக்குத் தகுந்தாப்ல என்னோட ஊரச் சொல்றதுங்க. :-)

நீங்க ஒரு சா·ப்ட்வேர் எஞ்சினீயரா இருந்துட்டு அப்புறமா விவசாயம் பாக்கப் போனது பத்தி எனக்கு ரொம்ப ... அத என்னன்னு சொல்றதுங்க.. சந்தோஷம் ம்ஹ¥ம்... ஒரு நம்பிக்கைனு வச்சிக்குங்களேன். அப்புறம், அடுத்த வாரம் ஊருக்கு வாறனுங்க. உங்க கூடப் பேச முடியுமுங்களா? முடிஞ்சா vidyasakaran_d@infosys.com-க்கு உங்க ·போன் நம்பரை ஒரு மெயில் அடியுங்களேன்.

-வித்யா

Anonymous said...

Ennadhaan solla vareengannu purialayennu kekuradhukku dhaan vandhen, ellarum yerkanave kettutaanga.

Chandramukiyum inneram paathirupeenga! Naalaikku Sachien paakradhaa thittam poturukeengala?