கொஞ்ச நாளைக்கு முன்னால என் சகா ஒருத்தன்
ஆன்சைட்'ல இருந்து வரும் போது எனக்கு பாசமா ஒரு
PDA வாங்கிட்டு வந்து குடுத்தான், நானும் கொஞ்ச நாள் பந்தாவா, அதை பாக்கெட்டுல வச்சுகிட்டு, அங்கங்க நாலுபேர் இருக்கும் போது எடுத்து எதையாவது,
'சாயங்காலம் சொசைட்டியில போயி பால் பணம் வாங்கனும்' அப்படிங்கிற மாதிரி ரொம்ப முக்கியமான வேலை(!)யெல்லாம் குறிச்சு வச்சுகிட்டு இருந்தேன், அப்புறம் ஒரு நாள் எனக்கே அது கொஞ்சம்
ஓவரா இருக்க, தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டேன்.
நேத்து திடீர்ன்னு அதை துழாவ வேண்டிய வேலை வந்திருச்சுங்க, அதை துழாவிகிட்டு இருக்கும் போது இன்னொன்னு கையில சிக்குச்சு,
'தளபதி' பட சிடி.. ஒரு ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது, வாங்கின புதுசுல, அப்போ சென்னையில, என் சிஸ்டத்துல ஒரு
500 ஷோவாது ஓடியிருக்கும் இந்த படம்.. எனக்கு ரொம்ப புடிச்ச படம், ரொம்ப ஸ்டைலான படம். PDAவ துழாவற வேலைய அப்போதைக்கு தள்ளி வச்சுட்டு படம் பார்க்க உக்காந்துட்டேன்..
போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு சேரை பின்னாடி தள்ளிவிட்டுட்டு,
'கிட்டி' கிட்ட
'அடிர்றா.. அடிர்றா பாக்கலாம்'ன்னு டக்குன்னு எந்திரிப்பாரே ரஜினி, அந்த சீனை இப்ப பார்க்கும் போதுகூட, இந்த படம் ரிலீஸ் ஆனப்போ, அப்போ நான் நைந்த் படிக்கிறேன், அப்ப சிலிர்த்த மாதிரியே இப்பவும் சும்மா
'ஜிவ்வு'ன்னு இருக்குதுங்க.. ம்ம்.
அது ரஜினி... இப்போ அதே ரஜினி, சொர்ணா கூட போர்வைய போர்த்திகிட்டு.. சரி வேண்டாம்.. சொன்னா நம்மாளுக சண்டைக்கு வந்திருவாங்க.. படம் வேற நூறு நாள் ஓடிருச்சு.. எதோ நல்லா இருந்தா சரி..
ஆனா, நான் சொல்ல வந்தது அதை பத்தி இல்லைங்க. அப்போ, படம் வந்த முதல் நாள், 1991 தீபாவளி (இல்ல பொங்கலா?) இங்க பொள்ளாச்சி
'நல்லப்பா'வுல, ஒரு பக்கம்
ரஜினி ரசிகர்கள், இன்னொரு பக்கம் கேரளாவுல இருந்து வந்த
மம்மூக்கா ரசிகர்ள்ன்னு சும்மா களை கட்டி இருந்துச்சு, (பக்கத்து
துரைஸ்'ல நம்மாளு
குணா படம்.) படம் ஆரம்பச்சுதல இருந்து ரஜினி, ரஜினி, ரஜினி தான்.. ரஜினி ரசிகர்க சும்மா ரவுண்ட் கட்டி ஆடிட்டிருந்தாங்க..
'ராக்கம்ம கைய தட்டு'எல்லாம் டீ.டி.எஸ் இல்லாமயே காதுல அதிருன நாள் அது.. பின்னாடி ஒரு சீன் வரும், மமுட்டி கீதா, சார்லி எல்லாரையும் கூட்டிகிட்டு கோயிலுக்கு போவாரு, அப்போ போலீஸ் வந்து அவுங்க ஆளுகளை எல்லாம் அடிச்சு இழுத்துகிட்டு போகும்.. அப்படியே கோவமா கோயில்ல இருந்து மமுட்டி வெளிய ஓடிவருவாரு, வந்து ஒரு சின்ன திட்டுலயிருந்து அப்படியே எகிறி குதிப்பாரு,, குதிக்கும் போது அப்படியே டக்குன்னு
காத்துலயே வேட்டிய மடிச்சு கட்டிக்குவாரு, சாமி.. மம்மூக்கா ரசிகர்கள் விட்ட விசில்ல, சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் தியேட்டரே ஆடிபோன சீன் அது. டிபிகல் மம்மூட்டி ஸ்டைல்!!
படம் பார்த்துட்டு வந்து, எங்க வீட்டு மாடிப்படி வளைவுல நானும் என் கூட்டாளி சிவா'னும் ரெண்டு படி மேல இருந்து குதிச்சுகிட்டே லுங்கிய மடிச்சுகட்ட முயற்ச்சி பண்ணினோம், நாலைஞ்சு தடவை ட்ரை பண்ணி அப்புறம் தடுமாறி கைப்பிடி க்ரில்ல முட்டிகிட்டு முட்டியில அடிவாங்கினதுக்கப்புறம் தான்,
'மூட்டுன'லுங்கியில அப்படி செய்ய முடியாதுங்கிற வரலாற்று உண்மை எங்களுக்கு விளங்குச்சு, அப்புறம் கொஞ்ச நாளைக்கு, எப்பவெல்லாம் வேட்டி கட்டறமோ, அப்பவெல்லாம் அதை ட்ரை பண்ணிகிட்டே இருந்தோம்.
அது ஒரு அழகிய 'வேட்டி' காலம் :-)நேத்து ராத்திரி கண் முழிச்சு
ரீவைண்ட் பண்ணி ரீவைண்ட் பண்ணி 2.30 மணி வரைக்கும் படம் பார்த்துட்டு, காலையில 7.30 மணி வரைக்கும் தூங்கிதொலைச்சுட்டேன்.. காலையில எங்கய்யன் கூட ஒரு பக்கம் போக வேண்டியிருதுச்சு, நான் குளிச்சு முடிச்சு வர்றதுகுள்ளார, அவர் வண்டி ஏறி ரெடியா இருந்தாரு, சரின்னு அவசரமா கிளம்புனவன், என்னையும் அறியாம, சிட்டவுட் விட்டு இறங்கும் போது, டக்குன்னு ஒரு ஜம்ப் பண்ணி, அப்படியே வேட்டிய மடிச்சு கட்டினேன்..
கார்ல இருந்து எங்கய்யன் அப்படியே வெறுப்பா ஒரு பார்வை பார்த்தாரு..
'ம்ஹும்.. கழுதை வயசாகுது..!!'..:-(எனக்கே கொஞ்சம் வெட்கமா தாங்க இருதுச்சு.. . இருந்தாலும் வேட்டிய கரெக்ட்டா மடிச்சு
கட்டுனமில்ல.. சாயங்காலம் சிவா'னுக்கு ஒரு போன் போட்டு சொல்லனும். ;-).. அவன் இப்போ சென்னைக்கும் பெங்களூருக்கும் பறந்து பறந்து எதோ மிஸைல்க்கு ட்ரைவர் எழுதிட்டு இருக்கான் ..
'Life is not filled with great truimph, but with small smiles'ன்னு சும்மாவா சொன்னாங்க..
--
#115