Tuesday, August 23, 2005

பேய்க்கு கனவு வருமா?
பேய்க்கு மனசு இருக்கிறதா?
பேய்க்கு கனவு வருமா?
பேய்க்கு நிழல் விழுமா?

என்னடா நல்லாத்தான இருந்தான், திடீர்ன்னு இப்படியெல்லாம் கேக்கிறானேன்னு நினைக்கரீங்களா, நானா கேக்கலைங்க, கேக்க வச்சுட்டாங்க. சகா ஒருத்தன் கல்யணத்துக்காக ஞாயித்துகிழமை கிளம்பி நாமக்கல் போயிட்டு நேத்து மதியானமா ஊருக்கு திரும்பி வந்திட்டிருந்தங்க, வழியில ஈரோடு பஸ்ஸ்டாண்ட் வந்ததும், வழக்கம் போல சிந்தாமணியில விழாம்பழஜூஸ் சாப்பிட இறங்கினேன், அதென்னமோ ஈரோடு'ன்னு போயிட்டு அப்புறம் சிந்தாமணியில விழாம்பழஜூஸ் சாப்பிடாம வர்றதேயில்லீங்க நான். சிந்தாமணி பக்கத்துல புதுசா 'பெரியார் பகுத்தறிவு புத்தகநிலையம்'னு போர்ட் போட்டு பூட்டி வச்சிருக்காங்க (நான் சொல்ல வந்ததுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை தான், ஆனாலும் இதை ஏன் சொல்றென்னா 'இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்' தெரிஞ்சுக்கோங்க.)
நான் சொல்ல வந்தது ஈரோடு பூரா எல்லா இடத்துலயும் நலலா பெருசா, மூனுக்கு நாலு அகலத்துல, மூனு விதமா ஒட்டியிருக்கிற வெள்ளை போஸ்டர்கள பத்தி. அந்த போஸ்டர்கள்ல அடிச்சிருக்கிறது தான் நான் முதல்ல சொன்ன கேள்விகள்.

பேய்க்கு மனசு இருக்கிறதா?
பேய்க்கு கனவு வருமா?
பேய்க்கு நிழல் விழுமா?

ஒவ்வொரு போஸ்டர்லயும் ஒவ்வொரு கேள்வி. நல்லா பளீச்சுன்னு வெள்ளை கலர் போஸ்டர், நடுமத்தியில கருப்புல இந்த கேள்வி மட்டும். கீழ சின்ன எழுத்துல 'இந்த கேள்விகளுக்கு பதில்களை SMS செய்து பரிசுகளை அள்ளுங்கள்' அறிவிப்போட ஒரு மொபைல் நம்பர் வேற குடுத்திருந்தாங்க. கூட்டத்துல பஸ் புடிக்கிற அவசரத்துல நம்பரை குறிச்சுக்காம விட்டுட்டேன். முகூர்த்தநாள்ல வெளியூர்க்கு பஸ்ல போறது ஒரு பெரிய கொடுமைங்க, அதுவும் ஆடி முடிஞ்சு முதல் முகூர்த்த நாளாம், ஏகபட்ட கல்யாணம், ஊருபட்ட கூட்டம், அதுபோக எல்லா பஸ்லயும் டிஜிட்டல் சவுண்ட்ன்னு காது ஜவ்வை அத்துடறாங்க.. :-(
அது ஒரு பெரிய சோக கதை, ஆனா இந்த பதிவு பேய்க்கதை பத்தினது, அதை பார்ப்போம்.
நானும் திரும்பி ஊர் வர்ற வரைக்கும், இது எதாவது விளம்பர உத்தியா? அப்படின்னா என்ன பொருள்க்கான விளம்பரம்ன்னு, நானும் மண்டைய போட்டு குழப்பி பார்க்கறேன், ஆனா ஒண்ணும் புடிபடவே மாட்டேங்குதுங்க.. நமக்கு பொதுவாவே அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சு தொலையாது, அது வெற சமாச்சாரம்..

யாருக்காவது எதாவது தெரியுங்களா இதை பத்தி..? இல்லை ஏதும் தோணுதா?
செல்வராஜண்ணா (வயசுக்கு மரியாதை!) உங்களுக்கு எதும் தெரியுமா?

ஆமா நிஜம்மாலுமே பேய் இருக்கா? *

*(கல்யாணம் செஞ்சுக்காத ஆட்கள் மட்டும் பதில் சொல்லவும்)

--
#117

11 comments:

ஆவி அமுதா said...

//பேய்க்கு மனசு இருக்கிறதா?
பேய்க்கு கனவு வருமா?
பேய்க்கு நிழல் விழுமா?//

நல்ல கேள்வி.குப்புசாமி அய்யா கிட்ட கேட்டு சொல்றேன்.

Jigidi said...

//*(கல்யாணம் செஞ்சுக்காத ஆட்கள் மட்டும் பதில் சொல்லவும்)//

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை.
(கவுண்டபெல் - சேரன் பாண்டியன்)

வீ. எம் said...

மொபைல் நம்பர் நோட் பன்னலைனு கவலை வேணும்..
அதே போஸ்டர் இங்கே சென்னை முழுக்க இருக்கு ..பார்த்துட்டு வந்து சொல்லுறேன்!

எனக்கு தெரிஞ்சு இந்த பேய் , பிசாசு மேட்டரெல்லாம் விஜய் டீவி க்கு ரொம்ப வேண்டப்பட்டது..
ஒரு வேளை விஜய் டீவி நிகழ்ச்சியா??

வீ எம்

பினாத்தல் சுரேஷ் said...

எனக்குத் தெரியாதுங்க, நான் செத்து அஞ்சு வருசம்தான் ஆச்சு!

சுதர்சன் said...

//*(கல்யாணம் செஞ்சுக்காத ஆட்கள் மட்டும் பதில் சொல்லவும்)//

;-) LOL

donotspam said...

படம் சூப்பர் , படம் மட்டுமே.

KARTHIKRAMAS said...

இதை விட புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா என்றே கேட்டிருக்கலாம். :-)

செல்வராஜ் (R.Selvaraj) said...

வாரக்கடசில ஊருக்குப் போவேன். தெரிஞ்சா சொல்றேன். ஆனா சந்தேகந்தான். இந்த sms சமாச்சாரம்னாலே நான் off ஆயிடுவேன். கையிலே செல்பேசியே இல்லையே - அப்புறம் எங்க sms? அப்புறம் பேய் பத்தி எல்லாம் தெரிஞ்சாலும் நான் சொல்றதா இல்லை :-)

முகமூடி said...

// பேய்க்கு கனவு வருமா? // தெரியலை.. நீங்கதான் சொல்லுங்களேன், உங்களுக்கு கனவு வருமா?

ILA(a)இளா said...

பேய் கனவு கண்டிருகேன், ஆனா பேய்க்கு கனவு வருமா? தெரியல ராசா. நம்ம ஊர் சிந்தாமணி juice பத்தி சொன்னது மட்டும் உண்மைன்னு தெரியும்.

கொங்கு ராசா said...

//குப்புசாமி அய்யா கிட்ட கேட்டு சொல்றேன்.// ரைட்டுன்னேன்!!

Jigidi > கவுண்டரு இந்த மாதிரி சாதரணமா பல தத்துவங்கள அள்ளி விட்டிருக்காரு

வீ. எம்>> செல்வராஜ் >> இன்னைக்கு காலையில எல்லா பேப்பர்லயும் இந்த விளம்பரம் வந்திருச்சு, நம்பர் பார்த்துட்டேன் :-)

சுரேஷ் >> அஞ்சு வருஷமா பெனாத்திட்டிருக்கீங்களா? ;-)

நன்றி சுதர்சர்ன்.. ஈஸ்வர் :-(.. கார்த்திக்.. இதுக்கெல்லாம் புள்ளி ராஜா தான் ஆரம்பம் (நம்மூர்ல)

முகமூடி>> என் கனவுல எல்லாரும் முகமூடி போட்டுகிட்டே வராங்க, அது தான் ஏன்னு தெரியலை ;-)

ILA >> சிந்தாமணி ஜூஸ் 94'ல இருந்தே நம்ம ஃபேவரேட்,,