Thursday, August 4, 2005

மூன்று குணம்..

மூன்று குணம்னு சொன்னதும் எதும் த்ரீ ரோஸஸ் டீ மாதிரி 'நிறம், மணம், சுவை' சமாச்சாரம்னு நினைச்சிருப்பீங்களே.. அதெல்லாம் இல்லீங்க இது வேற சமாச்சாரம், ஆனா, இதுவும் டீ சாப்பிடும் போது கேட்ட சமாச்சாரம் தான்.. டீக்கடை பெஞ்ச் மாதிரி.. உடனே தினமலர் ஆதரவாளன்னு எதும் பட்டம் குடுத்துராதீங்க. குடுத்தாலும் குடுக்கலைன்னாலும் நான் கொஞ்சம் தினமலர் ஆதரவு ஆள் தான்.. அவுங்க அளவுக்கு வேற யாரும் லோக்கல் மேட்டர எழுதறது இல்லை, அதுனால..
சரி இப்பொ எதுக்கு அது, நான் சொல்ல வந்தது வேற விஷயம், அதை விட்டுட்டு எப்பப்பாரு நான் இப்படித்தாங்க, வேலியில போறத எடுத்து எங்கயோ விட்டுகற மாதிரி.. விஷயத்துக்கு வர்றேன்..
நேத்து ஆடிபெருக்கு பாருங்க, அதுவும் நாலஞ்சு வருஷம் கழிச்சு இப்பத்தான் ஆடி மழைய எங்க ஊர்காரங்க பார்க்கிறாங்களா, நம்மாளுக எல்லாம் சந்தோஷமா திருமூர்த்திமலை, அமராவதின்னு கிளம்பிட்டாங்க, அதுனால வேலை ஒன்னுமில்லாம வெட்டியா உக்காந்திருந்தேன், ஆளுக இருந்தா மட்டும் நீ என்னத்த கிழிச்சிருப்பேன்னு கேட்டீங்கன்னா.. சாரி, நோ கமெண்ட்ஸ். மேட்ச் பார்க்கலாம்னா, அது வேற எதோ டெஸ்ட் மேட்ச் மாதிரி ரொம்ப சாவுகாசமா விளையாடிட்டிருந்தாங்க, ரொம்ப போர் அடிச்சு பக்கத்துல வழக்கமா போற 'அக்க்ஷயா டீ பார்'க்கு போனேன். எப்பவும் அங்க டீ சாப்பிட போனா யாராவது கூட போவேன், போனமா டீ சாப்டமா வந்தமான்னு இருப்பேன், (ராசா நல்ல பையன், தெரியுமில்ல..) நேத்து பாருங்க, நான் போன நேரம் பார்த்து அங்க கடையிலயும் யாரும் இல்லை, வேலை பார்க்கிற பசங்க எங்கயோ பக்கத்துல எங்கயோ போயிருந்தாங்க போல, ஆறுமுகம் மாஸ்டரே டீ போட்டு சப்ளை பண்ணிகிட்டு இருந்தாரு, அவரும் பாவம் என்னைய மாதிரியே போரடிச்சு இருந்திருப்பாரு போல.. 'என்ன சார் தனியா..?' ஆரம்பச்சாரு.. மழை வேற மறுபடியும் ஆரம்பச்சிருச்சு, கடையிலயும் வேற ஆள் இல்ல.. சரின்னு கொஞ்ச நேரம் 'டாபிக் போட்டு'ட்டிருந்தேன். நமக்கு அதுதான் கை வந்த கலையாச்சே!!.. மழை விவசாயம், அரசியல்ன்னு எதேதோ பேசிட்டிருந்தோம். பேச்சு வாக்குல ஒரு சமாச்சாரம் சொன்னாரு பாருங்க, அதான் அந்த 'மூணு குணம்' சமாச்சாரம்..

" ஒவ்வொரு மனுஷனுக்கும் மூணு குணம் இருக்கும், ஒண்னு, அவன் அடுத்தவங்ககிட்ட தன்னோட குணமா காட்டிக்கிறது, அடுத்து, அவனுக்குன்னு இயல்பா இருக்கிற குணம், அதுபோக முக்கியமானது மூணாவது, அது எதுன்னா, இது தான் தன்னோட இயல்பான குணம்'னு ஒவ்வொரு மனுஷனும் தன்னை பத்தியே (தப்பா) நினைச்சுகிட்டிருக்கிறது.."
தத்துவமா கதை கட்டுரைன்னு எழுதி கிளப்ப வேண்டியா ஆளு.. அக்க்ஷ்யா பார்'ல டீ ஆத்திட்டு இருக்காரு.. வகையே இல்லாம என்னைய மாதிரி ஆளுக எல்லாம் பதிவு கிதிவுன்னு எழுதிகிட்டு இருக்கிறோம்..
இதுல ஆயிரம் சண்டை, சச்சரசு, மூடுவிழா, வெங்காயம்...
எல்லாம் நேரம்.. :-(

--
#113

9 comments:

கோபி(Gopi) said...

ராசா.. சூப்பர்ங்க!

//சண்டை, சச்சரசு, மூடுவிழா, வெங்காயம்...//

வெங்காயம்ங்கிறது சக வலைப்பதிவாளர் பேரு.. பாத்துங்க.. கும்மிறப் போறாங்க...

:-P

ஜெகதீஸ்வரன் said...

அப்படியே ஆழியார், திருமூர்த்தி மலைன்னு போயிருந்தீங்கன்னா இன்னைக்கு டாபிக் கெடச்சிருக்காது....

Alex Pandian said...

அப்படியே பதிவு தலைப்புலயும், கட்டுரையிலும் இருக்கும் 'ஒன்னுமே' என்பதை 'ஒண்ணுமே' என மாத்துங்க ராசா :-)

டி ராஜ்/ DRaj said...

அருமையான தத்துவம். இப்போதாங்க புரியுது ஏன் ஆப்கான் - ல இருந்து எல்லாம் மக்கள் வந்து உங்க பதிவை படிக்கிறாங்கன்னு.

சியர்ஸ்

டி ராஜ்/ DRaj said...

கருத்தும் படமும் சூப்பருங்க....

கொங்கு ராசா said...

//வெங்காயம்ங்கிறது சக வலைப்பதிவாளர் பேரு..// வெங்காயத்துக்கு காப்பிரைட் வாங்காம இருந்தா சரிதான்.. :-(

//ஆழியார், திருமூர்த்தி மலைன்னு போயிருந்தீங்கன்னா//
ரகு.. கூட்டநேரத்துல அந்த பக்கமெல்லாம் பொதுவா போறதில்லீங்க.. அதான்

//'ஒன்னுமே' என்பதை 'ஒண்ணுமே' என மாத்துங்க//அலெக்ஸ்'ஜீ.. மாத்தியாச்சு, மாத்தியாச்சு, :-)

//ஏன் ஆப்கான் - ல இருந்து எல்லாம் //
வாங்க ராஜ், நானும் இப்பொத்தாம் பார்த்தேன்.. யாருங்க நம்மாளுக ஆப்கான்'ல இருக்கிறது.. ஒரு வேளை பின்லேடனா?? ஐயோ,, நானிலீங்க.. :-(

ILA(a)இளா said...
This comment has been removed by a blog administrator.
ILA(a)இளா said...

Pinreengale Iyaa.

Uma said...

Ada aamaam Afghanlarundhu kooda vandhu padikiraanga Raasaavoda padhivugalai ellam! Adengappa