
போன வாரம் பாருங்க, பெங்களூர் வரைக்கும் போக ராத்திரி ட்ரெயின்'ல டிக்கெட் கிடைக்காம, பகல்ல
நிஜாமுதீன்'ல போக வேண்டியதாபோச்சுங்க. நைட் ட்ரெயின்ல போயிருந்தாலாவது
இந்த மாதிரி எதாவது சுவாரசியமா எதாவது நடக்கும் ;-), பகல் வண்டியா போச்சுங்களா, எல்லாரும், வீட்டுல இருந்து கட்டிட்டு வந்த முறுக்கு, ஸ்வீட்டெல்லாம் ப்ரிச்சு வச்சு சாப்பிட்டுட்டு இருப்பாங்க, நம்ம ஆளுகளுக்கு வண்டி ஏறினதும் உடனே சாப்பிட எதாவது வேணும், இல்லாட்டி கஷ்டம். நான் தனியா வேற போயிட்டெஇருந்தேன், அதுனால ஜங்க்ஷன் போறதுக்கு முன்னாடியே எதாவது புஸ்த்தகம் வாங்கிட்டு போகனும்னு முடிசு செஞ்சுட்டு தான் போனேன்.
நான் பொதுவா இங்க்லீஸ் புஸ்தகம் பக்கமெல்லாம் போறதில்லீங்க, சில நேரத்துல யாரவது வீட்டு பக்கம் போகும் போது சும்மா ஒரு பந்தாவுக்கு அவுங்க வச்சிருக்கிற புஸ்தகத்தை வாங்கிட்டு வந்து படிப்பேன் அப்படியே படிச்சாலும், சிட்னி ஷெல்டன் இல்ல கொஞ்சம் ஜெப்ரி, அவ்ளோதாங்க, அதை தாண்டி வேற எதையும் படிக்கிற அளவுக்கு நமக்கு பத்தாது.ஆனா ரொம்ப நாளா நம்ம சகி (சகா'வுக்கு எதிர்பதம்!) ஒருத்தி 'லவ் ஸ்டோரி'ன்னு ஒரு புஸ்தகத்தை பத்தி சொல்லிகிட்டே இருப்பா.. நமக்கு படிக்கலாம்னு ஆசை தான் ஆனா இங்க்லீசுல ரொமான்ஸ் எல்லாம் படிச்சா நமக்கு புரியுமா, எதுக்கு வம்பு, வாங்கி படிச்சா அப்புறம், அதை பத்தி அவ கிட்ட எதும் பேசனும், வீணா வலிய போயி கேவலப்படனுமான்னு அந்த பக்கமே ஒதுங்காம இருந்தேன்.
கோயமுத்தூர் ஜங்ஷன்'ல பின்னாடி கேட்'டுல எங்கய்யன் என்னை எறக்கி விட்டதும், அங்க பக்கத்துல ப்ளாட்பாரத்துல இருந்த புஸ்தக கடை பக்கம் போனேன். போனதும் கண்ணுல பட்டது 'லவ் ஸ்டோரி' புக்குதான். சரி ஏற்கனவே எரிக்ஸ'லோட
'டாக்டர்ஸ்' படிச்சு, அது வேற ரொம்ப புடிச்சு இருந்துச்சுங்க... ஆனா அந்த புஸ்தகம் வாங்கினது ஒரு வேர கதைங்க.. சரி.. அது வேண்டாம் இப்போ.. இதயும் தான் படிச்சு பார்ப்பமேன்னு டக்குன்னு வாங்கிட்டேன். பின்னாடியே வந்த எங்கய்யன், புஸ்தகத்தை கையில வாங்கி பார்த்துட்டு,
'பழைய புக்'ன்னு சொல்லிட்டு அப்படியே என்னை சந்தேகமா ஒரு பார்வை பார்த்தாரு, அதென்னமோ தெரியலைங்க, நான் எதார்த்தமா எதாவது செஞ்சாலும், எங்கய்யன் நம்மள சந்தேகமாவே தான் பார்க்கிறாரு. சரி, அது வேற கதை, இப்போ நான் அந்த புக்க பத்திதான சொல்ல வந்தேன், அதை சொல்லிடறேன்.
"What can you say about a twenty five year old girl who died? That she was beautiful, and brilliant, that she loved Mozart and Bach and the Beatles and me." - இது தாம் நாவலோட முதல் வரி. இதை படிச்சதுமே, நமக்கு ஒரு நம்பிக்கை வந்துருச்சுங்க, வண்டி தர்மபுரி போயி சேரும் போது பாதி புஸ்தகத்தை முடிச்சிட்டேன்,
(இங்க்லீஸுன்னா நான் கொஞ்சம் மெதுவா தான் படிப்பேன்..) சும்மா சொல்ல கூடாதுங்க, சூப்பரான நாவல். புஸ்தகத்தை படிக்க உக்காந்ததுதான், அங்க இங்க என்ன நடக்குதுன்னு கூட கவனிக்லைங்க, அந்தளவுக்கு அதுலயே மூழ்கிட்டேன்.. அப்புறம் தர்மபுரி'யில வண்டி நிக்கும் போதுதான் கவனிச்சேன், பக்கத்துல சைட் அப்பர்ல ஒரு அழகான புள்ளை, அதுவும் எதோ ஒரு புஸ்தகம் படிச்சுகிட்டு படுத்திருந்துச்சு. நான் அதுக்கு எதுத்தாப்புல மிடில் பெர்த்துல இருக்கேன். அதென்னமோ அதுக்கப்புறம் புஸ்தகத்துல கவனமே போகலைங்க.. பின்னாடி நேரம் கிடைக்கும் போது படிச்சுக்கலாம் வச்சுட்டேன்.
ஆனாலும் அந்த சைட் அப்பர் பெர்த்துல டார்க்ப்ளூ டாப்ஸ்ல இருந்துச்சே அந்த புள்ளை.. ரொம்ப அழகுங்க... ம்ம்.. கோயமுத்துர் தான் போல இருக்கு.. ச்சே.. புஸ்தகத்தை பத்தி சொல்ல வந்துட்டு, எதையோ சொல்லிட்டு இருக்கேன்.. புஸ்தகத்தை முழுசா படிச்சுட்டு அப்புறம் அதை பத்தி மறுபடியும் எழுதறேன்.. புஸ்தகத்தை எந்த இடத்துல விட்டேன்னு தான் ஞாபகம் இல்லை.. நேரம் கிடைச்சாலும் அந்த புஸ்தகத்தை எடுத்தா, ஏனோ தெரியலைங்க.. மனசு ஒரு நிலையாவே இருக்க மாட்டேங்குது.. படிக்கவே முடியலை..அடுத்த தடவை போகும் போதும் நிஜமுதீன்'ல போயி தான் பார்க்கனும்.. ச்சே. படிக்கனும் ;-)
--
#141