Monday, September 4, 2006

உங்க கூட ஒரே தமாசு !



தினம் தினம் எதிர்படுவோர் தரும்
நிறைந்த புன்னகை

மதிப்பு வைத்திருப்பவர்களிடம்
கிடைக்கும் மரியாதை

அடிக்கடி மோதிக்கொண்ட போதும்
விட்டுக்கொடுக்காத பாசம்

சலிக்காமல் சகித்துக்கொண்டு ஒருத்தி
வைத்திருக்கும் நம்பிக்கை

அதிர்ந்துபோகும் வசைவார்த்தைகளில்
மகிழ்ச்சியை கூட்டும் நட்பு

ஒவ்வொரு நொடியையும் என்னை
ரசிக்க வைக்கும் உலகம்


இதுக்கெல்லாம் ஆடாதவன், ஒரே ஒரு 'வெற்றி'க்கு ஆடுவான்னு நீங்க நினைச்சா.. அட போங்க சார்!.. உங்க கூட ஒரே தமாசு.. :)

--
#205

5 comments:

வேந்தன் said...

//இதுக்கெல்லாம் ஆடாதவன், ஒரே ஒரு 'வெற்றி'க்கு ஆடுவான்னு நீங்க நினைச்சா.. அட போங்க சார்!.. உங்க கூட ஒரே தமாசு.. :)//


உண்மையிலேயே தமாசுதாங்கோ :)))

கைப்புள்ள said...

சுத்தம் :(

("...சோறு போடும்"னு கமெண்டு போட்ட பாவத்துக்கு என்னைய கலாய்ச்சு வுட்டுராதீங்கய்யா)

Anonymous said...

sathiyama onnum velangalenga

--
Jagan

இராம்/Raam said...

ராசா,

சூப்பர்ங்க.... அருமையாக உங்களின் ஸ்டைலில் சொல்லிருக்கீங்க.... கருத்து உறைக்கும் யாருக்கோ....!

Babu said...

அரிது அரிது மானிடரய் பிறத்தல் அரிது , அதனினும் அரிது ராசாவை போல் பிறத்தல்