Wednesday, September 6, 2006

அய்யர், தேவர், சுடலமாடன், பாய், நாயர்,

மீண்டும் ஒரு வயத்தெரிச்சல் சம்பாதிக்கிற பதிவு.

இப்பத்தான் ஒரு வயத்துகுறிப்பு எழுதி தூர தேசத்துல வரரொட்டி சாப்பிடுற பலபேரு வயத்தெரிச்சல :) கொட்டிகிட்டேன்..
(அது செல்லமா, போட்டிக்கு தலைப்பு குடுத்து வாங்கிட்டது கொஞ்சம் பலமாவே)
அதே வரிசையில் திரும்பவும் உங்க வயத்தெரிச்சல கூட்டுற மாதிரி ஒரு பாட்டு..

------------
அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஓட்டல் அல்வா மாதிரி
தாழம்பூவென தள தள தளவென
வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆழ்வார்குறிச்சி
அழகுத்தேவர் அருவா மாதிரி
பருமா தேக்கென பள பள பளவென
வந்தான் வந்தான் பாரு

கும்மியடி கும்மியடி
கும்மியடி ஹோய்
கொட்டு வட சத்தம் போட
கும்மியடி கும்மியடி
கும்மியடி ஹோய்
கொண்ட பூவில் வண்டு ஆட
கும்மியடி ஹோய்

அடி ராசா நீ ரோசா நீ ராசாமணி
நம்ம ராசாக்கு ராணி வந்துட்டா

ரொம்ப சோக்கானது இந்த சோடின்னு தான்
அந்த ஆத்தாவா சேர்த்துபுட்டா

தும்மல் வாராமத்தான் நம்ம சுத்திபோடனும்

சுடல மாடனுக்கு கிடா நேர்ந்துவிடனும்
நல்ல பொன்னான நாள் இது தான்

(அவளுக்கென்ன அம்பாசமுத்திர)

உப்புகண்டம் நீ வந்து சேரு
இங்க காத்திருக்கு கம்பங்கூளு தான்

பாய் கடை பிரியாணியப் போல
நெஞ்சு பக்குவமா வெந்து கெடக்க

அடி ஆறப்போட்டா கெட்டு போகும் தானே
இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு

மச்சான் வெத்தலை பாக்கோட
வந்து வாசலில் நிக்கட்டா
இனி ஒத்திபோட்டா ஒத்துக்காது
பஞ்சு மிட்டாய் மனசு

அடி ஒத்தையில் தூங்காது
பஞ்சு மெத்தையில் தூங்காது
அந்த நாயர் கடை சாயா விட
ஏறிக்கிச்சு சூடு

(அவளுக்கென்ன அம்பாசமுத்திர)

பல்லு குத்தும் குச்சியால நீங்க
விட்டா நெல்லுகுத்தும் கெட்டிக்காரன்ங்க

பத்தமடை பாய போட்டுப் பாரு
பாட்டெடுக்கும் சூரன் நாந்தான

விட்டா போதும் வேலிய தாண்டும்
இந்த வெள்ளாட்டுக்கு ரொம்ப 'இது'ங்க

கொத்துற சேவலும் நாந்தானே
ப்ராய்லர் கோழியும் நீதானே
ரெண்டும் மூக்கும் மூக்கு முட்டிகிட்டு
முத்தம் வைக்காதோ

மச்சான் ___ சூட்டோடு
ரெண்டும் நெஞ்சொடு நெஞ்சோடு
ஒரு ஊசி நூலு இல்லாமத்தான்
ஒண்ணா தைக்காதோ..

(கும்மியடி கும்மியடி)
(அவளுக்கென்ன அம்பாசமுத்திர)

-----

'சில்லுன்னு ஒரு காதல்' படத்து பாட்டுங்க.
பாட்டு யாரு பாடுனது, என்ன விவரம்ன்னு எல்லாம் தெரியனும்னா
இந்த பாட்டை பத்தியும் படத்துல வர்ற மத்த பாட்டுக பத்துன விமர்சனம் 'இங்க'


--
#207

6 comments:

சுதர்சன்.கோபால் said...

இந்த மாதிரி குத்துப் பாட்டுக்கு இலியானா இல்ல மினிஷா லிம்பா(அதாம்பா புதுசா வார ஹைட் அன் சீக் விளம்பரத்தில ஹ்ரித்திக் கூட ஆடுமே) போன்ற கந்தர்வ கன்னிகள் ஆடினாப் பரவாயில்லை.ஜோ ஆடறதக் கற்பனை கூடப் பண்ண முடியலியே..

அப்புறம் பந்திக்கு முந்து படைக்கு பிந்துன்னு சொல்றது சரியாத்தேன் இருக்கு.(ராவைக்கா இந்தப் பாட்டை வச்சி ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்.கொடுப்பினை இல்ல போல)

ILA(a)இளா said...

சரியான குத்துப்பாட்டா இருக்கே. எங்கிருந்தா இப்படி கேட்க முடியுதோ(நமக்கு இன்னுமொரு வயித்தெரிச்சல் இதெல்லாம் நம்மளால கேட்க முடியலைன்னு, நம்ம தோட்டத்து நெருப்பு வேலி அப்படி)

Babu said...

ஏனுங்க ராசா,

உங்களுக்கு மட்டும் எப்பிடிங்க இந்த மாதிரி எழுதறத்துகு டைம் கிடைக்குது? உங்க கிட்ட இருந்து நிறைய நல்ல படைப்புகளை எதிர்பார்க்கிரேன், சமயத்தில சூப்பரா எழுதறிங்க, வாழ்த்துக்கள்

G.Ragavan said...

இங்க பார்ரா பாட்ட.....பட்டயக் கெளப்புதே! ராசா...மவராசா....இந்தப் பாட்டுக்காகவே படம் பாக்கனும் போல.

வசந்த் said...

என்னங்க ராசா... நீங்க பாட்டுக்கு ஒரு தலைப்பை அள்ளி விட்டுட்டேங்க. அதப் பத்தி யோசிச்சு பதிவு இடறதுக்குள்ள தாவு தீர்ந்து போயிடுதுங்க.. எங்க ஏரியா பக்கமும் வந்து எப்படியிருக்கு கதையெல்லாம்னு சொன்னீங்கன்னா, நல்லாயிருக்குமுல்ல... என்ன நான் சொல்றது..?

Babu said...

என்னாச்சு ராசா?

ரொம்ப நாளா எதுவும் எழுதாம இருக்கீங்க? எதாச்சும் வேண்டுதலா?
பாபு