Friday, August 25, 2006

சென்னை - வயித்து குறிப்பு

எல்லாரும் சென்னைய பத்துல அவுங்க-அவுங்களோட நினைவுகள சொல்லிட்டு இருக்காங்க.. நம்ம பங்குக்கும்.. :) நம்ம நாக்குல உக்காந்து வயத்துல அடங்கி மனசுல இன்னும் நீங்கா இடங்களும் புடிச்சிருக்கிற சில இடங்களும் அது சம்பந்தபட்ட சில நினைவுகளையும் பத்தின குறுப்பு

--

ஒரு ப்ளேட் சாம்பார் இட்லிக்கு கிளிமூக்கு ஜக்கு நிறையா நெய் மணக்கற சாம்பார் குடுப்பாங்களான்னு ஆச்சிரியம் குடுத்த ரத்னா கபே.

ஸ்டார் ஹோட்டல் போயி சாப்பிட்டாலும் குடுக்காத சந்தோஷத்தை குடுத்த 'பாண்டி பஜார் ப்ரில்லியண்ட் டுட்டோரியல் முக்கு' ஆம்னிவேன் நைட்ஸ்டால் பொடி தோசை.

ரோகினி இன்டர்நேஷனல் பக்கத்துல 'பாபண்ணன் தள்ளு வண்டி'யில அர்த்த ராத்திரியிலயும் ருசியா கிடைக்கிற செட்தோசையும் சுக்காவருவலும்.

நாலு சுத்துக்கு அப்புறம் நட்புக்காக வீம்பா டீநகர்ல இருந்து வண்டி எடுத்துட்டு போயி 'வேலுமிலிட்டிரி'யில வாங்கிட்டு வந்த சிங்கிள் ப்ளேட் 'தலைஃப்ரை'

எந்த நேரம் பசிச்சாலும் சட்டுன்னு கிளம்பி போயி புல் கட்டு கட்டுன 'நடேசன்வீதி கனகதுர்கா மெஸ்'.

முதன் முதலா ஸ்க்ரூட்ரைவர்'ன்னா ஒரு திரவ சமாச்சாரம்னு தெளிவு குடுத்த ஜீ.என். செட்டி ரோடு 'பார்த்தன்'.

ஸ்வீட் லைம்'ன்னு சொன்னா அது சாத்துக்குடி ஜூஸ்ன்னு விளக்கம் கிடைச்ச 'கோடம்பாக்கம் நயாகரா'.

குஷ்பூ இட்லியும் அஞ்சு வகை சட்னியும் கூட அருமையான சைட்டிஷ்ன்னு சொல்லிகுடுத்த 'அம்மா மெஸ்' மொட்டை மாடி.

கீழ இத்தன ஃபிகருக டான்ஸ் ஆடும் போது இவனுக மேல போயி வெட்டியா பாட்டிலோட நிக்கறானுகளேன்னு முத தடவை போனப்போ முட்டாள்தனமா யோசிச்ச 'பைக்ஸ் அன்ட் பேரல்ஸ்'.

'பங்கு ரெண்டு காபி சாப்பிட்டதுக்கு 120 ரூ வாங்கிட்டானுகடா'ன்னு மூணு நாலு புலம்ப வச்ச 'நுங்கம்பாக்கம் பரீஸ்த்தா'.

சைனீஸ் புட்'ன்னா நம்மூர்ல சாப்பிட்ட நூடுல்ஸ் ப்ரைட்ரைஸ் மட்டுமில்லன்னு தெரிய வந்த கத்தீட்ரல் ரோடு 'சைனா டவுன்'.

இதென்னடா நம்மூர் தேங்காய் சாதம் மாதிரி இருக்கு, இது தான் மெக்ஸிக்கனா?ன்னு லொள்ளு பேசுன கோபாலபுரம் 'டான் பெபெ'.

கடல்காத்தும் மீன்கொத்தியும் அருமையான அழுத்தநிவாரணின்னு அலுவலக சகாக்களோட சேர்ந்து கண்டுபுடிச்ச 'எம்.ஜி.எம் குவாலிட்டி இன்'.

சீஸ் செர்ரி பைனாப்பிள்'ங்கிற அமிர்த்தத்த முதல் தடவையா கண்ணுல காட்டுன 'கெளதம்மெனார்'.

ரெண்டு புல் மீல்ஸ் பார்சல் வாங்கின கூடவே நண்டு க்ரேவி இனாம கிடைக்கும்னு நாங்க படையெடுத்த 'அஞ்சப்பர் செட்டிநாடு'.

ரெண்டு போண்டா ஒரு டீ சாப்பிட போனாலும் கூட பர்ஸ் வெயிட்டா இருக்கனும்னு கத்துகுடுத்த வடபழனி சரவணபவன்.

மட்டன் பிரியாணியும், போட்டி'யும் சாப்பிட்டதுக்கு அப்புறம் லெமன் டீ சாப்பிட்டா அருமையா இருக்கும்னு கண்டு புடிச்ச ஆற்காடு ரோடு 'ஹாலிவுட்'.

ஆம்பூர் பிரியாணி'யில அப்படி என்னடா விசேஷம்னு கேட்டவன, ஆம்பூர் ரசிகனாவே மாத்துன நந்தம்பாக்கம் 'பிரியாணிஸ்டால்'.

வெறும் நூத்தம்பது ரூவா செலவுல 'தோழிமை'யோட (நன்றி:செல்வராஜ்) மூணு மணி நேரம் இருக்கற ரகசியத்தை சொல்லிகுடுத்த 'குயின்க்கிஸ்'.

சாம்பார் வடை மட்டுமே தெரிஞ்சவனுக்கு ரசவடை'ன்னு ஒரு அப்பட்டைசர அறிமுகப்படுத்தின 'உஸ்மான் ரோடு அருணா'.

ஷூ போடாட்ட்டி உள்ள விடமாட்டானான்னு, கிண்டி ப்ளாட்பாரத்துல 300 ரூபாக்கு நாலு ஜோடி ஷூ வாங்கிபோட்டுகிட்டு உள்ள போயி, அப்புறம் வெளிய வரும் போது நக்கலா, அங்க வாசல்லயே அதை விட்டெறிஞ்சுட்டு வந்த 'லீ மெரிடியன் ஃப்ளேம்ஸ்'

இங்க விக்கிற ப்ரெட்டுக்கு இல்ல மாப்ள விலை, இங்கன உக்காந்து வேடிக்கை பார்க்கத்தான் அது'ன்னு சந்தோஷமா எதிர் பஸ்ஸ்டாப்பை பார்த்துகிட்டே செலவு செஞ்ச 'ஹாட்ப்ரட்ஸ்'

ஃப்ரைடு ஐஸ்க்ரீம்னு ஒரு அதிசியத்த உணர்ந்த 'ரெஸிடென்சி ஆஹார்'

அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கனும்னு அஞ்சு நாள் முன்னாடியே டேபிள் புக் பண்ணி, ஆசபட்டு போயி, ஒரே ராத்திரியில ஒரு மாச சம்பளத்தை காலி செஞ்ச 'லெதர்லவுஞ்ச்'.

--
ம்.ம்ம்.. இப்படயே நிறையா இருக்குதுங்க.. ஆனா இப்போ பயங்கிறமா பசியெடுக்க ஆரம்பிச்சிருச்சு.. அதுனால இதோட விட்டுட்டு போறேன்..

சாப்பாட்டுக்கு போற நேரத்துல இப்படி ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சிருக்க கூடாது.. இனி இந்த வெள்ளம் போட்ட சாம்பார் உள்ளயே இறங்காதே :(

--
#201

26 comments:

இரா. வசந்த குமார். said...

நீங்க சொன்ன நிறைய ஓட்டல் சாப்ப்ட்டு இருக்கேங்க..சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.. நல்லாயிருந்துச்சு..

G.Ragavan said...

அப்படிப் போடுங்க தம்ளர (சாப்பாட்டு சமாச்சாரமில்லையா...அதான் அருவா தம்ளராயிருச்சி)

ரத்னா கபே பேருக்கேத்த மாதிரி ரத்தினமய்யா...ரத்தினம். சாம்பார் போதும்னு சொன்னா கோவிச்சுக்கிருவாங்கன்னு ரெண்டு ஜக்கு சாம்பருக்கு அப்புறம் ஒரு நண்பர் சொல்லிக் குடுத்தாரு. அது உண்மைதாங்க...அடடா! சாம்பாரா அது!

G.Ragavan said...

அப்புறம் அந்த பிரில்லியண்டு டுடோரியல் முக்கு கையேந்தி பவன். நான் சின்னப்பிள்ளைல இருந்து இருக்கு. அப்பல்லாம் லீவுக்குச் சென்னை வர்ரப்போ வீட்டுல என்ன வேணும்னு கேட்டா...அந்தக் குறிப்பிட்ட கையேந்தி பவன்ல இருந்து மெளகா பஜ்ஜி வேணும்னு சொல்வேன். இன்னும் நாக்கடியில ஒளிஞ்சிக்கிட்டிருக்கு அந்தச் சுவை. அப்படியே புதினா கலந்த கெட்டித் தேங்காய் தொவையலோட மெளகா பஜ்ஜிய மோத விட்டு வாய்க்குள்ள தள்ளுனா..அடா அடா அடா

G.Ragavan said...

அம்மா மெஸ்சுங்குறது டி.நகர்ல ஜி.என்.செட்டி ரோடுக்குப் பக்கத்துல இருக்குறதுதான... ஒரு வாட்டி போயிருக்கேன். பத்து வருசத்துக்கு முந்தி. :-)

Bikes and Barrels...போன வாரம் நண்பர்கள் கூப்பிட்டாங்க...ஆனா பாருங்க...நா அங்க போயி சர்பத்து வாங்கிக் குடுத்து அந்த எடத்த அவமானப் படுத்த வேண்டாமேன்னு போகலை. நீங்க சொல்றதப் பாத்தா போய்ப் பாக்க வேண்டிய திருத்தலம் போல இருக்கே. இந்த வாரம் எட்டிப் பாக்க வேண்டியதுதான். அடுத்த வாரக் கடைசி பெங்களூருல்ல.

Unknown said...

நல்லா வாழ்ந்து இருக்கே ராசா:)

G.Ragavan said...

அஞ்சப்பருல ஓடில்லா நண்டுன்னு ஒரு வகை இருக்கு. ஓட்ட ஒடச்சு உள்ள இருக்குற அந்த மெத்துச் சதைய மட்டும் குலையாமச் சமைச்ச பக்குவம். அதச் சாப்பிடனும்னு பாக்குறேன். கெடைக்க மாட்டேங்குது. போறப்பல்லாம் தீந்து போயிருது.

அதென்ன லெதர்லவுஞ்? எங்ஙன இருக்கு? அங்கென்ன பெரிய தில்லாலங்கடியா?

G.Ragavan said...

சரவணபவன் எனக்கு எப்பவும் பிடிச்ச கடை. காலையில பத்து மணி வாக்குல கெடைக்குற தயிர் வட இருக்கே....ஜொள்ளுன்னு தயிருல ஊறி காராபூந்தி, மெளகாப்பொடி, கேரட் துருவலு, கொத்தமல்லி தூவி...பாக்கவே ஜொஜ்ஜொலிப்பா இருக்கும். ஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அதே மாதிரி அடை அவியலும் ரொம்பப் பிரமாதம். பரோட்டாவுக்கு வெங்காயத் தயிர்பச்சரி குடுக்குற ஒரே ஓட்டல் ஓட்டல் சரவணபவன்.

G.Ragavan said...

இத்தன சொன்னீகளே...ரெண்டு முக்கியமான எடத்த விட்டுட்டீங்களே....முருகன் இட்டிலிக் கடையும் கண்ணதாசன் மெஸ்சும்.

முருகன் இட்டிலிக் கடையில வீரசைவர் மாதிரி வீரஇட்டிலியரா இருந்தாங்க. இப்ப எல்லாம் போட்டுத் தாக்குறாங்க. அதுல பாருங்க...அந்த வெங்காய ஊத்தப்பம். மாவ மொந்தையா ஊத்தி மேல சின்னச் சின்ன வளையமாப் போட்ட சின்ன வெங்காயம். அப்படியே திருப்பிப் போடும்போது பொசுபொசுன்னு பொன்னிறமாப் பொறிஞ்சு....அவங்க குடுக்குற சட்டிகளோடு சேந்து சாப்பிட்டா...ம்ம்ம்ம்...முருகன் இட்டிலிக் கடை வெங்காய ஊத்தப்பத்திற்கு இராகவன் அடிமைன்னுதான் எழுதிக் குடுக்கனும் போல.

டி.நகர்ல நடேசன் பார்க்கு பக்கத்துல கவியரசர் வீட்டுப்பக்கத்துலயே அவங்க பொண்ணு நடத்துற கண்ணதாசன் மெஸ் போகனுமய்யா...ஆறு மணிக்கு மேல போனா...கெடைக்கும் இட்டிலியும் தோசைகளும் வடையும் அடையும்...வயிற்றை நேராக அடையும்.

நெல்லைக் கிறுக்கன் said...

ஆஹா,
நான் சாப்புட போற எல்லா எடத்தயும் சொல்லிட்டீரு. சுத்திகிட்டே இருக்குத கார்னிவல் ஹயிட்ஸ், சென்னை பூராவும் இருக்குத வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்,அண்ணா நக்ர்ல இருக்க தாபா.. அதயும் சேத்துக்கோங்க உங்க லிஸ்ட்டுல.

Pavals said...

ஜி.ரா>> என்னது இது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடீங்க போல..

அம்மா மெஸ் - ஜீ.என்.செட்டி ரோடே தான்.. எம்.ஜி.ஆர். மெஸ்ன்னும் சொல்லுவாங்க..

//அதென்ன லெதர்லவுஞ்?// சாருநிவேதிதா அந்துமணி வகையராவெல்லாம் படிச்சதில்லையா??

அஞ்சப்பர் ஓடில்லாநண்டு வேணும்னா.. பதினோரு மணிக்கே போயி தாவு காக்கனுமே..

சரவணபவன் தயிர்வடை.. ம்ம்.. அதே மாதிரி கோமளா'ஸ் தயிர்வடையும் கலக்கல் தான்..

கண்ணதாசன் மெஸ்ஸ எப்படி விட்டேன்னு தெரியலை.. அங்க தான் முதன்முதல்லா அடை சாப்பிட்டது (வீட்டை தவிர வெளிய..)

பைக்ஸ் அன் பேரல்ஸ்'ல ஜூஸாவது குடிச்சுட்டு மேல இருந்து ஒரு தடவை வேடிக்கை பாருமய்யா.. ம்ம்.. பரமதரிசன... வேண்டாம்! பெரியவங்க திட்டுவாங்க. :(

Pavals said...

காலபயணி >> //நல்லாயிருந்துச்சு..// நம்ம பதிவா இல்ல நான் சொன்ன இடமும் ஐட்டமுமா?? :)

தேவ் >> இன்னும் நல்லாவே வாழ்ந்துட்டு இருக்கேன் ;)

நெல்லைகிறுக்கன் >> பொளி'ன்னா அது மாம்பலம் ஆர்யகவுடா வீதியில ஒரு சின்ன கடை இருக்கும் அது தான் டாப்.. கடை பேரு மறந்துபோச்சு.. பொளிகார்னர்'ன்னு சொல்லியே பழகியிருச்சு..

இரா. வசந்த குமார். said...

உங்க பதிவு தான் எப்பவுமே நல்லயிருக்குமே... ஐட்டம்ஸ் தான் சொன்னேன்...இப்போ பெண்களூருல மாட்டிக்கிட்டு இனிக்கும் சாம்பாரும், (வெறும்) தேங்காச் சட்னியும்....சேசேசே...

இராம்/Raam said...

ராசா,

அதானே இங்க குப்பை கொட்டிக்கிட்டு இங்கனே இருக்கிற புட்கல்சரை சொல்லாமா விட்டுவீங்ளோன்னு பார்த்தா கடைசிவரி சூப்பரப்பு.... இதல்லாம் கொஞ்சநாளைக்கி தானே, அப்புறமேட்டுக்கு வீட்டுல இருத்துதான் கட்டுச்சோறு கட்டிகொடுப்பாங்களே அப்புறமென்னா ... :-)))

Sud Gopal said...

வடபழனி வசந்த பவன்,மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ்,பாண்டி பஜார் பாலாஜி பவன்,பஜூல்லா ரோடு சங்கீதாவை விட்டுட்டீங்களே???

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ராசா வாழ்க! சாப்பாடு சமாச்சாரம் பத்தி வேணுன்னே நான் எழுதல்லே. அதை ஈடு கட்ட நீங்க பூந்து வெளயாடியிருக்கீங்க. (எனக்கு எழுத அதிகமா இல்லைங்கறதும் உண்மை!) நீங்க சொன்ன எடங்கள்ள ஒண்ணு ரெண்டு தவிர வேற எதுவுந் தெரியாதுங்க!

Anonymous said...

hmpf :(

G.Ragavan said...

// ராசா (Raasa) said...
ஜி.ரா>> என்னது இது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடீங்க போல.. //

ஹி ஹி சாப்பாட்டுச் சமாச்சாரம் பாத்தீகளா....அதான்.

// அம்மா மெஸ் - ஜீ.என்.செட்டி ரோடே தான்.. எம்.ஜி.ஆர். மெஸ்ன்னும் சொல்லுவாங்க.. //

அதே அதே....

// //அதென்ன லெதர்லவுஞ்?// சாருநிவேதிதா அந்துமணி வகையராவெல்லாம் படிச்சதில்லையா?? //

இதெல்லாம் நா எங்க கண்டேன். நீங்களும் வெளக்கமாச் சொல்லாம இப்பிடிப் பூடகமாச் சொல்றீங்களே!

// அஞ்சப்பர் ஓடில்லாநண்டு வேணும்னா.. பதினோரு மணிக்கே போயி தாவு காக்கனுமே..//

அது வேறையா! அப்ப நம்ம வாய்க்கில்ல அது வாய்க்கல!

// சரவணபவன் தயிர்வடை.. ம்ம்.. அதே மாதிரி கோமளா'ஸ் தயிர்வடையும் கலக்கல் தான்.. //

கோமளாஸ்தான.....பாம்குரோவ் பக்கத்துல இருக்குதே. பாத்திருக்கேன். போனதில்லை.

// கண்ணதாசன் மெஸ்ஸ எப்படி விட்டேன்னு தெரியலை.. அங்க தான் முதன்முதல்லா அடை சாப்பிட்டது (வீட்டை தவிர வெளிய..)//

அடையா அது! ம்ம்ம்ம்..

// பைக்ஸ் அன் பேரல்ஸ்'ல ஜூஸாவது குடிச்சுட்டு மேல இருந்து ஒரு தடவை வேடிக்கை பாருமய்யா.. ம்ம்.. பரமதரிசன... வேண்டாம்! பெரியவங்க திட்டுவாங்க. :( //

பெரிய அவங்க திட்டுவாங்களா! ஹி ஹி...அப்பப் போகனுமே!

G.Ragavan said...

// மாதவன் சே ...ராகவன் சொன்ன நடேசன் பார்க் பின்புறம் கண்ணதாசன்

மகளின் (தேவகி ?)மெஸ் . என்ன காசு சரவணபவன் போல் பழுத்துடும்

.அப்போ நின்னுகிட்டுதான் சாப்பிடனும் .இப்பொ தெரியலெ. //

இப்பயும் நின்னுக்கிட்டுதான் சாப்பிடனும். ஆனா நீங்க சொல்ற மாதிரி வெலை இல்லையே. ரொம்பவும் மெதமா இருந்ததே!

MeenaArun said...

bazulla aroad asirwad,
mint street - kakada ramprasad
northeastern ku,kabul -ttk road
nungambakkam GG Emerald pakkathula irukkum star fruit juice
fountain palza chat shop

nungabakkam cakes and bakes

mmm miss panren chennaiya

Unknown said...

தல, ஊருக்கு வர்றப்போ ஒரு கடுதாசி போடுறேன். கொஞ்சம் கம்பெனி கொடுங்க.

Unknown said...

//அஞ்சப்பருல ஓடில்லா நண்டுன்னு ஒரு வகை இருக்கு. ஓட்ட ஒடச்சு உள்ள இருக்குற அந்த மெத்துச் சதைய மட்டும் குலையாமச் சமைச்ச பக்குவம். அதச் சாப்பிடனும்னு பாக்குறேன். கெடைக்க மாட்டேங்குது. போறப்பல்லாம் தீந்து போயிருது.
//

ராகவரே, நண்டு அதோட ஓட்டோட இருக்கிறப்போ கிடைக்கிற டேஸ்ட்டே தனி. ஓட்டோட கடிச்சு, அதுல இருக்கிற சாறு உறிஞ்சு சாப்பிடுறது தனி டேஸ்ட். ஓடில்லாத நண்டுக்கறியிலே அந்த டேஸ்ட் கிடைக்குமா?

Unknown said...

//அப்புறம் இங்க சிங்கையில் ... வந்தா .... என்ன கேட்டுட்டு

சாப்பிடுங்க.
//

தம்பி செந்தில்நாதா (இவரு என் க்ளாஸ்மெட்டுங்க, அந்த உரிமை),

அடுத்த முறை வர்றப்போ வழி காட்டுப்பா...

Udhayakumar said...

ஏன் இவ்வளவு நாளா தனியா சுத்தீட்டு இருந்தீங்கன்னு இப்போ தெரியுது. சென்னையில் பாதி நேரம் சாப்பாட்டுக்கே சரியா போச்சு போல???

பாரீஸ்டா பசங்க கூட போனா உருப்படுமா? நீங்க 120தான், நாங்க ரெண்டு பேரு M.G. ரோடுல 190 குடுத்தோம்... சந்தோஷப்படுங்க...

Anonymous said...

Hi Raja,
After a long time read a very lively article. Keep it up

Viji

காழியன் said...

இதோ என்னோட பங்கு..

"டோக்கன் வாங்கிவிட்டு அரை மணி நேரம் காத்திருந்தாலும், காத்திருந்ததுக்கு அர்த்தம் உண்டு என உணர வைக்கும் 'திருவல்லக்கேணி காசி விநாயகா மெஸ்' மீல்ஸ்ன் சுவை"

Adaengappa !! said...

கலக்கிடிங்க துரை ! தினமும் காஞ்சு போன ரொட்டி சாப்பிடறவனுக்கு உங்க பதிவு வயில ஜொல்லு ஊத்த வச்சிடுச்சு.....
....
நம்ம ஊர்ல காக்க பிரியாணி இன்னும் கிடைக்குதா ?