Thursday, August 17, 2006

பாத கொலுசு பாட்டு

பொதுவாக மண்வாசனையோட வர்ற பாட்டுகன்னா, அடிச்சு தூள்பறக்கிற மாதிரி வர்ற குத்து பாட்டுக தாங்க ஜாஸ்த்தி. கொஞ்சம் இதமா, பதமா இந்த மனச வருடுற மாதிரின்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி வர்ற மண்வாசனை பாட்டுக ரொம்ப கம்மிங்க. ரொம்பவும் சிலாகிச்சு பாராட்டுற மாதிரி பெரிய அளவுல கவிதை வரியெல்லாம் இல்லாம, சாதரணமா கிட்டத்தட்ட பேச்சுவழக்குலயே இருக்கிற பாட்டுகன்னா, சின்னகவுண்டர் படத்துல வர்ற 'முத்து மணி மாலை' தாங்க பிரபலம்.

அந்த வகையில 'திருமதி பழனிச்சாமி'யில வர்ற 'பாத கொலுசு பாட்டு' எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு. கொஞ்சம் அதிகமாவே கொங்குவாசம் வீசுற பாட்டு. ஒரு வேளை, அந்த பாட்டு படமாக்கினது பூராவும் காண்டூர் வாய்க்கால், நவமலை EB பஸ், தண்ணி நிறஞ்சு வழியுற கோட்டூர் தடுப்பனை, அதுக்கு பின்னால இருக்கிற தென்னந்தோப்பு, வயலை ஒட்டி இருக்கிற மாந்தோப்புன்னு நமக்கு தெரிஞ்ச, நம்ம கால்பட்ட பொள்ளாச்சி சுத்துவட்டாரம்ங்கிறதுனாலயோ என்னமோ, எப்பவுமே அந்த பாட்டு மேல ஒரு மயக்கம் உண்டுங்க.

திடீர்ன்னு என்னமோ அந்த பாட்டு கேக்கனும்னு ஒரு ஆசை. சரி'ன்னு வழக்கம் போல ராகா பக்கம் போன அங்கயும் கானோம், ம்யூசிக் இண்டியா பக்கம் போன அங்கயும் இல்லை.. விட்ருவமா என்ன, அங்க இங்கன்னு நம்ம சிஸ்டத்தை புரட்டி போட்டு புடிச்சிட்டமில்ல..

உங்களுக்காக இங்க..



பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்று பூத்த செவ்வரளிப்பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்..

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..

குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்
ஒய்யார மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும்
மத்தாப்பு வாணமெல்லாம் வாய்ச்சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீணிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண்பாவை அழகு
ஒன்னாக கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்

செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வச்ச சித்திரமே
தென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனி சந்தனமே
தென்காசி தூறலிலே கண்விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலநேரம் மாலையிடத்தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..

சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்று பூத்த செவ்வரளிப்பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்..

பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..




இதே வரிசையில வர்ற பாட்டுக வேற என்னன்ன இருக்குன்னு அப்படியே ஒரு லிஸ்ட் குடுங்களேன், மொத்தமா ஒரு ப்ளேலிஸ்ட் போட்டு வைக்கனும் :)



--
#199

20 comments:

Sud Gopal said...

சித்தகத்திப் பூக்களே - ராஜகுமாரன்

கைப்புள்ள said...

1. ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்தை - அச்சமில்லை அச்சமில்லை

2. சின்னப் பொண்ணு சேலை - மலையூர் மம்பட்டியான்

3. மல்லிகை மொட்டு மனசைத் தொட்டு - சக்திவேல்

4. வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா - செண்பகமே செண்பகமே

Pavals said...

சுதர்சன், கைபுள்ள.. >> லிஸ்டெல்லாஞ்சரி.. ஆனா நம்ம பாட்டு ரெஞ்சுக்கு கிட்ட கூட ஒன்னும் வர மாட்டேங்குதே.. :)

அய்யா சிங்கை 'செந்தில்' நாதன்.. megaupload ல இருக்கிறது mp3 format file, அதைய எதுல திறந்து பார்த்தீங்க..
எனக்கு ஒழுங்காத்தான பாடுது ரியல்ப்ளேயர்ல..

இராம்/Raam said...

ராசா,

தலைவரோட "காதலென்னும் தீபம்" பாட்டையும் சேர்த்துகோங்க..

கைப்புள்ள said...

5. நான் ஏரிக்கரை மீதிருந்து - சின்னத் தாய்

6. ராசாவே ஒன்னவிட மாட்டேன் - அரண்மனைக் கிளி

7. கொத்தமல்லிப் பூவே புத்தம்புது காத்தே - கல்லுக்குள் ஈரம்

8. வெட்டிவேரு வாசம் - முதல் மரியாதை

கைப்புள்ள said...

//ஆனா நம்ம பாட்டு ரெஞ்சுக்கு கிட்ட கூட ஒன்னும் வர மாட்டேங்குதே.. :)//

ஓ அப்படி வரீங்களா! சாரிங்கோ...பாட்டு லிஸ்டை நீங்க கேக்கறதுக்குத் தான் கேட்டீங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்.
:)

Pavals said...

//பாட்டு லிஸ்டை நீங்க கேக்கறதுக்குத் தான் கேட்டீங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.// க.க.க.போ.. :)

கானா பிரபா said...

வணக்கம் ராசா

பாலுவின் குரலினிமையும், ராஜாவின் இசையும், வாலியின் வரிகளுமாக எல்லாமே சிறப்பாக வந்த முத்துக்களில் ஒன்றல்லவா இப்பாடல்.

கதிர் said...

ரெண்டுமே மிக சிறந்த மெலடிகள்,
பாத கொலுசு என்னோட ஆல்டைம் பேவரிட்.

பெத்தராயுடு said...

1. வருது வருது இளங்காத்து.. - பிரம்மா

2. நிலாக் காயும் நேரம் - செம்பருத்தி

3. பட்டுப்பூவே மெட்டுப்பாடு - செம்பருத்தி

4. அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே

5. ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக்கள்ளன்.

ILA (a) இளா said...

ஒரு குறுந்தகடே இருக்கு, தோட்டத்து பக்கம் வரும்போது தரேன். ஞாபகப்படுத்துங்க

Unknown said...

வெள்ளி கொலுசு மணி - ஒரு ராமராஜன் படம், பேரு தெரியலை

Anonymous said...

இப்ப தான் ப்ர்ஸ்ட் டைம் லிஸ்னிங், நல்லா தான் இருக்கு பாட்டு.

Pavals said...

லிஸ்ட் குடுத்த மக்களுக்கு நன்றி :)

சிங்கை நாதன்.. அதெல்லாம் லுல்லுலாயிக்கு.. கண்டுக்காதீங்க..

WA >> பர்ஸ்ட் டைம்.. குட்.. ஆமா, என்ன திடீர்ன்னு காணாத போயிட்டீங்க.. :(

தகடூர் கோபி(Gopi) said...

ஏனுங்க ராசா,

அதே 'திருமதி பழனிச்சாமி'யில வர்ற 'குத்தால குயிலே..' பாட்டு எப்படி.. நம்ம ரேஞ்சுல இல்லிங்களா?

நமக்கு எல்லாம் 'புதிய வார்ப்புகள்'ல வர்ற 'நம்தன.. நம்தன.. தாளம் வரும்.." தான்.

கானா பிரபா said...

//வெள்ளி கொலுசு மணி - ஒரு ராமராஜன் படம், பேரு தெரியலை

posted by: Cipher//

அது பொங்கி வரும் காவேரி படம்

Syam said...

தேனுங் மச்சான் தென்னங்க கலியானம் பக்கத்துல வந்துருச்சாக்கும்....

Anonymous said...

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்துல 'மதுர மரிக்கொழுந்து வாசம்' தேறுதான்னு பாருங்க

Anonymous said...

Asayila Paathi katti Naathu onnu nattuvechan from Enga ooru Paatukkaran

Udhayakumar said...

Asayila Paathi katti Naathu onnu nattuvecha - எங்க ஊரு பூவாத்தா...