
"மழைய ருசிச்சிருக்கயா?"
ஒரு மழைக்கால கல்லூரி சுற்றுலாவின்போது கேட்டாள்.
"ரசிச்சிருக்கறன்.. ருசிக்கறதா?"
புரியாமல் அவளை பார்த்தேன்.
விழி மூடி,
வானம் பார்த்து,
உதடு சுழித்து.
மழையை ருசித்துகொண்டிருந்தாள்.
அன்று தான் முதன் முதலில் மழையை ருசித்தேன்..,
அவள் உதடுகளில்.
"பின்னாடி ஒரு நாள் இங்க வரணும்"
வெட்கத்துடன் தோள்சாய்ந்து கேட்டவளுக்கு,
"மறுபடியும் மழையை ருசி பார்க்கவா?" குறும்பாய் கேட்டுவிட்டு
"கண்டிப்பா..?" தலைகோதி வாக்கு குடுத்தேன்.
இன்று
மீண்டும் வந்திருக்கிறேன்..
மழைக்காலம் தான்..
அவள் இடத்தில் 'இவள்'
"மழையை ருசிச்சிருக்கயா..?"
இந்த முறை இதை கேட்டது.. நான்.
அவளும் கேட்டிருப்பாள்..
நாங்கள் 'வாக்கு தவறாதவர்கள்'.
--
#200

21 comments:
//"பின்னாடி ஒரு நாள் இங்க வரணும்"
வெட்கத்துடன் தோள்சாய்ந்து கேட்டவளுக்கு,
"மறுபடியும் மழையை ருசி பார்க்கவா?" குறும்பாய் கேட்டுவிட்டு
"கண்டிப்பா..?" தலைகோதி வாக்கு குடுத்தேன்.//
ஹலோ சாமி! இது பச்சிளம் பாலகர்களும் வந்து போற எடங்கிறதை நெனப்பு வச்சிக்கிட்டு பதிவு போடுங்ணா.
பாருங்கைய்யா பாருங்க! இந்த அநியாயத்தை எல்லாம் தட்டிக் கேட்க யாருமே இல்லியா?
:)
மழைய எப்படியெல்லாம் ரசிச்சுருக்கிங்க!!
ஹும்
இந்த ரோசனை எனக்கு வராம போயிடுச்சே :-(
நனைந்து கொள்ள,நினைந்து கொள்ள
ஒவ்வொருவருக்கும் ஒரு மழை.
அட சுதர்சா,உனக்கு கூட கவிஜ வரும் போல இருக்கே...இதத் தான் பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்னு சொல்றதோ???
அப்பறம் போன வாரம் நம்மளக் கழட்டி விட்டிட்டு நந்தினியில....இதெல்லாம் கொஞ்சம் ஓவரய்யா...
Congrats for ur 200th Post.
Kavithai kallakkal !
கைப்புள்ள>> //இது பச்சிளம் பாலகர்களும் வந்து போற// யோவ்.. பாலகர்கள் கூட்டத்தை விட உன்னைய மாதிரி ஆளுக தான் ஜாஸ்த்தி வர்றாங்க, அதுக்குத்தான் இப்படி :)
//தட்டிக் கேட்க யாருமே இல்லியா?// ஷாட் கட் பண்ணினா, அடுத்த சீன்ல டாப் ஏங்கில்'ல பார்த்தா 'கைப்புள்ள' ஒரு கம்போட. 'ஏன் ,நானிருக்கிறேன்'னு சொல்லிகிட்டே ஓடி வராரு பாருங்க..
எண்ணம் எனது >> நன்றி.
தம்பி >> ஹி..ஹீ.. நான்தான் ரசிச்சதுன்னு சொல்றீங்களா?
சுதர்ஷன் >>
//நனைந்து கொள்ள,நினைந்து கொள்ள
ஒவ்வொருவருக்கும் ஒரு மழை.// கண்ணு கலக்கறயே..
//அப்பறம் போன வாரம்// எங்க போயிரப்போகுது. எல்லாம் அங்கனயே தான் இருக்கும்ம்.. மறுபடி ஒரு நாள் அமையாமயா போயிடும்.. அப்ப வச்சுக்குவோம்.. (அப்பவும் இந்த மாதிரி கவுஜ எல்லாம் சொல்லனும்.. ஓகேவா?)
ven >> வாழ்த்துக்கு நன்றி.. :)
//அப்பறம் போன வாரம் நம்மளக் கழட்டி விட்டிட்டு நந்தினியில//
விடுங்க, இன்னொருமுறை பார்த்துக்குவோம்.
ராசா, நல்ல கவிதை. 200வது பதிப்பை போட்டாச்சு. வாழ்த்துக்கள 200 2000 ஆக விவசாயிகள் சார்பா இன்னுமொரு வாழ்த்துக்கள்.
#ஒரு ஒத்துமை பாருங்க, நானும் பதிவு ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம் முடியுது.
ராசா,
கவிஜ நல்லாயிருக்கு.. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பாத்துங்க... இதே ரேஞ்சில போனா மண்ணை ரு(ர)சிக்க வேண்டி வந்துரப் போவுது...
எதுக்கும் ஜாக்கிரதையாவே இருங்க என்ன...
நல்ல ரசனை... ஆமா மழைத் தண்ணி ருசி எப்படின்னு சொல்லாம விட்டுட்டீங்களே?
இடி இடித்து,
துளிகள் பார்த்து,
மழை ருசி அறிந்து,
மண் வாசனை நுகர்ந்து,
மழையில் நனைந்திருப்பீர் போல....
ஐம்புலன்களுக்கும் வேலை...!
Hi raasaa,
check how much your blog worth in this site http://www.business-opportunities.biz/projects/how-much-is-your-blog-worth/
Your blog, raasaa.blogspot.com, is worth $16,936.20
கோபி >> நன்றி..
//எதுக்கும் ஜாக்கிரதையாவே இருங்க என்ன..//
நாங்க எப்பவுமே 'சந்தோசமாவும் இருந்துக்கனும், அதே சமயம் சாக்கிரதையாவும் இருந்துக்கனும்'னு குங்குமபொட்டு கவுண்டர் சொன்னதை ஃபாலோ பண்றவங்க, அதுனால் அந்த நிலமை வராதுன்னு நினைக்கிறேன் :)
தேவ் >> //மழைத் தண்ணி ருசி எப்படின்னு// இதுக்கே கைப்பு டென்ஷன் ஆவறாரு.. இனி ருசியெல்லாம் சொன்னா.. அவ்ளோட் தான்.. அப்புறம்.. மீ குட் பாய்.. அது உங்களுக்கு தெரியும் தானே :)
காலபயணி >> நன்றி.. நன்றி..
ப்ரசண்ணா.. >> 16 எல்லாம் கூட வேணாங்க.. ஒரு 10 குடுங்க.. உங்க பேருக்கே எழுதி குடுத்திற்றேன்.. :)
மழை ருசியானதுதான்
இந்தக் கவிதை போல ரசித்தால்...
நன்கு ருசித்திருக்கிறீர்கள்...மன்னிக்க...ரசித்திருக்கிறீர்கள். ;-)
ஒரு + போட்டுட்டேன் ஐயா..
//"மழையை ருசிச்சிருக்கயா..?"
இந்த முறை இதை கேட்டது.. நான்.
அவளும் கேட்டிருப்பாள்..
//
"மழையை ருசிச்சிருக்கயா..?"
இந்த முறை இதை கேட்டது.. இவள்.
இப்படி முடிச்சிருந்தா tragedyல முடிஞ்சிருக்கும் ;-).
//அவள் இடத்தில் 'இவள்'//
ச்சே, நாங்க தான் கிறுக்குபயலுக போல. அவள் இடத்தில் அவளே இருக்கிறதால அப்போ ருசிக்க மழை கூட இப்போ கசக்குது :-P
Hi Raasa,
This Kavithai is really good.
Congrats for ur 200th post. Expecting 2000th post from u soon.
SweetVoice.
மழை என்பது இயற்கையானது மற்றும் அழகானது.இதனோடு உங்கள் செயற்கையானதையும் இணைக்கீறீர்களே.
Post a Comment