Friday, August 11, 2006

என்னைய பார்த்து.....

பட்டுகோட்டை

பப்பி

முதல் ராத்திரி

எது நடந்ததோ

பொண்ணும் பொண்ணும் செக்ஸ்

லூசா நீ

திரிஷா குளியல்


ஒன்னுக்கொன்னு சம்பந்த்தப்பட்டும் படாமயும் இருக்கிற இந்த வார்த்தைகள் என்னன்னு உங்களுக்கு தெரியுதுங்களா?

துண்டு துண்டான வாக்கியங்களை வச்சு எதாவது நவீன இலக்கியம் எதும்எழுத முயற்ச்சி பண்ண ஆரம்பிசுட்டானா ராசா'ன்னு நினைக்கரீங்களா.. அப்படி எல்லாம் இல்லீங்க. ஒரு தடவை எதோ அத மாதிரி எல்லாம் செஞ்சோம், மறுபடியும் அப்படி எல்லாம் எழுதற அளவுக்கு திராணி இல்லீங்க.. ( அடி தாங்க முடியலை, ரவுண்டு கட்டிட்டாங்க மக்கள்)

என்னடா இவன் நல்லாத்தான இருந்தான், திடீர்ன்னு இப்படி விவகாரமா ஆரம்பிக்கரானே, எதாவது போலி மகிமையான்னு பார்க்கரீங்களா? அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. மேல சொன்ன வார்த்தைகள 'தேடு சொற்களா' உபயோகப்படுத்தி தேடுனவங்கள, கூகிளாண்டவர் நம்ம பதிவுக்கு கூட்டிட்டு வந்து விட்டிருக்காரு.. பாவம் மக்கள்.. அவுங்களுக்கு என்ன விசனமோ, என்ன அவசரமோ, இப்படி தேடியிருக்காங்க. தேடினவங்க இங்கன வந்து என்னைய என்னவெல்லாம் திட்டுனாங்களோ.. நல்லவேளை நமக்கு கூடப்பொறந்தவங்க யாரும் இல்லை :)

ஆனாலும் கூகிளாண்டவருக்கு ரொம்ப குசும்புங்க.. எதுக்கெல்லாம் நம்மள அடையாளம் காட்டுறாரு பாருங்க.. இந்த கொடுமை எல்லாம் நான் எங்க போயி சொல்றது..
மிஸ்டர் கூகிளாண்டவர், எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா எல்லாம் இருக்குது, தெரிஞ்சுக்கோங்க..

டெக்னாலஜி என்னதான் வளர்ந்தாலும், நம்ம மக்கள் தேடுற மேட்டர் மட்டும் வளரவும் இல்லை மாறவும் இல்லை..

நான் எதும் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க.. எல்லாம் சைட்டுமீட்டரு உதவியோட தான் சொல்றேன்.. வேணும்னா நீங்களும் சொடுக்கி பாருங்க..
(ராசபார்வை வருதான்னு மட்டும் தான் பாக்கனும்.. வேற எதும் பார்த்தீங்க. அப்புறம், அந்த பாவத்துகெல்லாம் நான் பொறுப்பில்ல ஆமா)

(பொண்ணும் பொண்ணும் செக்ஸ்)

(பப்பி)

(திரிஷா குளியல்)

(முதல் ராத்திரி)

(லூசா நீ)

(பட்டுகோட்டை)

(எது நடந்ததோ)


Pictures from:
http://www.haloimages.com
http://: www.allposters.com
http://www.philkaplan.com
--
#198

11 comments:

மின்னுது மின்னல் said...

/./
[படிச்சது படிச்சுட்டீங்க ஒரு '-' அல்லது '+' போட்டுட்டு போங்க.. உங்க வருங்கால சந்ததியினருக்கு புண்ணியமா போகும் ;)]
/./

+

மின்னுது மின்னல் said...

எதோ நீ சொன்னேனு ஒரு + போட்டேன் வருங்கால சந்ததியாவது ஃபிளாக் பக்கம் வராம இருக்கட்டும்

கைப்புள்ள said...

எல்லாஞ்சரி தானுங்க. உங்க பின்நவீனத்துவத்துக்கு மக்கள் உங்களை ரவுண்டு கட்டறாங்களோ இல்லியோ...இந்தப் பதிவை ஆன்மீகம்/இலக்கியத்துல வகைபடுத்துனதுக்கு ரவுண்டு கட்ட நெறைய சான்ஸூ இருக்குதுங்கோ.
:)

மின்னுது மின்னல் said...

/..//
(திரிஷா குளியல்)

(முதல் ராத்திரி)

(லூசா நீ)
/./

தல இதெல்லாம் இலக்கியம் இல்லையா??

அப்ப இது ஆன்மிகம் தான்.::)

WA said...

:))

மின்னுது மின்னல் said...

தல நீ இங்க என்ன பன்னுற சங்கத்தில நீ ஆப்பு வாங்குறது ஏன்? அப்படினு நம்ம ஒணான்டி விளக்கி சொல்லுராரு வா நீ வா ::)

ILA(a)இளா said...

கிளூகிளுப்பா எழுதி இருக்கீங்கன்னு நெனச்சா, சே உப்பு சப்பே இல்லப்பா.
அது சரி நம்ம விவசாயதுல கூட நேத்து இப்படிதான் எழுதி ....எழுதி..எழுதி...

அனுசுயா said...

இது எனக்கும் நடக்குதுங்க. த்ரிஷானு தேடினா என் ப்ளாக் செய்திபஞ்சம் போஸ்ட்டுக்கு கொண்டுவருது.

சுதர்சன்.கோபால் said...

தொடரட்டும் உமது ஆன்மீகப் பணி....

கொங்கு ராசா said...

என்னத்த சொல்ல.. என் பங்குக்கும் எல்லாருக்கு மொத்தமா ஒரு :))

Syam said...

ஸ்டாட் மீசிக்...ஏனுங்னா பன்றத எல்லாம் பன்னீட்டு இப்ப இப்புடி சீன் போடறீங்...இது உலக மகா நடிப்புடா சாமியோவ்..

:-)