Monday, October 9, 2006

உள்ளேன் ஐயா

போன நாலு வாரத்தில மட்டும்,
மூணு தடவை வடக்க அரசியல் தலைநகரம் பக்கம் அடிச்சு தாக்குற வெய்யில்ல வீதியில நின்னுகிட்டு அலுமினிய காகிதத்துல சுத்தின முர்க்டிக்காவும், எக்ரோலுமா உள்ள தள்ளிகிட்டு,
அஞ்சு தடவை மத்தியில பொருளாதர தலைநகரம் பக்கம் நவராத்திரிக்கு போட்ட கோதுமைலட்டு, பால்கோவான்னு பாசமழையில நனைஞ்சுட்டு,
மிச்ச நேரத்துல வழக்கம் போல வெண்ணை மிதக்கிற செட்தோசையும், ஆந்திராமீல்ஸுமா சுத்திட்டு,
நடுவால ரெண்டு நாள் ஊருபக்கம் ஒதுங்கி அச்சாப்பீஸ், துணிக்கடைகன்னு சுத்தி.
"இப்படி அவசரமா ஓடறதுக்கு, இப்ப எதுக்கு வந்த? வந்தது வந்த, சொல்லிட்டாவது வந்திருக்கலாம், இப்பப்பாரு முததடவை என்கையால இதை சாப்பிடற".. ன்னு கோவமும் வருத்தமும் கலந்து ஊத்தி குடுத்த சோளதோசைய காரப்பொடி தொட்டு சாப்பிட்டுட்டு, அதைய "இதுவே சூப்பரா இருக்கு, இந்த மாதிரி சாப்பிட்டதே இல்லை"ன்னு நாலு நல்ல வார்த்தை சொல்லியும் மசியாம.. மறுபடியும் மூக்கு உடைஞ்ச கையோட விடிய விடிய கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர்'ன்னு ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா செளக்கியம் விசாரிச்சு, ஒருவழியா இங்க வந்து சேர்ந்து, மூணு நாளா கதவடைச்சு வச்சுகிட்டு வெள்ளைக்கார துரைக பேசுனதுக்கெல்லாம் ஆமாம் போட்டு, நல்ல மழைநேரத்து சாயங்காலத்துல எல்லாப்பயலும் கையெழுத்து போட்டு தொலைஞ்சு.. அப்பாடான்னு மக்கள கூட்டிகிட்டு 'ஃக்குஃபா'ல போயி 'பழையகாலத்து' கூட கொண்டாடி.. (இப்ப எல்லாம் கையெழுத்து கிடையாது ஒரே நீலக்கலர் பழையகாலம் தான்)... ஸ்ஸ்ஸப்பா....

அதாவது ராசா என்ன சொல்ல வர்றாருன்னா.. அவரு ஒரு மாசமா பயங்கிற 'பிசி'யாம்.. அவ்ளோதான்.. காணதயெல்லாம் போயிடல. :) இவத்தயே தான் சுத்திகிட்டு இருக்காரு.. வருவாரு..

--
#208

5 comments:

ramachandranusha(உஷா) said...

அச்சாபீஸ், துணிக்கடை, முதல்தடவையா செய்துப் போடுகிற சோளதோசை.... புரிஞ்சிடுச்சு, புரிஞ்சிடுச்சு :-))))))))))))

Sud Gopal said...

ஓ...

---- கையோட விடிய விடிய கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர்'ன்னு ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா செளக்கியம் விசாரிச்சு, ஒருவழியா இங்க வந்து சேர்ந்து,----

செம் ஸ்டோரீ.

Anonymous said...

aga.. ennanga solla varenga :)
-
Jagan

Anonymous said...

//"இப்படி அவசரமா ஓடறதுக்கு, இப்ப எதுக்கு வந்த? வந்தது வந்த, சொல்லிட்டாவது வந்திருக்கலாம், இப்பப்பாரு முததடவை என்கையால இதை சாப்பிடற".. ன்னு கோவமும் வருத்தமும் கலந்து ஊத்தி குடுத்த சோளதோசைய காரப்பொடி தொட்டு சாப்பிட்டுட்டு, //

சோள தோசையாயிருந்தா என்ன, கம்பஞ்சோறா இருந்தா என்ன, கொடுக்கறவங்க கொடுத்தா எல்லாமே சூப்பர்தான்.

அனுசுயா said...

//"இதுவே சூப்பரா இருக்கு, இந்த மாதிரி சாப்பிட்டதே இல்லை"//

mm ippave arambichacha? :)))))