Thursday, December 23, 2004

ஊருசுத்த போறேன்..

செமத்தியான வேலைக்கு நடுவால திடீர்ன்னு ரெண்டு நாள் வண்டிய எடுத்துகிட்டு மலைப்பிரதேசமா ஒதுங்கிறதுங்கிறது.. ரொம்ப சந்தோஷமான விஷயம்ங்க.. இப்போதைக்கு தலைக்கு மேல வேலை இருக்குதுன்னாலும் (இப்பத்தான் ஞாபகம் வருது, முடி வேற வெட்டிக்கனும்.. காலையிலயே எங்கம்மா கிட்ட பேச்சு வாங்கினேன்) அந்த சந்தோஷத்துலயே வேலையெல்லாம் கொஞ்சம் ஜரூரா நடக்குதுங்க..

பாத்தீங்களா.. எங்க போறேன்னே சொல்லாம என்னத்தையோ சொல்லிட்டு இருக்கேன்.. இந்த வருஷத்தோட கடைசி வாரக்கடைசிய 'மூனார்'ல கொண்டாடிவோம்னு நம்ம சகாக்கள் கூட்டத்துல முடிவு செஞ்சு, அவசரஅவசரமா, மூனார்ல இருக்கிற நம்ம 'டேனியல' புடிச்சு ஒதுக்குப்புறமா டெண்ட் அடிக்க இடம் புடிக்கச்சொல்லி.. வீட்டுல சொல்லி பர்மிஷன் வாங்கி (நாங்கெல்லாம் வீட்டுக்கு அடங்கின புள்ளைகளாச்சே!!), மூணு வண்டிய தயார் பண்ணி.. ம்ம்.. இருக்கிற வேலைக்கு நடுவால இது ஒரு தொல்லைன்னாலும், அந்த ரெண்டு நாள் கூத்துக்காக எல்லாத்தயும் சந்தோஷமா செஞ்சாச்சுங்க..
எங்கய்யன் வேற "இந்த வருஷம் குளிர் பயங்கிறமா இருக்குதாம், (மைனஸ்ல அடிக்குதாம்)எதுக்குடா இப்போ அங்க போறீங்க"ன்னு கேக்குறாரு அவருகிட்டபோயி .. "அதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம்.. அதுக்கு தான் துணைக்கு smirnoff'ம் oldmonk'ம் இருக்குதில்லை"ன்னா சொல்ல முடியும்..

ம்... ரெண்டு நாள் எந்த தொல்லையும் இல்லாம ஏகாந்தமா சுத்திட்டு வரப்போறேன்.. குறிப்பா.. நம்ம செல்போன் வேற அங்க எடுக்காது, அதுவே ஒரு பெரிய சந்தோஷம்ங்க, (கிறுஸ்த்துமஸ் வேறயா... கேரளா களைகட்டி இருக்கும்..) வரட்டுங்களா.......

(இந்த மாதிரி வித்தியாசமான படமா புடிச்சு போட்டா, என்னையும் அறிவுஜீவி வகையில சேத்துக்குவாங்கதான??)

5 comments:

தகடூர் கோபி(Gopi) said...

என்சாய் ராசா. போயி வந்ததும் படமெல்லாம் போடோனும். சொல்லிப்போட்டனுங்க ஆமா!

இராதாகிருஷ்ணன் said...

பாத்து போயிட்டு வாங்க ராசா :)
அப்றம், வாய்க்கா தண்ணி எல்லாம் நின்னுடுச்சுங்களா?

Mookku Sundar said...

ராசா,

மூணார் அருமையான ஊர். என்சாய்.

ஆனா பையன்களோடவா போறிங்க..??? :-)

தங்ஸ் said...

சேச்சே..நம்மகிட்ட சும்மா பையன்களோட போறதா சொல்லியிருக்கார்..சீக்கிரம் இன்விடேஷன் வரும் பாருங்க.

Pavals said...

ஆஹா.. நிறைய பேரு நமக்கு ஆப்பு வைக்க ஆசையா இருக்கீங்களா??
ம்ம்.. malekind நண்பர்களே... காப்பாத்துங்க...