Saturday, August 6, 2005

ஒரு அழகி இருந்தாள்

ஒரு மாசமா பேஞ்ச மழையில ஊருக்குள்ள கேபிள் டீ.வி'காரங்க நட்டுன கம்பமெல்லாம் அங்கங்க கோக்கு மாக்கா சாஞ்சுட்டு நிக்குதுன்னு நேத்து 'மெயிண்டனன்ஸ் டே' அறிவிப்பு குடுத்துட்டாங்க.. நமக்குத்தான் அந்திசாஞ்சிருச்சுன்னா டீ.வி பொட்டிய விட்டா வேற கதி கிடையாதே (ராசா நல்ல பையன்'ங்கிறதுக்கு மறுபடியும் ஒரு சாட்சி).

கேபிள் இல்லாததால நேத்து வெள்ளிக்கிழமையா வேற போச்சுங்களா, படம் போடுவாங்களே பார்ப்போம்னு DD பக்கம் போனேன், கொஞ்சம் பழைய நினைப்புல, முன்ன இந்த 'சிட்டி' நெட்வொர்க் எல்லாம் வர்றதுக்கு முன்னாடி வெள்ளிகிழமை ராத்திரிகள் தான் நமக்கு அமிதாப்பச்சனையே காமிச்சு குடுத்தது, இன்னும் அதே வாசனையில தான் படம் போடறாங்க, அதுவும் அந்த 'வீக்கோ டர்மரிக் க்ரீம்' விளம்பரம் !!!.. அநேகமா அதுல நடிச்ச மாடல் நடிகைகளோட பேரன் பேத்தியெல்லாம் கூட இப்போ நடிக்க வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. இன்னும் அவுங்க விளம்பரத்த மாத்த மாட்டாங்க போல.. வீக்கோ டர்மரிக்குக்கும், டாபர் ஹாஜ்மோலாவுக்கும் நடுவால ஒரு படம் போட்டாங்க..
'ஏக் ஹஸீனா தீ'.. (ஒரு அழகி இருந்தாள்.. சரியா?)



ராம்கோபால்வர்மா'வோட பாக்டரி ப்ராடக்ட்.., டைரக்டர் ஸ்ரீராம்ராகவன், சாயிப் அலிகான், ஊர்மிளா நடிச்சது.. நம்ம கூட்டாளிக வேற நல்லாயிருக்குனு நொல்லியிருந்தாங்க, நானும் ரொம்ப நாளா பார்கனும்னு நினைச்சிட்டிருந்த படம், கோயமுத்தூர்ல போட்டு ஒரே வாரத்துல தூக்கிட்டாங்க.
அரதப்பழசான பாதிக்கபட்ட கதாநாயகி பழிவாங்கிற கதை தான், ஆனா, படம் எடுத்த விதமும், சாயிஃப்போட நடிப்பும் தான் டாப்க்ளாஸ். எனக்கு சொன்னவங்க ஊர்மிளா சூப்பரா செஞ்சிருக்கிறதா சொன்னாங்க,, ஆனா எனக்கென்னமோ, ஊர்மிளாவ விட சாயிப் தான் கலக்கியிருக்கிறதா தோனுச்சு, அப்புறம் அந்த போலீஸ் ஆபீசர் வேஷத்துல, சீமா பிஸ்வாஸ், வக்கீலா வர்ற ஆதித்யா, எல்லாருமே அப்படியே செதுக்கிவிட்ட மாதிரி அழகா நடிச்சிருக்காங்க.
எனக்கென்னமோ அந்த ஜெயில் சீனெல்லாம் பார்க்கும் போது 'மகாநதி' ஞாபகம் வந்துச்சுங்க, தப்பு சொல்ல முடியாது, ராம்கோபல்வர்மா படம் எல்லாமே பெரும்பாலும் 'இன்ஸ்பிரேஷன்' படங்களா தான் இருக்கு.. அப்புறம் பின்னனி கலக்கியிருக்கும்னு வேற சொன்னாங்க, ஆனா நம்ம DDயில புள்ளிக்கும் கரகரப்புக்கும் நடுவால பார்த்துட்டு அதை பத்தி என்னத்த சொல்றது..? டீ.வீ.டீ, கிடைச்சா மறுபடியும் ஒரு தடவை பார்க்கனும்.

அப்புறம் படம் பார்த்துட்டு சென்னையில இருக்கிற சகா ஒருத்தன் கிட்ட போன்ல பேசிட்டிருந்தேன்.. 'மிஸ் பண்ணிட்டடா மாப்ள.. ராஜ்'ல 'ராஜகாளியம்மன்' போட்டிருந்தாங்க'ன்னு வருத்தப்பட்டான்.. :-(

--
#114

8 comments:

Anonymous said...

punitathay miss pannitingalay raassa

navin

Anonymous said...

sorry, puniyathai nu solla vanthaen.
navin

Anonymous said...

அய்யா ராசா, எப்டிய்யா இதெல்லாம்? தானா வருதா? சும்மா மூச்சு கட்டில்ல அடிக்கிறீக.. பின்னுங்க...

(தனிமடலிடுங்கள் ராசா சந்திக்கனும்... mmoorthee at gmail dot com)

Unknown said...

அதென்ன அடிக்கடி நல்லப்புள்ள நல்லப்புள்ள'ன்னு அழுத்தி சொல்லிக்கிட்டு இருக்கிங்க. வூட்டுல பொண்ணு பார்க்கிறாங்களா? இல்ல, பார்த்தப் பொண்ணுகிட்டே உங்க பதிவு சுட்டிய கொடுத்துட்டிங்களா?

ஏஜண்ட் NJ said...

சிறிய விஷயங்களைக்கூட எளிய நடையில் எழுதும் தனித்திறமையால், தனக்கென பெரும் வாசக வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும், 'தல' கொங்கு ராசா நல்லவரே நல்லவரே நல்லவரே.

+++
ஒரே பொய்ய திரும்பத் திரும்ப ஒரு பத்துவாட்டி சொன்னா உண்மையாயிடுமா?! தெரிஞ்சவங்க சொல்லுங்களேன் பிளீஸ்..


ஞானபீடம்.

Pavals said...

நவீன், நமக்கு ஏற்க்கனவே புண்ணியம் ஓவர்லோடா இருக்கிறதால, புதுசா புண்ணியத்த தேடி போறதில்லை.. :-)

வாங்க மூர்த்தி, தனி மெயில் போட்டிருக்கேன் பாருங்க

KVR// வூட்டுல பொண்ணு பார்க்கிறாங்களா?// ஹீ..ஹி.. அதுனாலன்னு இல்லை.. சும்மா, அடிக்கடி நம்மளே நம்ம பத்தி பேச வேண்டியிருக்கு , இல்லாட்டி எதாவது தப்பா கிளப்பிவிட்டுடறாங்க.. அதான்..

ஞானம்.. நீர் ஒரு ஆளு போதும்ய்யா.. நமக்கு குழி தோண்ட.. :-(

Pavals said...

welcome viji.. அதுக்கெல்லாம் நோ பீலிங்க்ஸ்..
இருந்தாலும் 'ராஜகாளியம்மன்' படத்தை சப்பை படம்னு சொல்லிட்டீங்களே.. அது தான் பீலிங்'ஆ இருக்கு.. ;-)

capriciously_me said...

cha...urmila ungaluku kaaliamman-oda mukkiyama poitaala? ippadi paniteengale raasaa....;)