Saturday, August 20, 2005

விடை இல்லா கேள்விகள்

பத்து நாளா 'ராசபார்வை'யில புதுசா நான் எதுவுமே எழுதலைங்களா, உலகம் பூராவும் இருந்து ஏன் எழுதலை? ஏன் எழுதலை? உங்க எழுத்தை படிக்காம எனக்கு தூக்கமே இல்லை, அப்படி இப்படின்னு நூத்துகணக்கான ரசிகர்கள் எனக்கு தனிமடல் போட்டு கேட்டுட்டே இருக்காங்க..
சரி.. சரி.. எனக்கே கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.. நிப்பாடிக்கறேன்.. ஒரே ஒருத்தர் தான் கேட்டாரு, அதையே நான் பாட்ஷா மாதிரி நூறாக்கிட்டேன், அவ்வளவுதான், அதுக்கு எதுக்கு இப்போ நீங்க இப்படி டென்ஷன் ஆவரீங்க, அவனவன் என்னென்னமோ கதை சொல்லிட்டு திரியறான், அதையெல்லாம் கண்டுக்க மாட்டீங்க, நான் எதாவது சொன்னா மட்டும் கோவப்படுறீங்க. என்னத்த செய்யறது? அப்படியே பழகிட்டோம் நம்ம.. கிரிக்கெட்ல தோத்து போயிட்டா உடனே நம்மாளுக வீட்டுல கல்லுவீசுறோம், படத்துக்கு தீ வைக்கிறோம், ஆனா, நம்ம வோட்டு போட்டு ஜெயிக்கவச்சு சட்டசபைக்கு அனுப்பினவங்க அங்க போயி பெஞ்ச தேய்ச்சுகிட்டு, டேபிளை தட்டிட்டு வெட்டியா திரும்பி வந்திட்டா, அவுங்கள நம்ம எதாவது கேக்கிறமா என்ன? நம்ம உணர்ச்சிவசப்படுறதே இந்த மாதிரி பைசா பெறாத விஷயத்துக்கு மட்டும்தான்..
சரி, அதை விடுங்க, நான் ஏன் பத்து நாளா ஒண்ணுமே எழுதலை? பத்து நாளா பதிவு எழுதற மாதிரி ஒண்ணுமே நடக்கலையா.. இல்லையே...
திருவாசகம், ஒரிஜினல் சிடி வாங்கி, எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல ஆடியோ சிஸ்டத்துல போட்டு, அமைதியான நேரத்துல வீட்டுல எல்லாரும் தூங்கினதுக்கப்புறம், சோபாசெட் கைப்புடியில தலைகாணி வச்சு படுத்துகிட்டே கேட்டாச்சு, அதை பத்தி எழுதியிருக்கலாம்.
அழகியதீயே டைரக்ட் செஞ்ச ராதாமோகன், அந்த படத்துக்கு வசனம் எழுதின விஜி, இவுங்களோட காம்பினேஷன்ல வந்த 'பொன்னியின் செல்வன்' பார்த்தாச்சு, அதுல AMரத்னம் தெலுங்கு தேசக்காரர்ங்கிறத யாரும் மறந்திரக்கூடாதுன்னு 'மாதங்கி - அனுராதாஸ்ரீராம்' காம்பினேஷன்ல ஒரு 'கிக்' பாட்டு போட்டிருக்காங்களே அதை பத்தி கூட எழுதியிருக்கலாம்.
வீட்டு வாசல்ல இருக்கிற வேப்பமரத்துல புதுசா முளைச்சிருக்கிற தேன்கூட்டை, மேல்கிளையில இருக்கிறதால அப்படியே விட்டறலாமா, இல்லை எதுக்கு வீணா வம்பு கலைச்சிரலாமான்னு, எங்க வீட்டுல இன்னும் நடந்துட்டு இருக்கிற பட்டிமன்றத்த பத்தியாவது எழுதியிருக்கலாம்.
லாம்.. லாம்.. லாம்.. ஆனா நான் ஏன் எழுதலை??
உடம்பு கிடம்பு சரியில்லையா, அதெல்லாம் ஒண்ணுமில்லையே நல்ல பாத்திகட்டி அடிச்சுட்டு மலைமாடு மாதிரி தான் திரியறேன், சிஸ்டத்துல எதும் பிரச்சனையான்னா, அதுவும் இல்லை.. அப்புறம் ஏண்டா'?ன்னா..
வேலுநாயக்கர் அவர் பேரன் கிட்ட சொல்ற மாதிரித்தான்.. 'த்தெர்ரியலையேப்பா'..



இந்த மாதிரி விஷயங்களைத்தான் பெரியவங்க 'சில கேள்விகளுக்கு வாழ்க்கையில விடையே கிடையாது'ன்னு தத்துவார்த்தமா சொல்லியிருப்பாங்களோ?? ;-)

யாருங்க அது பின்னால இருந்து 'போடா சோம்பேறி'ன்னு சவுண்ட் குடுக்கறது.. ம்

--
#116

4 comments:

dondu(#11168674346665545885) said...

படத்தைப் பார்த்தால் மண்டையில் என்ன இருக்கிறது என்று கேட்பது போல இல்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

டோண்டுவோட கருத்து :-)))))))))

துளசி

ILA (a) இளா said...

எதுவுமே எழுதாமே எழுதினதா காட்டிகிறவங்க சில பேரு, எழுதியும் எழுதாத மாதிரி இருக்கும் சில பேரு, அப்ப நீங்க ?

Pavals said...

டோண்டு அய்யாவின் நக்கலுக்கும் அதை ஆமோதித்த துளசியக்காவுக்கும் ஒரு எச்சரிக்கை, 'வேணாம்.. அப்புறம் அழுதுருவேன்.. அழுது '

Raj>> வண்டிய ஓட்டனுமே, இப்படித்தான்.. ;-)

ஜிகிடி, நான் அந்த பாட்டை தப்ப ஒண்ணும் சொல்லைங்களே.. 'நச்சு'ன்னு இருந்தது என்னவோ உண்மைதானுங்க..

ila >> 'த்தெர்ரியலையேப்பா'..