Tuesday, August 9, 2005

தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்..

கொஞ்ச நாளைக்கு முன்னால என் சகா ஒருத்தன் ஆன்சைட்'ல இருந்து வரும் போது எனக்கு பாசமா ஒரு PDA வாங்கிட்டு வந்து குடுத்தான், நானும் கொஞ்ச நாள் பந்தாவா, அதை பாக்கெட்டுல வச்சுகிட்டு, அங்கங்க நாலுபேர் இருக்கும் போது எடுத்து எதையாவது, 'சாயங்காலம் சொசைட்டியில போயி பால் பணம் வாங்கனும்' அப்படிங்கிற மாதிரி ரொம்ப முக்கியமான வேலை(!)யெல்லாம் குறிச்சு வச்சுகிட்டு இருந்தேன், அப்புறம் ஒரு நாள் எனக்கே அது கொஞ்சம் ஓவரா இருக்க, தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டேன்.
நேத்து திடீர்ன்னு அதை துழாவ வேண்டிய வேலை வந்திருச்சுங்க, அதை துழாவிகிட்டு இருக்கும் போது இன்னொன்னு கையில சிக்குச்சு, 'தளபதி' பட சிடி.. ஒரு ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது, வாங்கின புதுசுல, அப்போ சென்னையில, என் சிஸ்டத்துல ஒரு 500 ஷோவாது ஓடியிருக்கும் இந்த படம்.. எனக்கு ரொம்ப புடிச்ச படம், ரொம்ப ஸ்டைலான படம். PDAவ துழாவற வேலைய அப்போதைக்கு தள்ளி வச்சுட்டு படம் பார்க்க உக்காந்துட்டேன்..போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு சேரை பின்னாடி தள்ளிவிட்டுட்டு, 'கிட்டி' கிட்ட 'அடிர்றா.. அடிர்றா பாக்கலாம்'ன்னு டக்குன்னு எந்திரிப்பாரே ரஜினி, அந்த சீனை இப்ப பார்க்கும் போதுகூட, இந்த படம் ரிலீஸ் ஆனப்போ, அப்போ நான் நைந்த் படிக்கிறேன், அப்ப சிலிர்த்த மாதிரியே இப்பவும் சும்மா 'ஜிவ்வு'ன்னு இருக்குதுங்க.. ம்ம். அது ரஜினி... இப்போ அதே ரஜினி, சொர்ணா கூட போர்வைய போர்த்திகிட்டு.. சரி வேண்டாம்.. சொன்னா நம்மாளுக சண்டைக்கு வந்திருவாங்க.. படம் வேற நூறு நாள் ஓடிருச்சு.. எதோ நல்லா இருந்தா சரி..

ஆனா, நான் சொல்ல வந்தது அதை பத்தி இல்லைங்க. அப்போ, படம் வந்த முதல் நாள், 1991 தீபாவளி (இல்ல பொங்கலா?) இங்க பொள்ளாச்சி 'நல்லப்பா'வுல, ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள், இன்னொரு பக்கம் கேரளாவுல இருந்து வந்த மம்மூக்கா ரசிகர்ள்ன்னு சும்மா களை கட்டி இருந்துச்சு, (பக்கத்து துரைஸ்'ல நம்மாளு குணா படம்.) படம் ஆரம்பச்சுதல இருந்து ரஜினி, ரஜினி, ரஜினி தான்.. ரஜினி ரசிகர்க சும்மா ரவுண்ட் கட்டி ஆடிட்டிருந்தாங்க.. 'ராக்கம்ம கைய தட்டு'எல்லாம் டீ.டி.எஸ் இல்லாமயே காதுல அதிருன நாள் அது.. பின்னாடி ஒரு சீன் வரும், மமுட்டி கீதா, சார்லி எல்லாரையும் கூட்டிகிட்டு கோயிலுக்கு போவாரு, அப்போ போலீஸ் வந்து அவுங்க ஆளுகளை எல்லாம் அடிச்சு இழுத்துகிட்டு போகும்.. அப்படியே கோவமா கோயில்ல இருந்து மமுட்டி வெளிய ஓடிவருவாரு, வந்து ஒரு சின்ன திட்டுலயிருந்து அப்படியே எகிறி குதிப்பாரு,, குதிக்கும் போது அப்படியே டக்குன்னு காத்துலயே வேட்டிய மடிச்சு கட்டிக்குவாரு, சாமி.. மம்மூக்கா ரசிகர்கள் விட்ட விசில்ல, சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் தியேட்டரே ஆடிபோன சீன் அது. டிபிகல் மம்மூட்டி ஸ்டைல்!!

படம் பார்த்துட்டு வந்து, எங்க வீட்டு மாடிப்படி வளைவுல நானும் என் கூட்டாளி சிவா'னும் ரெண்டு படி மேல இருந்து குதிச்சுகிட்டே லுங்கிய மடிச்சுகட்ட முயற்ச்சி பண்ணினோம், நாலைஞ்சு தடவை ட்ரை பண்ணி அப்புறம் தடுமாறி கைப்பிடி க்ரில்ல முட்டிகிட்டு முட்டியில அடிவாங்கினதுக்கப்புறம் தான், 'மூட்டுன'லுங்கியில அப்படி செய்ய முடியாதுங்கிற வரலாற்று உண்மை எங்களுக்கு விளங்குச்சு, அப்புறம் கொஞ்ச நாளைக்கு, எப்பவெல்லாம் வேட்டி கட்டறமோ, அப்பவெல்லாம் அதை ட்ரை பண்ணிகிட்டே இருந்தோம். அது ஒரு அழகிய 'வேட்டி' காலம் :-)

நேத்து ராத்திரி கண் முழிச்சு ரீவைண்ட் பண்ணி ரீவைண்ட் பண்ணி 2.30 மணி வரைக்கும் படம் பார்த்துட்டு, காலையில 7.30 மணி வரைக்கும் தூங்கிதொலைச்சுட்டேன்.. காலையில எங்கய்யன் கூட ஒரு பக்கம் போக வேண்டியிருதுச்சு, நான் குளிச்சு முடிச்சு வர்றதுகுள்ளார, அவர் வண்டி ஏறி ரெடியா இருந்தாரு, சரின்னு அவசரமா கிளம்புனவன், என்னையும் அறியாம, சிட்டவுட் விட்டு இறங்கும் போது, டக்குன்னு ஒரு ஜம்ப் பண்ணி, அப்படியே வேட்டிய மடிச்சு கட்டினேன்..
கார்ல இருந்து எங்கய்யன் அப்படியே வெறுப்பா ஒரு பார்வை பார்த்தாரு.. 'ம்ஹும்.. கழுதை வயசாகுது..!!'..:-(

எனக்கே கொஞ்சம் வெட்கமா தாங்க இருதுச்சு.. . இருந்தாலும் வேட்டிய கரெக்ட்டா மடிச்சு கட்டுனமில்ல.. சாயங்காலம் சிவா'னுக்கு ஒரு போன் போட்டு சொல்லனும். ;-).. அவன் இப்போ சென்னைக்கும் பெங்களூருக்கும் பறந்து பறந்து எதோ மிஸைல்க்கு ட்ரைவர் எழுதிட்டு இருக்கான் ..


'Life is not filled with great truimph, but with small smiles'ன்னு சும்மாவா சொன்னாங்க..

--
#115

30 comments:

Jayaprakash Sampath said...

அசத்துறியே ராசா......

தகடூர் கோபி(Gopi) said...

ராசா,

நானும் முயற்சி செஞ்சி பாத்தனுங்க.. ஒன்னும் சரியா வரலை..

இருந்தாலும் கூடிய சீக்கிரம் வேட்டிய கரெக்ட்டா மடிச்சு கட்டிருவமில்ல..

சும்மாவா சொன்னாங்க.. முயற்சி திருவினையாக்கும்னு.

dondu(#11168674346665545885) said...

எவ்வளவு வயதானால்தான் என்ன, சில குழந்தைத்தனங்கள் போகுமா என்ன?

ஜெர்மன் எழுத்தாளர் Erich Kaestner எழுதிய Das fliegende Klassenzimmer என்னும் கதையில் ஒரு காட்சி வரும்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் வயலில் நடந்து வரும்போது நடுவில் ஒரு குறுக்குச்சுவர் வரும். சுமார் 3 1/2 அடி உயரம் இருக்கும். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சுவற்றின் மேல் இரு கைகளையும் வைத்து அழுத்தி ஒரு ஜம்ப் செய்து உடலை அந்தரத்தில் ஒரு திருகு திருகி சுவற்றின் அடுத்தப் பக்கம் குதித்து மேலே செல்வார்.

தனக்குள் இவ்வாறு முணுமுணுப்பார்: "Gelernt ist gelernt" (சின்னவயசில் கத்துண்டதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துடுமா என்ன?).

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

புடவையோ சல்வார் கமீசையோ மடிச்சா நல்லாவா இருக்கும்:-)))


ராசா நல்லா எழுதறீரு!!!!

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

முகமூடி said...

//`இந்த படம் ரிலீஸ் ஆனப்போ, அப்போ நான் நைந்த் படிக்கிறேன் //

சைக்கிள் கேப்புல வயசுல ஒரு அஞ்சாறு வருசத்த அபேஸ் பண்ணிட்டியே ராசா...

Unknown said...

நன்றி ஐகாரஸ்.. :-)

கோபி விட்டுறாதீங்க.. முயற்ச்சி பண்ணீகிட்டே இருங்க.. ஆனா பத்திரமா..

வாங்க டோண்டு சார்.. பெர்யவங்க எல்லாம் வந்திருக்கீங்க.. ரொம்ப சந்தோஷம்..

ஆஹா துளசி.. புடவைய படிச்சு கட்டுனா அப்புறம்.. தூள் சொர்ணாக்கா மாதிரியில்ல இருக்கும்.. ;-) வேண்டாம் விட்ருங்க..

முகமூடி அய்யா.. நிஜம்மாலுமே நான் அப்போ நைந்த் தான் படிச்சேன்.. நல்ல வேளை அஞ்சாறு வயசுன்னு சொன்னீங்க.. 15-20 வருஷம்னு சொல்லலை..

rajkumar said...

நச். பிரமாதம்

ஜெகதீஸ்வரன் said...

படிக்கப் படிக்க இனிக்குதய்யா !!!

Anonymous said...

கலக்கி புட்டீங்க ராசா

Anonymous said...

Nallave ezhudhureenga Raasaa

Anonymous said...

nalla ezhudareenga kongu..
thodarndhu ezhudha vaazhthukal..

neenga thalapathi pathi sonnavudane.. enakku nyabagam varadhu.. chennai ashoknagar UDAYAM theatrela.. KAMALODA guna poster erinjadhu.. nyabagathuku varudhu..

Prakash Palani

இராதாகிருஷ்ணன் said...

அசத்துறீங்களே ராசா! உங்க அய்யனுக்குப் படத்தை ஒரு வாட்டிப் போட்டுக் காமீங்க ;-)

Anonymous said...

நன்றாகப் பகிர்ந்து கொண்டீர்கள்.

Unknown said...

படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் அதிக முறை பார்த்தது தளபதியாக தான் இருக்கும். படம் தீபாவளிக்கு தான் ரிலீஸ். தலைவர் படம் குமுதத்தில் பாதி முகம் வரைந்து வந்தது. அதனைப் பார்த்து நானும் அப்படியே வரைந்து கொஞ்ச நாள் பிலிம் விட்டேன்.

பின்னர் தேவர்மகன் ரிலீஸ் ஆனபோது கமலுக்கு மாறிட்டோம், அது வேற விஷயம்.

Anonymous said...

நல்லா இருக்கு ராசா.
இந்த குழந்தைதனம் எத்தனையோ
பெரிய மனிதர்களிடம் கூட இருக்குது.
நல்ல பதிவு.

Anonymous said...

நல்லா இருக்குதுங்க. பாத்து மறுபடியும் காலை உடைச்சுட்டு, அப்புறம் அதுக்கும் ஒரு கதை எழுத போறீங்க.
இன்னொரு பதிவுக்கு idea கொடுத்திட்டேனா???

பாண்டி said...

//தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்..//

title-லயே அசத்துறீங்களே ராசா!!!

ச.சங்கர் said...

//சைக்கிள் கேப்புல வயசுல ஒரு அஞ்சாறு வருசத்த அபேஸ் பண்ணிட்டியே ராசா...

posted by: முகமூடி//

///முகமூடி அய்யா.. நிஜம்மாலுமே நான் அப்போ நைந்த் தான் படிச்சேன்.. நல்ல வேளை அஞ்சாறு வயசுன்னு சொன்னீங்க.. 15-20 வருஷம்னு சொல்லலை.. ///

அது சரிங்க ராசா...

9th எத்தினி வருசம் படிச்சீங்கனு சொல்லலியே.
:-))) அடிக்க வராதீங்க

அன்புடன்...ச.சங்கர்

donotspam said...

http://in.rediff.com/news/2005/jul/27rajeev.htm

Rasaa had a look at this???

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ராசா, நீங்க எழுதறது அழகா, எளிமையா இயல்பா இருக்கு. வாழ்த்துக்கள். 'தளபதி'யப் பாக்கணும்னு நெனச்சு இன்னும் பாக்கவேஏஎ இல்லை. (அது வந்தப்போ ஊர உட்டுப் போயிட்டேன்). அது மாதிரி இன்னொரு படம் நெனச்சு இன்னும் பாக்காம இருக்கறது 'இருவர்' (இதையெல்லாம் உங்ககிட்டச் சொல்லி என்ன ஆகப் போகுது?) :-)

Venkat said...

ராசா - இயல்பான ஓட்டத்துடன் ஒரு நல்ல பதிவு. மறந்துபோன பல விஷயங்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

மூட்டின லுங்கிய தார் பாச்சி கட்டிகிட்டு தேர்ட் ஸ்லிப்ஸ்ல டைவ் அடிச்ச காலம் ஞாபகத்துக்கு வருது.

பத்மா அர்விந்த் said...

ராசா
உங்கள் தமிழ்நடை மிகவும் இனிமையாக இருக்கிறது. எளிமையாகவும். நான் முன்பும் ஒருமுறை பின்னூட்டம் இட்டுஅது காணாமல் போய்விட்டது.

டி ராஜ்/ DRaj said...

அருமையான பதிவு ராசா! அப்புறம், அந்த PDA கிடைச்சுதுங்களா ??

Unknown said...

ராஜ்குமார், ரகு, பரணீ, உமா, பழனிப்ரகாஷ், ராதாகிருஷ்ணன், மூர்த்தி, KVராஜா, கரிகாலன், சுகந்தி, பாண்டி, சங்கர், ஈஸ்வர், செல்வராஜ், வெங்கட், தேந்துளி, Dராஜ்.. ம்ம்..இத்தனை கமெண்ட்டா.. ராசா.. . நடத்துரா.. நடத்து..

நன்றி மக்களே.. __/|\__

KVR தேவர்மகன் கதை தனியா இருக்கு,,, அதுக்கு ஒரு பதிவு போட்டிருவோம். ;-)

சங்கர் :-(.. உண்மைய பேசுனா இந்த உலகம் ஒத்துகிறதே இல்லைப்பா.. ச்சே..

ஈஸ்வர்>> அந்த கட்டுரைல சொல்லியிருக்கிறது பல காலமா எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.. ஆனா ஏனோ செயல் படுத்த பாட்டேங்கிறாங்க.. ஒரு வேளை.. பயபுள்ளைக ஒன்னும்தெரியாதவன், சும்மா மென்வெட்டியோட திரியரவன் எல்லாம் பெரிய ஆளாயிடுவான்னு நினைக்கறாங்களோ என்னவோ, பொறுப்புல இருக்கிறவங்க..

செல்வராஜ் .//(இதையெல்லாம் உங்ககிட்டச் சொல்லி என்ன ஆகப் போகுது?)// அட ஆமாம்,, அது தெரியாமயே நாம் அத்தனை பேரும் இப்படி பதிவுகள்ல புலம்பிட்டு இருக்கம் பாருங்க..

தேன் துளி..>> //நான் முன்பும் ஒருமுறை பின்னூட்டம் இட்டுஅது காணாமல் போய்விட்டது.// அப்படிங்களா?? அப்ப ரெண்டாவது முறை வந்து எழுதறீங்களா.. மிக்க நன்றி..

Dராஜ். //அந்த PDA கிடைச்சுதுங்களா ??// அது இன்னும் கிடைச்சபாடில்லைங்க.. கிடைச்சதும் ஒரு பதிவு எழுதிடுவோம்.. :-)

Anonymous said...

ரொம்ப யதார்த்தமா எழுதுறீங்க.....சிரித்தேன், ரசித்தேன்!!

capriciously_me said...

romba nalla post raasaa...soooper-a irundhudhu :)

awesome movie! "deva en nanban dialogue" en friends innikum use pannuvaanga...kalakkals :D

Anonymous said...

Romba nalla ezhuthu nadai! Enga appa kooda appo appo andha madhiri style ellam kaattuvar (naanga ellam paarkadhappodhan).

வீ. எம் said...

அது எப்படி ராசா உங்களால மட்டும் முடியுது.,,என்னமா கலக்கறீங்க.. அசத்துங்க


வீ எம்

ILA (a) இளா said...

நம்ம புதுசா ஒரு வலை ஆரம்பிச்சு இருகேஙக. ஆதரவு தாரீர்

www.lolluraja.blogspot.com
www.ilamurugu.com

ILA (a) இளா said...

ராசா பதிவுல புடிச்ச ஒரு பதிவு, இந்த வேட்டி கட்டு. பரண் வாழ்க :)