Wednesday, February 1, 2006

மணி என்னங்க ??

smsல வர்ற பல தமாசுக பெரும்பாலும் மனுசனுக்கு எரிச்சல குடுக்கிற மாதிரிதான் இருக்கும்ன்னாலும், சில நேரத்துல அருமையான துணுக்குகளும் தவறிப்போய் வந்துரும். அப்படி நேத்து எனக்கு வந்த தமாசு தாங்க இது. நேத்து இந்த தமாசு வந்ததுலயிருந்து, இதை நினைச்சு நினைச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன். சிக்னல்ல வண்டிய நிறுத்திட்டு நின்னுட்டு இருக்கும் போது, திடீர்ன்னு நான் பாட்டுக்கு அடக்கமாட்டாம சிரிச்சு வைக்க, பக்கத்துல ஸ்கூட்டியில நின்னுட்டிருந்த புள்ளை, என்னவோ எதோன்னு ஒரு நிமிஷம் பயந்து அப்புறம் என்ன நினைச்சுதோ, அப்படி ஒரு முறைப்பு முறைச்சுது. நமக்கு அப்பவும் சிரிப்பு அடங்கலை.. அப்படி என்னடா தமாசு, அதை சொல்லிதொலக்காம, சும்மா கண்டதையும் சொல்லி இம்சைபடுத்தாதன்னு கதறும் அன்பர்களுக்காக.. இதோ அந்த தமாசு..

ஏற்க்கனவே கேள்விபட்ட ஜோக்குன்னாலும் பரவாயில்லை படிச்சதுக்காக ஒரு தடவை சிரிச்சுட்டு போயிடுங்க..





ஆள் 1: மணி என்னங்க ஆச்சு?

ஆள் 2 : ஆறு இருவது.

ஆள் 1: ச்சே, என்ன ஊருங்க இது, ஒருத்தன் ஊருக்கு புதுசா வந்து மணி கேட்டா கூடவா ஏமாத்துவீங்க..?

ஆள் 2: என்னங்க ஆச்சு?

ஆள் 1: காலையில இருந்து இதே கேள்விய எத்தனை பேருகிட்ட கேட்டுட்டேன், எல்லாரும் ஆளுக்கொரு பதில் சொல்றாங்க.. எதை நம்பறதுன்னே தெரியலை..

ஆள் 2: @#^^#@^#@^#@


--#140

4 comments:

மணியன் said...

ஆமாங்க, சிரிப்பு தாங்க முடியல்லே :))

Karthik Jayanth said...

சிரிப்பு வருது நிஜமா :-))

ILA (a) இளா said...

ஹ்ம்ம், இந்த விஷயம் செந்திலுக்கு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா கவுண்டமணிகிட்ட கேட்டு இருப்பார்.

நாமக்கல் சிபி said...

ஒரே தமாஸூ.