Saturday, February 4, 2006

ரயில் பயணங்களில்..

போன வாரம் பாருங்க, பெங்களூர் வரைக்கும் போக ராத்திரி ட்ரெயின்'ல டிக்கெட் கிடைக்காம, பகல்ல நிஜாமுதீன்'ல போக வேண்டியதாபோச்சுங்க. நைட் ட்ரெயின்ல போயிருந்தாலாவது இந்த மாதிரி எதாவது சுவாரசியமா எதாவது நடக்கும் ;-), பகல் வண்டியா போச்சுங்களா, எல்லாரும், வீட்டுல இருந்து கட்டிட்டு வந்த முறுக்கு, ஸ்வீட்டெல்லாம் ப்ரிச்சு வச்சு சாப்பிட்டுட்டு இருப்பாங்க, நம்ம ஆளுகளுக்கு வண்டி ஏறினதும் உடனே சாப்பிட எதாவது வேணும், இல்லாட்டி கஷ்டம். நான் தனியா வேற போயிட்டெஇருந்தேன், அதுனால ஜங்க்ஷன் போறதுக்கு முன்னாடியே எதாவது புஸ்த்தகம் வாங்கிட்டு போகனும்னு முடிசு செஞ்சுட்டு தான் போனேன்.

நான் பொதுவா இங்க்லீஸ் புஸ்தகம் பக்கமெல்லாம் போறதில்லீங்க, சில நேரத்துல யாரவது வீட்டு பக்கம் போகும் போது சும்மா ஒரு பந்தாவுக்கு அவுங்க வச்சிருக்கிற புஸ்தகத்தை வாங்கிட்டு வந்து படிப்பேன் அப்படியே படிச்சாலும், சிட்னி ஷெல்டன் இல்ல கொஞ்சம் ஜெப்ரி, அவ்ளோதாங்க, அதை தாண்டி வேற எதையும் படிக்கிற அளவுக்கு நமக்கு பத்தாது.ஆனா ரொம்ப நாளா நம்ம சகி (சகா'வுக்கு எதிர்பதம்!) ஒருத்தி 'லவ் ஸ்டோரி'ன்னு ஒரு புஸ்தகத்தை பத்தி சொல்லிகிட்டே இருப்பா.. நமக்கு படிக்கலாம்னு ஆசை தான் ஆனா இங்க்லீசுல ரொமான்ஸ் எல்லாம் படிச்சா நமக்கு புரியுமா, எதுக்கு வம்பு, வாங்கி படிச்சா அப்புறம், அதை பத்தி அவ கிட்ட எதும் பேசனும், வீணா வலிய போயி கேவலப்படனுமான்னு அந்த பக்கமே ஒதுங்காம இருந்தேன்.

கோயமுத்தூர் ஜங்ஷன்'ல பின்னாடி கேட்'டுல எங்கய்யன் என்னை எறக்கி விட்டதும், அங்க பக்கத்துல ப்ளாட்பாரத்துல இருந்த புஸ்தக கடை பக்கம் போனேன். போனதும் கண்ணுல பட்டது 'லவ் ஸ்டோரி' புக்குதான். சரி ஏற்கனவே எரிக்ஸ'லோட 'டாக்டர்ஸ்' படிச்சு, அது வேற ரொம்ப புடிச்சு இருந்துச்சுங்க... ஆனா அந்த புஸ்தகம் வாங்கினது ஒரு வேர கதைங்க.. சரி.. அது வேண்டாம் இப்போ.. இதயும் தான் படிச்சு பார்ப்பமேன்னு டக்குன்னு வாங்கிட்டேன். பின்னாடியே வந்த எங்கய்யன், புஸ்தகத்தை கையில வாங்கி பார்த்துட்டு, 'பழைய புக்'ன்னு சொல்லிட்டு அப்படியே என்னை சந்தேகமா ஒரு பார்வை பார்த்தாரு, அதென்னமோ தெரியலைங்க, நான் எதார்த்தமா எதாவது செஞ்சாலும், எங்கய்யன் நம்மள சந்தேகமாவே தான் பார்க்கிறாரு. சரி, அது வேற கதை, இப்போ நான் அந்த புக்க பத்திதான சொல்ல வந்தேன், அதை சொல்லிடறேன்.

"What can you say about a twenty five year old girl who died? That she was beautiful, and brilliant, that she loved Mozart and Bach and the Beatles and me." - இது தாம் நாவலோட முதல் வரி. இதை படிச்சதுமே, நமக்கு ஒரு நம்பிக்கை வந்துருச்சுங்க, வண்டி தர்மபுரி போயி சேரும் போது பாதி புஸ்தகத்தை முடிச்சிட்டேன், (இங்க்லீஸுன்னா நான் கொஞ்சம் மெதுவா தான் படிப்பேன்..) சும்மா சொல்ல கூடாதுங்க, சூப்பரான நாவல். புஸ்தகத்தை படிக்க உக்காந்ததுதான், அங்க இங்க என்ன நடக்குதுன்னு கூட கவனிக்லைங்க, அந்தளவுக்கு அதுலயே மூழ்கிட்டேன்.. அப்புறம் தர்மபுரி'யில வண்டி நிக்கும் போதுதான் கவனிச்சேன், பக்கத்துல சைட் அப்பர்ல ஒரு அழகான புள்ளை, அதுவும் எதோ ஒரு புஸ்தகம் படிச்சுகிட்டு படுத்திருந்துச்சு. நான் அதுக்கு எதுத்தாப்புல மிடில் பெர்த்துல இருக்கேன். அதென்னமோ அதுக்கப்புறம் புஸ்தகத்துல கவனமே போகலைங்க.. பின்னாடி நேரம் கிடைக்கும் போது படிச்சுக்கலாம் வச்சுட்டேன்.

ஆனாலும் அந்த சைட் அப்பர் பெர்த்துல டார்க்ப்ளூ டாப்ஸ்ல இருந்துச்சே அந்த புள்ளை.. ரொம்ப அழகுங்க... ம்ம்.. கோயமுத்துர் தான் போல இருக்கு.. ச்சே.. புஸ்தகத்தை பத்தி சொல்ல வந்துட்டு, எதையோ சொல்லிட்டு இருக்கேன்.. புஸ்தகத்தை முழுசா படிச்சுட்டு அப்புறம் அதை பத்தி மறுபடியும் எழுதறேன்.. புஸ்தகத்தை எந்த இடத்துல விட்டேன்னு தான் ஞாபகம் இல்லை.. நேரம் கிடைச்சாலும் அந்த புஸ்தகத்தை எடுத்தா, ஏனோ தெரியலைங்க.. மனசு ஒரு நிலையாவே இருக்க மாட்டேங்குது.. படிக்கவே முடியலை..அடுத்த தடவை போகும் போதும் நிஜமுதீன்'ல போயி தான் பார்க்கனும்.. ச்சே. படிக்கனும் ;-)

--
#141

8 comments:

Anonymous said...

ராசா.
நான் அடுத்த வாரம் நிஜாமுதீன்ல தான் பெங்களூரு போகப்போரேன்.

கைப்புள்ள said...

முதல் பின்னூட்டத்தைப் பார்த்து செம சிரிப்பு ராசா. நம்ம மக்கள் எப்படி கற்பூரமா இருக்காக!?

சரிங்க! ப்ளூ டாப்ஸ் புள்ளையை இன்னொரு தரம் பார்த்தா என்ன பண்ணறதா இருக்கீக?

Jayaprakash Sampath said...

//வேண்டியதாபோச்சுங்க. நைட் ட்ரெயின்ல போயிருந்தாலாவது இந்த மாதிரி எதாவது சுவாரசியமா எதாவது நடக்கும் ;-), //

ராசா, ரயில்லே நீண்ட தூரப்பயணம்னா அப்படித்தான்.. நான் ஒரு முறை போபால்லேந்து சென்னை வரணும். தமிழ்நாடு எக்ஸ்பிரஸா இல்லே ஜிடியா நினைவில்லை. நடுராத்திரி போபாலுக்கு வரும். வந்ததும், என்னோட கோச்சிலே ஏறி, சீட்டை தேடினேன். சைட் அப்பர். ஒருத்தர் நல்லா இழுத்து போத்து படுத்து தூங்கிகிட்டு இருந்தார். எழுப்பினேன். திரு திருன்னு முழிச்சுட்டு, அப்பறம், அது என்னோட இருக்கைன்னு உணர்ந்து கீழே இறங்கினார். அந்தப் போர்வைக்குள்ளேந்து ஒரு பெண்ணும் கீழே குதிச்சு இறங்கினாள். ( அது வரை நான் உள்ளே ரெண்டு பேர் இருக்காங்கன்னே நினைக்கலை..).. இதல்லாம் சகஜம்..

// போனதும் கண்ணுல பட்டது 'லவ் ஸ்டோரி' புக்குதான்.//

லவ்ஸ்டோரி படிச்சீங்களோ, எனக்கு கூட எரிஷ் சீகல்னா பிடிக்கும். மெலோடிராமாவா இருந்தாலும், பள்ளி பருவத்திலே படிச்சதுனால, ரொம்ப புடிக்கும். இன்னொரு உபரித்தகவல் ஒண்ணு சொல்றேன். இந்தக் கதை, தமிழ்ல படமாக வந்தது. ரவிச்சந்திரன் நாயகனாக நடிக்க, அவர் மனைவி ஷீலா, நாயகியாக நடித்து , தயாரிக்கவும் செய்தார். படம் பேர் மஞ்சள் குங்குமம்.

G.Ragavan said...

லவ் ஸ்டோரி படிக்கப் போயி லவ் ஸ்டோரி நடக்கத் தெரிஞ்சதே.....நடக்கட்டும் நடக்கட்டும்

Pavals said...

ப்ளூ டாப்ஸ்" ராணி >> ரொம்ப சந்ஷோஷம் :-)

கைப்புள்ள >> அட ஏங்க நீங்க வேற.. எதோ பார்த்தமா.. போனாமங்கிறதோட சரிங்க..

ஐகாரஸ் >> ஜகஜம்'ங்கிறீங்க.. சரி.. ஏத்துக்கோவோம்..

ராகவன் >> அதென்னமோங்க.. நமக்கு எப்பவுமே இப்படி வண்டி கிளம்பிபோனதுக்கப்புறம் தான்.. விட்டுட்டமேன்னு தோனும்.. நம்ம ராசி அப்படி.. ;-)

Anonymous said...

raasa onga blog pathi ava vikatanla therinjukitten.enna oru frnda eethunga raasa. nallave irukku nga blog vaazga valamudan neraiya eluthunga neraiya sinthinga okva.erick segaloda doctors nnu oru kathai irukku raasa romba jore kattayam padikanumappu neenga .happy blogging. veena

Pavals said...

வீனா>>
நம்ம பதிவை பத்தி அவள்விகடன்'ல போட்டிருக்காங்களா..??

யாரை கேட்டு போட்டாங்க.. ம்ம்.. சரி பரவாயில்லை விடுங்க.. எந்த வார புஸ்தகத்துலன்னு சொன்னீங்கன்னா.. வாங்கி பார்த்துக்குவேன்..
(அப்படி புஸ்தகத்துல எடுத்து போடுற அளவுக்கு என்னத்தை எழுதிதொலைச்சேன்..?)

அப்புறம். டாக்டர்ஸ் புக்.. படிச்சிருக்கேன்னு தான் எழுதியிருக்கேன்.. கட்டாயம் படிக்கனும்னு சொல்லியிருக்கீங்களே.. அதான் புரியல..

நாமக்கல் சிபி said...

நல்ல அனுபவம்தான் ராஸா,

அந்த புக் படிச்சி முடிச்சிட்டீங்களா?