Monday, July 2, 2007
பலிகுடுத்தா என்ன??
மிச்ச மீதி இருந்த ஆணியெல்லாம் புடுங்கிதள்ளிட்டு, புடுங்கிட்டதா பேரு பண்ணிட்டு, ராவோட ராவா கிடைச்ச வண்டியில ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா நின்னு நின்னு ஊருக்கு போயி, வழியில வர்ற சொந்தபந்தங்களையெல்லாம் பார்த்து ஒரு டீத்தண்ணி குடிச்சுட்டு, தோட்டத்து பக்கம் ஒரு சுத்து சுத்தி வந்து மழைக்காலத்து மராமத்து வேலைக்கு ஆள் சொல்லிவிட்டு, கிடைச்ச நேரத்துல நம்ம அம்மிணி வூட்டுக்கு வேற போயி நலம் விசாரிச்சு, குதூகலப்படுத்தி, பக்கத்துலயே நடக்கிற இணையநண்பர்கள் சந்திப்புக்கு கூட போகமுடியாம அடிச்சு தாக்குற மழைக்கு நடுவால பொறுப்பா எல்லா வேலையும் முடிச்சு, கடைசி சீட்டு கிடைச்சாலும் பரவாயில்லை நாளைக்கு காலையில கூலிக்கு போயே ஆகனும்னு ராத்திரி சொகுசுபேருந்துல ஏறி, நல்லவேளை இப்ப எல்லாம் இந்த தெருமுக்குல வாங்கின இந்த இழவெடுத்த டிவிடி'ய போட்டு இவனுக தூக்கத்த கெடுக்கறதில்லைன்னு நினைச்சுகிட்டே கொஞ்சம் சந்தோஷமா, தூக்கி தூக்கி போடுற கடைசியில உக்காந்தா, ஆப்பீஸ்ல குடுத்த ஏசர்'ல கசகசன்னு பாதிபடம், அதுவும் ஒரு கோணத்துல கேவலமா தெரியற இணையத்துல திருட்டுதனமா இறக்குன 'போக்கிரி'ய போட்டு உக்காந்து சீன் குடுத்தானே.. முன்சீட்டுல இருந்த ஒரு 'மாப்ள' அப்ப தோணுச்சுங்க.. இவனுகள எல்லாம் பலிகுடுத்தா என்ன??
--
#231
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்லவேளை ராத்திரி பஸ்ஸுல வந்தீங்க.இதே பகல்ல வந்திருந்தீங்க,அந்தப் படுபாவிப் பசங்க செல்ஃபோன்ல போடற சாஃப்ட்வெர் மொக்கை தாங்க முடியாம ஜன்னல் வழியா எட்டிக் குதிச்சிருபீங்க...
அப்புறம் ஊர்ல செம்ம மழையாமே?
இப்படி பண்ணுவியா பண்ணுவியான்னு ஊஞ்சமாறை எடுத்து பொடனி பொடனியா போடனும், ராஸ்கோலு.
hahaha... atha yean kekurenga raasa.. ivanavathu paravai illa movie ooda vittan.. sila peru kodutha kasuku mela kovuranga..hotel nu koda pakkama ;-)
--
Jagan
மெட்ராஸ்ல இருக்க ஒரு கம்பெனில போன வருசம் எல்லாருக்கும் ஒரே கலர்ல ஐ-பாட் கொடுத்தாங்க....பஸ் ஸ்டாப்ல ரயில்வே ஸ்டேஷன்ல, மதுரை டிரெயின்ல எங்க போனாலும் அவனுங்களை தனியா கண்டுபுடிச்சுடலாம :))
இவனுங்க அக்கப்போர் தாங்கலடா நாராயணா :))
'தமிழ்' போக்கிரியெல்லாம் ஒரு படம்ன்னு அத கேமரா ப்ரிண்ட்ல வேற பாக்குறாங்களே... ஹய்யோ...ஹைய்யோ..
Post a Comment