Tuesday, July 13, 2004

கிருஷ்னபரமாத்மா - கம்யூனிசத்தின் தந்தை

மார்க்ஸ், லெனின், மாவோ, மாத்ரி கம்யூனிச தலைவர்களுக்கெல்லம் நம்ம கிருஷ்னபரமாத்மா முன்னோடின்னு நம்ம 'வாழும்கலை' ஷ்ரி ஷ்ரி ரவிஷங்கர் ஹிந்துஸ்த்தான்டைம்ஸ்'ல் Lord Krishna, the father of communism'னு ஒரு கட்டுரை எழுதியிருக்காருங்க(எங்க ஊர் பக்கம் இப்போ இவரோட வாழும் கலைப்பயிற்ச்சி, சத்சன்ங். எல்லாம் ரொம்ப பிரசித்தம்).
அவரு என்ன சொல்றாருன்னா..
"எல்லாரும் எல்லாம் சமமா கிடைக்கனும், தப்பு செய்யறவங்களுக்கு கடுமையான தண்டனை குடுக்கனும், இது மூலமா ஒரு சுயநலமில்லாத, மக்களை எந்த வகையிலும் ஒடுக்காத சமூகம் உருகவாகனும்ங்கிறது தான் கம்யூனிசத்தோட அடிப்படை. 5230 வருஷங்களுக்கு முன்னாடியே கிருஷ்னர்'ங்கிற அந்த வரலாற்று(/இதிகாசத்து) கதாபாத்திரத்தோட வாழ்க்கையும், அவரோட கருத்துகளை சொல்ற பகவத்கீதை'யும் அதே கருத்துகளை தான் வலியுறுத்துது, அதுனால கிருஷ்னர் தான் உண்மையில 'கம்யூனிசத்தின் தந்தை' அப்படீங்கிறார். கிருஷ்னர் தான் உண்மையில பல சமூக மாற்றங்களையும், வழிபாட்டு முறைகளில் பல புரட்ச்சிகளையும் கொண்டு வந்தார்ங்கிறார்." (அதென்னமோ இந்திரனுக்கு செஞ்சிட்டு இருந்த பலிகளை மாத்தி, கோவர்தன பூஜை'ங்கிறத கொண்டு வந்தார்ன்னு சொல்றார்-- இந்த மேட்டரைப்பத்தியெல்லம் எனக்கு ஒரு மண்ணும் தெரியாதுங்க!!).
இன்னும் இந்த மாதிரி நிறைய சொல்லியிருக்காருங்க..நடுவுல இன்னொன்னும் சொல்றாரு, "அதாவது மேலை நாடுகள்ல தான் மதநம்பிக்கைக்கு எதிரா விஞ்ஞானிக யாராவது எதாவது சொன்னா அவங்கள புடிச்சு கொடுமைபடுத்தறதெல்லம்.. நம்ம ஊருல (அதாவது இந்து மதத்தில).. அப்படியெல்லம் இல்லை..அந்த மாதிரி யாராவது சொன்னா அவங்கள உற்சாகப்படுதிருகாங்க.". அப்படிங்கிறார்.
அப்படியே சன்னமா சும்மா கம்யூனிசம் பேசறவங்களை ஒரு எத்து எத்தராரு..'இங்கே பல பேரு கம்யூனிசம் பேசிட்டு முதலாலித்துவ வாழ்க்கை வாழறாங்க அப்படிங்கிறார்.. (ச்சே.. ஏன்தான்..இந்த நேரத்தில புத்தக வெளியீட்டு விழாவில நம்ம தமிழினத்தலைவர் கருணாநிதி 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்'னு சொன்னது நினைப்புக்கு வருதோ!!)
இதெல்லாம் விட முடிவா அவரு ஒண்ணு சொல்லியிருக்கார் பாருங்க..'கேரளாவில குருவாயூருக்கு போற கம்யுனிஸ்ட்டுகளும், பெங்கால்ல துர்கா பூஜையில கலந்துக்கிற கம்யுனிஸ்ட்டுகளும் இனிமேல் அதுக்காக சங்கடப்படவேண்டாம்,, ஏன்னா அதுவும் கம்யூனிசம்தான்'ங்கிறார்
நமக்கு வழக்கம் போல ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது..

2 comments:

Anonymous said...

"... அந்த மாதிரி யாராவது சொன்னா அவங்கள உற்சாகப்படுதிருகாங்க."
கொடுமைங்க... கொடுமை! ஹிந்து மதம் சமணருக்கு அன்பை வாரிவழங்கியிருக்காங்க! மாற்றுக் கருத்துக்கே இந்த கதின்னா மறுத்தவங்களுக்கு என்ன கதி?

-dyno

ஜெ. ராம்கி said...

கேரளத்து, வங்கத்து கம்யூனிஸ்ட்டுங்க எல்லாம் வேறு டைப்புங்க. இல்லாட்டா, நம்மூரு திராவிடக் கட்சிங்க மாதிரி ஸ்ட்ராங்கா இருக்க முடியுமா?