Tuesday, August 10, 2004

நான் கொஞ்சம் வசதியான ஆளுங்க...!!!

'சும்மா வெட்டியாவே எழுதிட்டிருக்ககியே மாப்ள'ன்னு இங்க நம்ம தோழர்கள் ரொம்ப சடைஞ்சுக்கிறதால, இந்த தடவை கொஞ்சம் தத்துவத்தை கொட்டலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். அதுக்காக ஒரு கதை சொல்ல போறேன்....
(இதையெல்லம் தொகுத்து பிற்காலத்தில 'ராசாவின் தத்துவமுத்துக்கள்'ன்னு ஒரு புஸ்தகம் போடலாம்னு ரோசனை..!!)

கதை:
ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் (நம்ம கவுண்டமனி சொல்லுவாரே 'கடலைஉடைக்கிற மெஷின் வெச்சிருக்கிறவனெல்லாம் தொழிலதிபர்ங்கிறாண்டா'ன்னு அந்த மாதிரி இல்லை.. நிஜம்மாலுமே பெர்ர்ரிய தொழிலதிபர்) செல்வசெழிப்புல வளர்ந்த அவரோட செல்லப்பையனை, ஏழைகளோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க, (எங்க ஊரு மாதிரி..!) ஒரு கிராமத்துக்கு அனுப்பி வச்சிருக்காரு. அந்த பையனும் கிராமத்துக்கு போய் ஒரு ரெண்டு நாள் தங்கியிருந்து சுத்திபார்த்துட்டு வந்திருக்கான்.(என்னை மாதிரி அப்பா பேச்சு கேட்டு நடக்குற சமத்து பையன் போல. :-)...)
சுத்திபார்த்துட்டு வந்த பையன்கிட்ட அவுங்க அப்பா "என்ன தம்பி எல்லாம் சுத்தி பாத்தியா? எப்படி இருந்தது?"ன்னு கேக்க.. பையனும் "ரொம்ப நல்ல இருந்ததுங்ப்பா"ன்னு சொல்லியிருக்கான்.
"ரெண்டு நாள் தங்கியிருந்து சுத்தி பார்த்து என்ன கண்ணு தெரிஞ்சுகிட்ட?"ன்னு அவரும் ஆர்வாமா கேட்டிருக்காரு..
அதுக்கு அந்த பையன் " நம்ம வூட்டுல ஒரே ஒரு நாய் வச்சிருக்கோம், ஆனா அங்கேயெல்லாம் வீதி பூரா ஏகப்பட்டா நாய்க சுத்துது (அதுல ஒன்னு தான் நம்ம நாமக்கல் ராஜாவை கவுத்திருக்குமோ??), நம்ம வூட்டுல தோட்டத்துக்கு நடுவால சின்னதா ஒரு குளம் வெட்டி வெச்சிருக்கோம், ஆனா அவுங்க வீதி பூராவும் இருக்கிற குளங்களுக்கு கரையே இல்லை, நம்ம வீட்டு திண்னை மாதிரி இல்லாம அவுங்க வீட்டுகள்ல ரோட்டு வரைக்கும் திண்னை இருக்குது, நம்ம வீட்டுக்கெல்லாம் நம்ம தனியா கரண்ட் கனக்க்ஷன் வாங்கி பணம் கட்டுறோம் ஆனா அவுங்களுக்கு எல்லாம் அரசாங்கமே நம்ம தோட்டத்துல இருக்கிற மாதிரி மஞ்சலைட் போட்டு குடுத்திருக்கு, உங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லனும்ப்பா, நாம எவ்வளவு ஏழைங்கறதை நீங்க எனக்கு புரிய வச்சுட்டீங்க"ன்னு சொன்னான், இதை கேட்ட நம்ம தொழிலதிபர் வாயடைச்சு போய் நின்னுட்டாராம்.

இதைத்தான் பெரியவங்க.."உங்களோட வசதிங்கிறது உங்ககிட்ட இருக்கிற பொருளோட பணமதிப்புல இல்லை, பணத்துக்காக நீங்க எதை விற்க தயாரா இல்லையோ அதுல தான் இருக்கு"ன்னு சொல்றாங்க.
(எங்கயோ படிச்ச மாதிரி இருக்கா??.. அடப்போங்க ஷிவ்கேரா'வே அடுத்தவங்க எழுத்தை தடவி (!) எழுதறாராமா .. நான் எழுதக்கூடாதா??)
மேல சொன்ன சங்கதி பிரகாரம் பார்த்தா... நிஜம்மாலுமே நான் ரொம்ப வசதியான ஆளுங்க..!!!

ஒரு குறிப்பு:
நெல்லுக்கு பாயற தண்ணி புல்லுக்கும் பாயும்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி வலைவலம் பகுதியில இந்த பதிவு பத்தி நம்ம சந்திரவதனாக்கா ஒரு வார்த்தை எழுதினாலும் எழுதினாங்க, சும்மா 'ஈ'யாடிட்டுருந்த நம்ம பதிவோட visitor count, திடீர்ன்னு எகிரிடுச்சு.... எல்லாம் நேரம்..ம்.ம்,
(இந்த நேரத்தில அவார்ட் வாங்கின பெரியவங்க சொல்ற மாதிரி.. "இப்பத்தான் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கிடைச்சதை தக்க வச்சுகனுமே, எம்மேல ரொம்ப பொறுப்பு ஏறிட்டதா நினைக்கிறே"ன்னெல்லம் கொஞ்சம் பிலில் காட்டலாம்னு எனக்கும் ஆசை தான்.. ஆனா எங்க கல் எடுத்து வீசி மண்டைய பொளந்திருவீங்களோங்கிற பயத்துல 'கப்சிப்')....

4 comments:

பரி (Pari) said...

:-)))
ஏனுங்க, சிறுவாணித் தண்ணிக் கொறைவில்லாம வருதுங்களா?

Pavals said...

எதோ இந்த பாட்டம் பரவாயில்லைங்க....
7-8 வருஷம் கழிச்சு, எல்லம் டேம்'லயும் தண்ணி நிரம்பியிருக்குது.. இதுவும் பத்தாது, இதெல்லம் பூமி நனைக்கத்தான் ஆகும், இன்னும் ஒரு 5-6 மழையாவது பேய்ஞ்சா நல்லா இருக்குமுங்க.. (பரி'க்கு நம்ம ஊருபக்கமா??)

சத்யராஜ்குமார் said...

ராசா,

இங்கே வர்றப்போவெல்லாம் ஏதோ பழநிக்கவுண்டன்புதூர் இல்லே சித்தூர் சமத்தூர் பக்கம் ஒரு நடை போய்ட்டு வந்த மாதிரியே இருக்கு.

நிறைய எழுதுங்க.

- சத்யராஜ்குமார்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//இந்த நேரத்தில அவார்ட் வாங்கின பெரியவங்க சொல்ற மாதிரி.. "இப்பத்தான் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கிடைச்சதை தக்க வச்சுகனுமே, எம்மேல ரொம்ப பொறுப்பு ஏறிட்டதா நினைக்கிறே"ன்னெல்லம் கொஞ்சம் பிலில் காட்டலாம்னு எனக்கும் ஆசை தான்.. ஆனா எங்க கல் எடுத்து வீசி மண்டைய பொளந்திருவீங்களோங்கிற பயத்துல 'கப்சிப்')....//

:)))