எல்லாரும் சென்னைய பத்துல
அவுங்க-
அவுங்களோட நினைவுகள சொல்லிட்டு இருக்காங்க.. நம்ம பங்குக்கும்.. :) நம்ம நாக்குல உக்காந்து வயத்துல அடங்கி மனசுல இன்னும் நீங்கா இடங்களும் புடிச்சிருக்கிற சில இடங்களும் அது சம்பந்தபட்ட சில நினைவுகளையும் பத்தின குறுப்பு
--
ஒரு ப்ளேட் சாம்பார் இட்லிக்கு கிளிமூக்கு ஜக்கு நிறையா நெய் மணக்கற சாம்பார் குடுப்பாங்களான்னு ஆச்சிரியம் குடுத்த
ரத்னா கபே.
ஸ்டார் ஹோட்டல் போயி சாப்பிட்டாலும் குடுக்காத சந்தோஷத்தை குடுத்த '
பாண்டி பஜார் ப்ரில்லியண்ட் டுட்டோரியல் முக்கு' ஆம்னிவேன் நைட்ஸ்டால் பொடி தோசை.
ரோகினி இன்டர்நேஷனல் பக்கத்துல
'பாபண்ணன் தள்ளு வண்டி'யில அர்த்த ராத்திரியிலயும் ருசியா கிடைக்கிற செட்தோசையும் சுக்காவருவலும்.
நாலு சுத்துக்கு அப்புறம் நட்புக்காக வீம்பா டீநகர்ல இருந்து வண்டி எடுத்துட்டு போயி
'வேலுமிலிட்டிரி'யில வாங்கிட்டு வந்த சிங்கிள் ப்ளேட் 'தலைஃப்ரை'
எந்த நேரம் பசிச்சாலும் சட்டுன்னு கிளம்பி போயி புல் கட்டு கட்டுன
'நடேசன்வீதி கனகதுர்கா மெஸ்'.முதன் முதலா ஸ்க்ரூட்ரைவர்'ன்னா ஒரு திரவ சமாச்சாரம்னு தெளிவு குடுத்த ஜீ.என். செட்டி ரோடு
'பார்த்தன்'.ஸ்வீட் லைம்'ன்னு சொன்னா அது சாத்துக்குடி ஜூஸ்ன்னு விளக்கம் கிடைச்ச
'கோடம்பாக்கம் நயாகரா'.குஷ்பூ இட்லியும் அஞ்சு வகை சட்னியும் கூட அருமையான சைட்டிஷ்ன்னு சொல்லிகுடுத்த
'அம்மா மெஸ்' மொட்டை மாடி.
கீழ இத்தன ஃபிகருக டான்ஸ் ஆடும் போது இவனுக மேல போயி வெட்டியா பாட்டிலோட நிக்கறானுகளேன்னு முத தடவை போனப்போ முட்டாள்தனமா யோசிச்ச
'பைக்ஸ் அன்ட் பேரல்ஸ்'.'பங்கு ரெண்டு காபி சாப்பிட்டதுக்கு 120 ரூ வாங்கிட்டானுகடா'ன்னு மூணு நாலு புலம்ப வச்ச
'நுங்கம்பாக்கம் பரீஸ்த்தா'.சைனீஸ் புட்'ன்னா நம்மூர்ல சாப்பிட்ட நூடுல்ஸ் ப்ரைட்ரைஸ் மட்டுமில்லன்னு தெரிய வந்த
கத்தீட்ரல் ரோடு 'சைனா டவுன்'.இதென்னடா நம்மூர் தேங்காய் சாதம் மாதிரி இருக்கு, இது தான் மெக்ஸிக்கனா?ன்னு லொள்ளு பேசுன
கோபாலபுரம் 'டான் பெபெ'.கடல்காத்தும் மீன்கொத்தியும் அருமையான அழுத்தநிவாரணின்னு அலுவலக சகாக்களோட சேர்ந்து கண்டுபுடிச்ச
'எம்.ஜி.எம் குவாலிட்டி இன்'.சீஸ் செர்ரி பைனாப்பிள்'ங்கிற அமிர்த்தத்த முதல் தடவையா கண்ணுல காட்டுன
'கெளதம்மெனார்'.ரெண்டு புல் மீல்ஸ் பார்சல் வாங்கின கூடவே நண்டு க்ரேவி இனாம கிடைக்கும்னு நாங்க படையெடுத்த '
அஞ்சப்பர் செட்டிநாடு'.ரெண்டு போண்டா ஒரு டீ சாப்பிட போனாலும் கூட பர்ஸ் வெயிட்டா இருக்கனும்னு கத்துகுடுத்த
வடபழனி சரவணபவன்.மட்டன் பிரியாணியும், போட்டி'யும் சாப்பிட்டதுக்கு அப்புறம் லெமன் டீ சாப்பிட்டா அருமையா இருக்கும்னு கண்டு புடிச்ச
ஆற்காடு ரோடு 'ஹாலிவுட்'.ஆம்பூர் பிரியாணி'யில அப்படி என்னடா விசேஷம்னு கேட்டவன, ஆம்பூர் ரசிகனாவே மாத்துன
நந்தம்பாக்கம் 'பிரியாணிஸ்டால்'.வெறும் நூத்தம்பது ரூவா செலவுல 'தோழிமை'யோட
(நன்றி:செல்வராஜ்) மூணு மணி நேரம் இருக்கற ரகசியத்தை சொல்லிகுடுத்த
'குயின்க்கிஸ்'.சாம்பார் வடை மட்டுமே தெரிஞ்சவனுக்கு ரசவடை'ன்னு ஒரு அப்பட்டைசர அறிமுகப்படுத்தின
'உஸ்மான் ரோடு அருணா'.ஷூ போடாட்ட்டி உள்ள விடமாட்டானான்னு, கிண்டி ப்ளாட்பாரத்துல 300 ரூபாக்கு நாலு ஜோடி ஷூ வாங்கிபோட்டுகிட்டு உள்ள போயி, அப்புறம் வெளிய வரும் போது நக்கலா, அங்க வாசல்லயே அதை விட்டெறிஞ்சுட்டு வந்த
'லீ மெரிடியன் ஃப்ளேம்ஸ்'இங்க விக்கிற ப்ரெட்டுக்கு இல்ல மாப்ள விலை, இங்கன உக்காந்து வேடிக்கை பார்க்கத்தான் அது'ன்னு சந்தோஷமா எதிர் பஸ்ஸ்டாப்பை பார்த்துகிட்டே செலவு செஞ்ச
'ஹாட்ப்ரட்ஸ்'ஃப்ரைடு ஐஸ்க்ரீம்னு ஒரு அதிசியத்த உணர்ந்த '
ரெஸிடென்சி ஆஹார்'அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கனும்னு அஞ்சு நாள் முன்னாடியே டேபிள் புக் பண்ணி, ஆசபட்டு போயி, ஒரே ராத்திரியில ஒரு மாச சம்பளத்தை காலி செஞ்ச
'லெதர்லவுஞ்ச்'.--
ம்.ம்ம்.. இப்படயே நிறையா இருக்குதுங்க.. ஆனா இப்போ பயங்கிறமா பசியெடுக்க ஆரம்பிச்சிருச்சு.. அதுனால இதோட விட்டுட்டு போறேன்..
சாப்பாட்டுக்கு போற நேரத்துல இப்படி ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சிருக்க கூடாது.. இனி இந்த வெள்ளம் போட்ட சாம்பார் உள்ளயே இறங்காதே :(
--
#201